இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மெசேஜஸ் மூலம் திட்டப்பணிகளில் கூட்டுப்பணியாற்றுதல்

மெசேஜஸ் செயலியில் மெசேஜ் அனுப்புவதன் மூலம் திட்டப்பணியில் கூட்டுப்பணியாற்ற மற்றவர்களை நீங்கள் அழைக்கலாம். மேலும் உரையாடலில் உள்ள அனைவரும் ஆவணத்தில், விரிதாளில் அல்லது பகிரப்பட்ட பிற கோப்பில் சேர்க்கப்படுவார்கள்.

குறிப்பு: மெசேஜஸ் மூலம் ஒரு புராஜெக்ட்டில் கூட்டுப்பணியாற்றத் தொடங்க, நீங்களும் உங்கள் பெறுநர்களும் iOS 16, iPadOS 16, macOS 13, watchOS 9, visionOS 1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் iMessageஐப் பயன்படுத்த வேண்டும். மேலும் iCloud Drive போன்ற பிறரால் அணுகக்கூடிய இடத்தில் உள்ளடக்கத்தை நீங்கள் முதலில் சேமிக்க வேண்டும். iPad செயலிகளைப் பொறுத்தவரை, அவற்றின் கூட்டுப்பணி அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் iCloudஐ ஆன் செய்ய வேண்டியிருக்கும். iCloud பயனர் வழிகாட்டியில் உள்ள உங்கள் சாதனங்கள் அனைத்திலும் iCloudஐ அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

கூட்டுப்பணியாற்ற பிறரை அழைத்தல்

ஒரு திட்டப்பணியில் கூட்டுப்பணியாற்ற மற்றொரு செயலியில் இருந்து நபர்களை நீங்கள் அழைத்து, மெசேஜஸில் உங்கள் உள்ளடக்கத்தைப் பற்றிக் கலந்துரையாடலாம். குறிப்புகள், Freeform, நினைவூட்டல்கள், Safari, Keynote, Numbers, Pages மற்றும் பல செயலிகளுக்கான கூட்டுப்பணி அம்சங்களை iCloud அமைப்புகளில் முதலில் ஆன் செய்து, iCloud Drive போன்ற பிறரால் அணுகக்கூடிய இடத்தில் உள்ளடக்கத்தைச் சேமிக்கும் வரை அந்தச் செயலிகளிலிருந்து கோப்புகளை நீங்கள் பகிரலாம்.

கூட்டுப்பணியில் ஈடுபட ஒருவரை அழைப்பதற்கான செயல்முறையானது செயலியைப் பொறுத்தது. ஆதரிக்கப்படும் செயலியில் கூட்டுப்பணியைத் தொடங்குவதற்கான ஒரு வழி:

  1. நீங்கள் பகிர விரும்பும் கோப்பைத் தேர்ந்தெடுத்து “பகிர்” பட்டன் ஐகானைத் தட்டவும் அல்லது “கூட்டுப்பணியாற்றுக” என்பதைத் தட்டவும்.

  2. “கூட்டுப்பணியாற்றுக” (“நகலை அனுப்பு” என்பதற்குப் பதிலாக) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும், பின்னர் நீங்கள் கூட்டுப்பணியாற்ற விரும்பும் குழு அல்லது தனிநபர் மீது தட்டவும். பட்டியலில் அந்தக் குழுவையோ, நபரையோ நீங்கள் பார்க்கவில்லை என்றால், மெசேஜஸ் செயலி ஐகான்-ஐத் தட்டவும்.

    பரிந்துரைக்கப்பட்ட ஐகான்கள், செயலில் உள்ள FaceTime அழைப்புகளுடனோ, சமீபத்திய மெசேஜஸ் உரையாடல்களில் பங்கேற்ற குழுக்களுடனோ தனிநபர்களுடனோ தொடர்புடையதாக இருக்கலாம்.

  3. அனுப்பத் தயாராக உள்ள அழைப்புடன் மெசேஜ்களின் உரையாடல் திறக்கும். குறிப்பைச் சேர்த்து (விருப்பத்திற்குரியது), “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

“குறிப்புகள்” செயலியில் சரிபார்ப்புப் பட்டியலில் கூட்டுப்பணியாற்றுவதற்கான அழைப்பு காட்டப்பட்டுள்ளது. அதில் “கூட்டுப்பணியாற்றுக” என்ற பகிர்வு விருப்பமும், அணுகல் மற்றும் அனுமதி அமைப்பு “நீங்கள் அழைக்கும் நபர்கள் மட்டுமே திருத்த முடியும்” என அமைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டுள்ளன. ஒரு குழு உட்பட நான்கு சாத்தியமான பெறுநர்களுக்குக் கீழே ஒரு வரிசை உருவாக்கப்படும். குறிப்பைப் பகிர்வதற்கான பல்வேறு வழிகளை அடுத்த வரிசை வழங்கும்: AirDrop, மெசேஜஸ், Mail, நினைவூட்டல்கள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. கடைசி வரிசையில் குறிப்பை நகலெடுக்க, எக்ஸ்போர்ட் செய்ய மற்றும் சேமிக்க பட்டன்கள் காட்டப்பட்டுள்ளன.

