இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஐப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட சைகைகளைக் கற்றுக்கொள்ளுதல்

அனைத்து iPad மாடல்களிலும் முகப்புத் திரைக்குச் செல்வதற்கும், சமீபத்திய செயலிகளுக்கு இடையில் மாறுவதற்கும், கட்டுப்பாடுகளை அணுகுவதற்கும் மற்றும் பலவற்றைச் செய்வதற்கும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சைகைகளைப் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் சில சைகைகள் வித்தியாசமாகச் செய்ய வேண்டும்.

சைகை

விளக்கம்

iPadஇல் கீழிருந்து மேலே ஸ்வைப் செய்வதைக் குறிக்கும் அம்புக்குறியுடன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

முகப்புத் திரைக்குச் செல்லுதல். கீழ் விளிம்பில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து முகப்புத் திரைக்கு எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். iPadஇல் செயலியைத் திறத்தல் என்பதைப் பார்க்கவும்.

iPadஇன் மேல் வலது மூலையில் இருந்து கீழே ஸ்வைப் செய்வதைக் குறிக்கும் அம்புக்குறியுடன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை விரைவாக அணுகுதல். கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க மேல் வலது மூலையில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்; கூடுதல் விருப்பங்களைப் பார்க்க ஒரு கட்டுப்பாட்டைத் தொட்டுப் பிடிக்கவும். கட்டுப்பாடுகளைச் சேர்க்க அல்லது அகற்ற, அமைப்புகள்  > கட்டுப்பாட்டு மையம் என்பதற்குச் செல்லவும். iPadஇல் கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பிரத்தியேகமாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடு திரையின் கீழ்ப்பகுதியின் மையத்தில் தொடங்கி, திரையின் நடு மையத்தில் ஒரு புள்ளியில் முடிவடைகிறது, இது “இழுத்து இடைநிறுத்துதல்" சைகையைக் குறிக்கிறது.

Exposéஐத் திறக்கவும். கீழ் விளிம்பில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து திரையின் மையத்தில் இடைநிறுத்திவிட்டு உங்கள் விரலை எடுக்கவும். திறந்துள்ள செயலிகளை உலாவ, வலது பக்கம் ஸ்வைப் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தட்டவும். iPadஇல் செயலிகளுக்கு இடையே மாறுதல் என்பதைப் பார்க்கவும்.

iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது. திரையின் கீழ் விளிம்பில் இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்வதைக் குறிக்கும் இருபுற அம்புக்குறி.

திறந்துள்ள செயலிகளுக்கு இடையில் மாறுதல். திறந்திருக்கும் செயலிகளுக்கு இடையில் விரைவாக மாற திரையின் கீழ் விளிம்பில் இட வலமாக ஸ்வைப் செய்யவும். (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் சிறிது வளைவாக ஸ்வைப் செய்யவும்.) iPadஇல் செயலிகளுக்கு இடையே மாறுதல் என்பதைப் பார்க்கவும்.

ஒரு கோடு திரையின் கீழ்ப்பகுதியின் மையத்தில் தொடங்கி, கீழ்ப்பகுதியில் இருந்து ஒரு விரல் அகலத்தில் உள்ள புள்ளியில் முடிவடைகிறது, இது “இழுத்து இடைநிறுத்துதல்” சைகையைக் குறிக்கிறது.

செயலிக்குள் Dockஐத் திறத்தல். Dockஐ வெளிப்படுத்த திரையின் கீழ் விளிம்பிலிருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து இடைநிறுத்தவும். மற்றொரு செயலியை விரைவாகத் திறக்க, Dockஇல் அந்தச் செயலியைத் தட்டவும். Dockஇல் இருந்து ஒரு செயலியைத் திறத்தல் என்பதைப் பார்க்கவும்.

