iPadஇல் மெசேஜஸ் செயலியை அமைத்தல்

மெசேஜஸ் செயலியில், நீங்கள் இரண்டு வெவ்வேறு வழிகளில் மெசேஜ்களை அனுப்பலாம்:

  • iMessageஐப் பயன்படுத்தும் மற்றவர்களுடன் iMessageஐப் பயன்படுத்துதல். உங்கள் iMessage வார்த்தைகள் நீல நிற பபுள்களில் காட்டப்படும்.

  • உங்கள் iPhoneஇல் இருந்து ஃபார்வேர்டு செய்யப்பட்ட SMS, MMS மற்றும் RCS மெசேஜ்களுடன். SMS, MMS மற்றும் RCS மெசேஜ்கள் பச்சை நிற பபுள்களில் காட்டப்படும். iPhone பயனர் கையேட்டில், SMS/MMS/RCS மெசேஜிங்கிற்கு வேறு சாதனங்களைத் தேர்வுசெய்தல் என்பதைப் பார்க்கவும். (குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்குநர்களாலும், சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே RCS மெசேஜ்கள் ஆதரிக்கப்படுகின்றன.)

மேலும் தகவலுக்கு, iMessage, RCS மற்றும் SMS/MMSக்கு இடையேயான வேறுபாடு என்ன? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும் மேலும் iOS மற்றும் iPadOSஇல் அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையதளம் என்பதைப் பார்க்கவும்.

iMessageஐ ஆன் செய்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “மெசேஜஸ்” என்பதைத் தட்டவும்.

  3. iMessageஐ ஆன் செய்யவும்.

  4. iMessageஇல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் உங்கள் ஃபோன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் தேர்ந்தெடுக்க, “அனுப்புதல் & பெறுதல்” என்பதைத் தட்டி, “பின்வருவனவற்றில் இருந்து iMessageகளைப் பெறலாம் பதிலளிக்கலாம்” என்பதற்குக் கீழே விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

iMessage குறித்து மேலும் அறிக.

மெசேஜஸ் அமைப்புகள் பேனலில் iMessage ஆன் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் Apple சாதனங்கள் அனைத்திலும் மெசேஜ்களை ஒத்திசைத்தல்

“iCloudஇல் மெசேஜஸ்” அம்சத்தை ஆன் செய்தால், iPadஇல் நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மெசேஜ்கள் iCloudஇல் சேமிக்கப்படும். மற்றொரு சாதனத்திலும் நீங்கள் அதே Apple கணக்கில் உள்நுழைந்து “iCloudஇல் மெசேஜஸ்” அம்சத்தை ஆன் செய்தால், உங்கள் உரையாடல்கள் அங்கும் காட்டப்படும். நீங்கள் புதிய சாதனத்தை அமைத்தாலும், இதுவரையான மெசேஜ்கள் அனைத்துமே அந்தச் சாதனங்கள் அனைத்திலும் தக்கவைக்கப்பட்டிருக்கும். இதில் SMS, MMS, RCS அல்லது iMessage மூலம் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெசேஜ்கள் அடங்கும்.

  1. iPad ஆன் செய்யப்பட்டு Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதையும், ஒவ்வொரு சாதனத்திலும் நீங்கள் அதே Apple கணக்கில் உள்நுழைந்திருப்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.

  2. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  3. உங்கள் பெயரைத் தட்டி iCloud என்பதைத் தட்டி மெசேஜஸ் என்பதைத் தட்டவும்.

    மெசேஜஸ் காட்டப்படவில்லை என்றால், சேமிக்கப்பட்ட iCloud பிரிவில் “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

  4. “இந்த iPadஇல் பயன்படுத்தவும்” என்பதை ஆன் செய்யவும் (ஏற்கெனவே ஆன் செய்திருக்கவில்லை என்றால்).

உங்களிடம் iPhone இருந்தால், SMS, MMS அல்லது RCS மெசேஜை அனுப்பும்போது அல்லது பெறும்போது அதை உங்கள் iPad சாதனத்திலும் காட்டும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். iPhone பயனர் வழிகாட்டியில், SMS, MMS மற்றும் RCS மெசேஜிங்கிற்கு வேறு சாதனங்களைத் தேர்வுசெய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

நீங்கள் “iCloudஇல் மெசேஜஸ்” அம்சத்தை ஆன் செய்த பிறகு iPadஇல் நீக்கப்படும் மெசேஜ்கள் அல்லது இணைப்புகள் அனைத்துமே, “iCloudஇல் மெசேஜஸ்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் பிற Apple சாதனங்களிலிருந்தும் (iOS 11.4, iPadOS 13, macOS 10.13.5, watchOS 1, visionOS 1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு) நீக்கப்படும். iCloud பயனர் வழிகாட்டியில் உள்ள உங்கள் சாதனங்கள் அனைத்திலும் மெசேஜஸுக்கு iCloudஐ அமைத்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

குறிப்பு: “iCloudஇல் மெசேஜஸ்” அம்சம் iCloud சேமிப்பகத்தைப் பயன்படுத்தும். உங்கள் Apple கணக்கில் உள்நுழைதல் மற்றும் அதை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் பகிர்தல்

மெசேஜஸில் உங்கள் பெயரையும் புகைப்படத்தையும்* மற்றவர்களுடன் பகிரலாம். மெசேஜை புதிதாக ஒருவருக்கு நீங்கள் அனுப்பும்போதோ அவரிடம் இருந்து பெறும்போதோ அதைப் பகிரலாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

மெசேஜஸ் செயலியில் ஓர் உரையாடல் காட்டப்பட்டுள்ளது. எதிர்தரப்பில் உரையாடுபவருடன் பயனரின் பெயரையும் புகைப்படத்தையும் பகிர வேண்டுமா என்று கேட்கும் அறிவிப்பு மேலே காட்டப்பட்டுள்ளது.
  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உரையாடல் பட்டியலின் மேல்பகுதியில், “திருத்து” என்பதைத் தட்டி, “பெயரையும் புகைப்படத்தையும் அமைத்திடு” என்பதைத் தட்டவும்.

    • உரையாடல் பட்டியலின் மேல்பகுதி வரை ஸ்வைப் செய்து, “பெயர் & புகைப்படத்தைப் பகிருங்கள்” என்பதைத் தட்டவும்.

  3. உங்களை மற்றவர்கள் எப்படி அடையாளம் காண விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்து, கீழே ஸ்க்ரால் செய்து, “பெயர் & புகைப்படத்தைப் பகிர்தல்” என்பதை ஆன் செய்யவும்.

  4. “தானாகப் பகிர்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • தொடர்புகள் மட்டும்: சேமிக்கப்பட்ட தொடர்புகளில் உள்ளவர்கள், உங்களுடன் தொடர்பு கொள்ளும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தைப் பெறுவார்கள்.

    • எப்போதும் கேள்: ஒவ்வொரு தொடர்புடனும் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்வது உங்கள் முடிவு.

  5. உங்கள் மாற்றங்களைச் சேமிக்க, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

இந்த அமைப்புகளை அமைத்த பிறகு அவற்றை மாற்ற, “திருத்து” என்பதைத் தட்டி, “பெயர் & புகைப்படம்” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: Apple அல்லாத சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நீங்கள் மெசேஜ் அனுப்பும்போது உங்கள் பெயரும் புகைப்படமும் எதிர்பார்த்தபடி காட்டப்படாமல் போகலாம்.

*வட்டாரத்தைப் பொறுத்து கிடைக்கும்தன்மை மாறுபடும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.