நீங்கள் மெசேஜஸில் பங்கேற்பாளர்களை அழைத்த பிறகு, பிற செயலியில் உள்ள திட்டப்பணியில் வேலைசெய்துவிட்டு, அந்தச் செயலியில் உள்ள “கூட்டுப்பணியாற்றுக” பட்டனைத் தட்டுவதன் மூலம் மெசேஜஸ் உரையாடலுக்குத் திரும்பலாம்.

யாராவது கோப்பைத் திருத்தும்போது, மெசேஜஸ் திரெட்டின் மேலே புதுப்பிப்புகளைப் பார்ப்பீர்கள். பகிரப்பட்ட திட்டப்பணிக்கு மீண்டும் சென்று, மாற்றங்களைப் பார்க்க, புதுப்பிப்பு மீது தட்டவும்.

குறிப்பு: உங்கள் பங்கேற்பாளர்கள் பகிரப்பட்ட ஐட்டத்துடன் தொடர்புகொள்வதற்கு முன் அல்லது புதுப்பிப்புகளைப் பார்ப்பதிற்கு முன் உங்கள் அழைப்பை ஏற்க வேண்டும் அல்லது பகிரப்பட்ட ஐட்டத்துடன் சேர வேண்டும்.

உதவிக்குறிப்பு: கோப்புகள், மெசேஜஸ் ஆகிய செயலிகள் ஸ்ப்ளிட் ஸ்க்ரீனில் திறந்திருக்கும்போது, புதிய மெசேஜ் சாளரத்திற்குக் கோப்பை இழுப்பதன் மூலமும், அனுப்பும் முன் பாப்-அப் மெனுவில் “கூட்டுப்பணியற்றுக” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் கூட்டுப்பணியாற்றுவதைத் தொடங்கலாம்.

மெசேஜஸில் உள்ள திட்டப்பணியில் கூட்டுப்பணியாற்றுதல்

உங்கள் திட்டப்பணியை நீங்கள் பகிர்ந்த பிறகு, யாராவது அதில் திருத்தம் செய்யும்போதெல்லாம் மெசேஜஸ் உரையாடலின் மேலே செயல்பாட்டுப் புதுப்பிப்புகளைப் பார்ப்பீர்கள்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் கூட்டுப்பணியாற்றத் தொடங்கிய திட்டப்பணிக்கான அழைப்பைக் கொண்ட உரையாடலுக்குச் சென்று, பின்வரும் ஒன்றைச் செய்து திட்டத்திற்கு மீண்டும் செல்லவும்:

    • உங்கள் உரையாடலில் உள்ள கோப்பைத் தட்டி அதைத் திறக்கவும்.

    • உரையாடலின் மேலே ஒரு புதுப்பிப்பை நீங்கள் பார்த்தால், “காட்டு” என்பதைத் தட்டவும்.

    • திரையின் மேலே உள்ள பங்கேற்பாளர் அல்லது குழு ஐகானைத் தட்டி, “கூட்டுப்பணி” என்பதற்கு ஸ்க்ரால் செய்து, பகிரப்பட்ட திட்டப்பணியைத் தட்டவும்.

நீங்கள் திட்டப்பணியில் ஏதேனும் மாற்றங்களையோ திருத்தங்களையோ செய்யும்போது, உரையாடலில் உள்ள உங்கள் பங்கேற்பாளர்கள் அதுகுறித்த புதுப்பிப்புகளைப் பெறுவார்கள்.

குறிப்பு: குழு உரையாடலில் ஒரு புதிய நபரை நீங்கள் சேர்த்தால், நீங்கள் கூட்டுப்பணியாற்றும் திட்டப்பணிகளுக்கான அணுகலை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் சமீபத்தில் குழு உரையாடலில் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களை கூட்டுப்பணியில் சேர்க்க திரையின் மேலே உள்ள அறிவிப்பு மீது நீங்கள் தட்டலாம். அல்லது கூட்டுப்பணியாற்ற அவர்களை அழைக்கலாம்.

