இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad மூலம் பரிமாணங்களை அளவிடுதல்

அருகிலுள்ள பொருள்களையும் மேற்பரப்புகளையும் அளவிட உங்கள் iPad கேமராவைப் பயன்படுத்தலாம். அளவீட்டின் தொடக்க மற்றும் இறுதி புள்ளிகளை நீங்களே நேரடியாக அமைக்கலாம், iPad செவ்வக வடிவ பொருட்களின் பரிமாணங்களை தானாகக் கண்டறியலாம்.

“அளவீடு” செயலில் ஒரு பெட்டிக்கான பரிமாணங்களின் அளவீட்டைக் காட்டும் திரை. பெட்டியின் பரப்பளவு பரிமாணங்களை அளவிடுவதன் மூலம் கணக்கிடப்படும்.

சரியான அளவுகள் கிடைக்க, iPadஇல் இருந்து 0.5 முதல் 3 மீட்டர் (2 முதல் 10 அடி) வரை தள்ளி இருக்கும் திட வடிவ பொருட்களை அளவிட “அளவீடு” செயலியைப் பயன்படுத்துங்கள். (அளவீடுகள் தோராயமாக இருக்கும்.)

குறிப்பு: கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மிரரிங்கை ஆன் செய்யாமல், “அளவீடு” செயலியை நீங்கள் வெளிப்புற டிஸ்ப்ளேக்களில் பயன்படுத்தலாம். உங்கள் iPad சாதனத்தில் நீங்கள் பார்க்கும் பொருளின் படம் வெளிப்புற டிஸ்ப்ளேவில் பெரிய அளவில் தோன்றும்.

அளவிடுவதைத் தொடங்குதல்

  1. உங்கள் iPad சாதனத்தின் யுட்டிலிடிகள் கோப்புறையில் உள்ள “அளவீடு” செயலிக்குச் செல்லவும்.

  2. அருகிலுள்ள பொருட்களை மெதுவாக ஸ்கேன் செய்ய iPad கேமராவைப் பயன்படுத்தவும்.

  3. நீங்கள் அளவிட விரும்பும் பொருள் iPad திரையில் தோன்றும் வகையில் சாதனத்தைப் பிடிக்கவும்.

குறிப்பு: உங்கள் தனியுரிமைக்காக, அளவிடுவதற்கு நீங்கள் “அளவீடு” செயலியைப் பயன்படுத்தும்போது, உங்கள் கேமரா பயன்பாட்டில் இருப்பதைக் குறிக்க உங்கள் திரையின் மேல்பகுதியில் பச்சைப் புள்ளி தோன்றும்.

செவ்வகத்தைத் தானாக அளவிடுதல்

  1. உங்கள் iPad சாதனத்தின் யுட்டிலிடிகள் கோப்புறையில் உள்ள “அளவீடு” செயலிக்குச் செல்லவும்.

  2. அருகிலுள்ள பொருட்களை மெதுவாக ஸ்கேன் செய்ய iPad கேமராவைப் பயன்படுத்தவும்.

  3. iPad செவ்வக வடிவ பொருளின் விளிம்புகளை கண்டறியும்போது, அந்தப் பொருளைச் சுற்றி பாக்ஸ் வடிவ ஃப்ரேம் உருவாக்கப்படும். பரிமாணங்களைப் பார்க்க பெட்டியைத் தட்டவும்.

  4. உங்கள் அளவீட்டைப் புகைப்படம் எடுக்க, "படமெடு” பட்டன்-ஐத் தட்டவும்.

நேரடியாக அளவிட, அளவீட்டை எடுத்தல்

  1. உங்கள் iPad சாதனத்தின் யுட்டிலிடிகள் கோப்புறையில் உள்ள “அளவீடு” செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் அளவிடத் தொடங்க விரும்பும் புள்ளியுடன் திரையின் மையத்தில் உள்ள புள்ளியை நேர்படுத்தவும். பிறகு “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. அளவிடப்பட்ட நீளத்தைப் பார்க்க, iPadஐ மெதுவாகப் பொருளின் இறுதி வரை நகர்த்தி “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. உங்கள் அளவீட்டைப் புகைப்படம் எடுக்க, "படமெடு” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. வேறொன்றை அளவிடவும் அல்லது மீண்டும் தொடங்குவதற்கு “அழி” என்பதைத் தட்டவும்.

    ஆதரிக்கப்படும் மாடல்களில் மீண்டும் தொடங்க, "இதுவரையான பதிவுகள்" பட்டன்-ஐத் தட்டி, “அனைத்தையும் அழி” என்பதைத் தட்டவும்.

விளிம்பு வழிகாட்டிகளைப் பயன்படுத்துதல்

ஆதரிக்கப்படும் மாடல்களில் தானாகவே காட்டப்படும் “வழிகாட்டிக் கோடுகளின்” மூலம், ஃபர்னிச்சர், கவுன்டர்டாப் மற்றும் பிற பொருட்களின் உயரத்தையும் நேர்கோட்டு விளிம்புகளையும் எளிதாக அளவிடலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தின் யுட்டிலிடிகள் கோப்புறையில் உள்ள “அளவீடு” செயலிக்குச் செல்லவும்.

  2. பொருளின் நேர்கோட்டு விளிம்புடன் சாதனத் திரையின் நடுவில் காட்டப்படும் புள்ளி சீராக அமையும் வகையில் “வழிகாட்டி” காட்டப்படும் வரை சாதனத்தைப் பிடிக்கவும்.

  3. நீங்கள் அளவிடத் தொடங்க வேண்டிய இடத்தில் “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. அளவிடப்பட்ட நீளத்தைப் பார்க்க, அளவிடுவதற்கான ஆதாரக் கோடு முழுவதும் மெதுவாக நகர்த்தி, இறுதிப் புள்ளியில் “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. உங்கள் அளவீட்டைப் புகைப்படம் எடுக்க, "படமெடு” பட்டன்-ஐத் தட்டவும்.

ரூலர் காட்சியைப் பயன்படுத்துதல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், ரூலர் காட்சி மூலம் கூடுதல் விவரங்களுடன் உங்கள் அளவீடுகளைப் பார்க்கலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தின் யுட்டிலிடிகள் கோப்புறையில் உள்ள “அளவீடு” செயலிக்குச் செல்லவும்.

  2. இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை அளவிட்ட பிறகு, நீளத்தின் சிறு அலகுகளுடன் அளவீட்டுக் கோடு ஒரு ரூலராக மாறும் வரை iPadஐக் கோட்டுக்கு நெருக்கமாகக் கொண்டுவரவும்.

  3. உங்கள் அளவீட்டைப் புகைப்படம் எடுக்க, "படமெடு” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.