இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இருப்பிடத்தின் வாரியாகப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்தல்

“ஃபோட்டோஸ்” செயலி உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் அவற்றின் தொகுப்புகளை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கவும், அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கவும், மேப்பில் புகைப்படங்களின் தொகுப்புகளைப் பார்க்கவும் மேப் காட்சியைப் பயன்படுத்தலாம்.

மேப்பில் உங்கள் புகைப்பட லைப்ரரியைப் பார்த்தல்

இருப்பிடத்தின் அடிப்படையில் மேப்பில் உங்கள் புகைப்பட லைப்ரரியைப் பார்க்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “லைப்ரரி” என்பதைத் தட்டி, “வரிசைப்படுத்து மற்றும் ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “மேப்பைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    உட்பொதிக்கப்பட்ட இருப்பிடத் தகவல்களை (GPS தரவு) கொண்ட படங்களும் வீடியோக்களும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

    உதவிக்குறிப்பு: பெரிதாக்கி மற்றும் சிறிதாக்கிப் பார்க்க, மேப் மீது பின்ச் செய்யவும் அல்லது மேலும் இருப்பிடங்களைப் பார்க்க, இழுக்கவும்.

  3. ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்க, புகைப்படத்தின் சிறுபடத்தைத் தட்டவும்.

புகைப்படம் அல்லது வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதைப் பார்த்தல்

புகைப்படம் அல்லது வீடியோவைப் பார்க்கும்போது, அது எங்கே எடுக்கப்பட்டது என்ற இருப்பிடத்தையும் பார்க்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு புகைப்படத்தைத் திறந்து, மேலே ஸ்வைப் செய்து, “தகவல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. மேலும் விவரங்களைப் பார்க்க மேப் அல்லது முகவரி இணைப்பைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: இந்த இடத்திலிருந்து மேலும் புகைப்படங்களைப் பார்க்க, “அருகிலுள்ள புகைப்படங்களைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்ட இடம் அல்லது முகவரியைச் சேர்க்க அல்லது மாற்ற, தேதி, நேரம் அல்லது இருப்பிடத்தை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

மேப்பில் சேகரிப்பைப் பார்த்தல்

இருப்பிடத்தின் அடிப்படையில் மேப்பில் ஒரு சேகரிப்பின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, பயணம், சமீபத்திய நாள் போன்ற சேகரிப்புகளில் ஒன்றைத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “மேப்பைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: மேப்பைப் பெரிதாக்கி மற்றும் சிறிதாக்கிப் பார்க்க, அதை பின்ச் செய்யவும் அல்லது அந்தப் பகுதியில் எடுத்த கூடுதல் புகைப்படங்களைப் பார்க்க “அருகிலுள்ள புகைப்படங்களைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  4. மேப்பை மூட, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.