கூட்டுப்பணியையும் குழுவையும் நிர்வகித்தல்

மெசேஜஸ் உரையாடலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் ஒரு திட்டப்பணியைப் பகிர்ந்தால், நீங்கள் பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நிர்வகிக்க விரும்பும் உரையாடலுக்குச் சென்று, குழுவின் உரையாடல் பற்றிய விவரங்களைத் திறக்க உரையாடலின் மேலே உள்ள குழு ஐகானைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய பங்கேற்பாளர்களைச் சேர்த்தல்: “சேர்” என்பதைத் தட்டி, தொடர்புகளைச் சேர்க்கவும். (“சேர்” என்பதைப் பார்க்க நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

      நீங்கள் மற்றொரு நபருடன் கூட்டுப்பணி செய்யத் தொடங்கினால், கூட்டுப்பணியில் நபர்களைச் சேர்க்க புதிய உரையாடலைத் தொடங்க வேண்டும்.

      குறிப்பு: புதிய பங்கேற்பாளர்கள் இணைவதற்கு முன்பு, உரையாடலில் பகிரப்பட்ட கோப்புகளில் அவர்களைச் சேர்க்க வேண்டும். பங்கேற்பாளர்களைச் சேர்க்கும்போது, உரையாடலின் மேலே ஓர் அறிவிப்பு தோன்றும். நீங்கள் புதிதாகப் பங்கேற்பாளர்களைச் சேர்க்கக்கூடிய, முன்பு பகிரப்பட்ட கோப்புகளை மறுஆய்வு செய்ய அறிவிப்பில் உள்ள “காட்டு” என்பதைத் தட்டவும்.

    • உரையாடலில் இருந்து பங்கேற்பாளரை அகற்றுதல்: அவரது ஐகானைத் தொட்டுப் பிடித்து, “குழுவிலிருந்து அகற்று” என்பதைத் தட்டவும்.

      முக்கியம்: கூட்டுப்பணியாற்றல் நடைபெறும் செயலிகள் வழக்கமாகத் திட்டப்பணிக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன. பார்வையிடுதல் அல்லது திருத்துதல் சிறப்புரிமைகளை முழுவதுமாக அகற்ற, செயலியிலேயே பங்கேற்பாளர் அணுகலைச் சரிபார்க்கவும்.

மெசேஜஸ் கூட்டுப்பணியில் உள்ள குழுவும், கோப்பில் கூட்டுப்பணியாற்றும் குழுவும் பொருந்தாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, மெசேஜஸ் செல்லியில் இல்லாத நபர்களையும் கோப்பில் கூட்டுப்பணியாற்ற நீங்கள் அழைக்கலாம். அல்லது மெசேஜஸில் இரண்டு வெவ்வேறு குழுக்களை நீங்கள் வைத்திருக்கலாம், ஒவ்வொன்றும் அதற்குரிய கூட்டுப்பணி உரையாடலுடன் இருக்கலாம்.

நீங்கள் முன்பு மற்றவர்களுடன் பகிர்ந்த ஆவணத்தில் ஒருவரைச் சேர்க்கும்போது, ஏற்கெனவே உள்ள உரையாடலில் அவர்களைச் சேர்க்க வேண்டுமா அல்லது உரையாடல்களைத் தனித்தனியாக வைத்திருக்க வேண்டுமா என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். உரையாடல்களில் சேர்க்கப்பட்ட நபர்களால் உரையாடலில் இணைவதற்கு முன்பு அனுப்பப்பட்ட மெசேஜ்களைப் படிக்க முடியாது.

மெசேஜஸில் உள்ள திட்டப்பணியில் கூட்டுப்பணியாற்றலை நிறுத்துதல்

கூட்டுப்பணியாற்றல் நடைபெறும் செயலிகள் வழக்கமாகத் திட்டப்பணிக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் Pages செயலியில் உள்ள ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றுகிறீர்கள் என்றால், மெசேஜஸ் அமைப்புகளை விட Pages அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், வேறு எந்த மெசேஜைப் போலவும் உரையாடலிலிருந்து அழைப்பு அனுப்பியதைச் செயல்தவிர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

முக்கியம்: நீங்கள் திரெட்டில் இருந்து ஓர் அழைப்பை நீக்கும்போது, அந்த உரையாடலானது கூட்டுப்பணியுடன் தொடர்புப்படுத்தப்படாது, ஆனால் அது பங்கேற்பாளர்களைக் கோப்பிலிருந்து அகற்றாது. பார்வையிடுதல் அல்லது திருத்துதல் சிறப்புரிமைகளை முழுவதுமாக அகற்ற, செயலியில் பங்கேற்பாளர் அணுகலைச் சரிபார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.