மேல் பட்டனை சுட்டிக்காட்டும் அம்புக்குறியுடன் iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

Siriஐப் பயன்படுத்துதல். “Siri” அல்லது “Hey Siri” எனச் சொல்லவும் அல்லது “மேல்” பட்டனை அழுத்திப் பிடித்தவாறு கேள்வி கேட்கவும் அல்லது கோரிக்கை விடுக்கவும். (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் முகப்பு பட்டனை அழுத்திப் பிடித்துக் கோரிக்கை விடுக்கவும்.) Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

மேல் பட்டனை மூன்று முறை கிளிக் செய்வதைக் குறிக்கும் வகையில் மூன்று அம்புக்குறிகளுடன் iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

அணுகல்தன்மை சுருக்கவழியைப் பயன்படுத்துதல். மேல் பட்டனை மூன்று முறை கிளிக் செய்யவும். (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் முகப்பு பட்டனை மூன்று முறை கிளிக் செய்யவும்.) iPadஇல் அணுகல்தன்மை அம்சங்களை விரைவாக ஆன்/ஆஃப் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

மேல் பட்டனையும் வலதுபுறத்தில் மேல்பக்கமாக உள்ள ஒலியளவை அதிகரிக்கும் பட்டனையும் சுட்டிக்காட்டும் அம்புக்குறிகளுடன் iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட் எடுத்தல். மேல் பட்டனையும் ஏதேனும் ஒரு ஒலியளவு பட்டனையும் ஒரே நேரத்தில் அழுத்தி விரைவாக விடுவிக்கவும். (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் மேல் பட்டனையும் முகப்பு பட்டனையையும் ஒரே நேரத்தில் அழுத்தி விரைவாக விடுவிக்கவும்.) iPadஇல் ஸ்கிரீன்ஷாட் எடுத்தல் என்பதைப் பார்க்கவும்.

மேல் பட்டனையும் வலதுபுறத்தில் மேல்பக்கமாக உள்ள ஒலியளவு பட்டனையும் சுட்டிக்காட்டும் அம்புக்குறிகளுடன் iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

ஆஃப் செய்தல். ஸ்லைடர்கள் காட்டப்படும் வரை மேல் பட்டனையும் ஏதேனும் ஒரு ஒலியளவு பட்டனையும் ஒரே நேரத்தில் அழுத்திப் பிடித்து, பவர் ஆஃப் செய்ய மேல் ஸ்லைடரை இழுக்கவும். (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல் ஸ்லைடர்கள் காட்டப்படும் வரை மேல் பட்டனை அழுத்தி பிடிக்கவும்.) இல்லையெனில் அமைப்புகள்  > பொது அமைப்புகள் > ஷட் டவுன் என்பதற்குச் செல்லவும். iPadஐ ஆஃப் செய்தல் (முகப்பு பட்டன் உள்ள மாடல்கள்) என்பதைப் பார்க்கவும்.

மேல் பட்டனையும் வலதுபுறத்தில் மேல்பக்கமாக உள்ள ஒலியளவை அதிகரிக்கும் குறைக்கும் பட்டன்களையும் சுட்டிக்காட்டும் அம்புக்குறிகளுடன் iPadஇன் விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது.

கட்டாய மீண்டும் தொடங்குதல். மேல் பட்டனுக்கு அருகில் உள்ள ஒலியளவு பட்டனை அழுத்தி விரைவாக விடுவிக்கவும், மற்றொரு ஒலியளவு பட்டனை அழுத்தி விரைவாக விடுவிக்கவும், Apple லோகோ காட்டப்படும் வரை மேல் பட்டனை அழுத்திப் பிடித்திருக்கவும். iPad mini (6ஆம் தலைமுறை), iPad mini (A17 Pro) ஆகியவற்றில் ஒலியளவு பட்டன்கள் இடதுபுறத்தில் மேல்பக்கமாக உள்ளன. iPadஐக் கட்டாய மறுதொடக்கம் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Magic Trackpad அல்லது Magic Mouseஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் டிராக்பேடு அல்லது மவுஸில் பயன்படுத்துவதற்கான சைகைகளுக்கு iPadக்கான டிராக்பேடு சைகைகளைப் பயன்படுத்துதல் அல்லது iPadக்கான மவுஸ் செயல்கள் மற்றும் சைகைகள் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.