இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Apple TV செயலியில் பார்க்கத் தொடங்குதல் மற்றும் பிளேபேக்கைக் கட்டுப்படுத்துதல்

Apple TV செயலியில், நீங்கள் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் பலவற்றை ஸ்ட்ரீம் செய்யலாம். திரைப்படங்களையும் எபிசோடுகளையும் அல்லது டிவி நிகழ்ச்சியின் முழு சீசனையும் நீங்கள் பதிவிறக்கலாம்.

Apple TV மற்றும் Apple TV சேனல்களில் உள்ள வீடியோக்கள் Apple TV செயலியில் பிளே செய்யப்படுகின்றன. பிற வழங்குநர்களின் வீடியோக்கள் அவர்களின் வீடியோ செயலியில் பிளே செய்யப்படுகின்றன. நீங்கள் பார்ப்பதை பிளே செய்ய அல்லது இடைநிறுத்த, பின்னோக்கிச் செல்ல அல்லது முன்செல்ல, மேலும் பலவற்றைச் செய்ய பிளேபேக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தவும்.

SharePlayஐப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் பார்க்கும்போது, FaceTime அழைப்பில் உள்ள அனைவராலும் பிளேபேக் கட்டுப்பாடுகள் பகிரப்படும். Apple TV செயலியில் SharePlayஐப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிய, FaceTime அழைப்பில் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கவும், கேட்கவும், பிளே செய்யவும் SharePlayஐப் பயன்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

டிவி நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தை பிளே செய்தல்

முகப்புத் தாவல், “பார்ப்பதைத் தொடர்க” வரிசைக்கு மேலே, மையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள Apple Originalஐக் காட்டுகிறது. திரையின் மேற்புறம் இடமிருந்து வலமாக, முகப்புப் பக்கம், Apple TV, MLS, ஸ்டோர், சமீபத்தில் வாங்கியவை, தேடல் தாவல்கள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
  1. உங்கள் iPadஇல் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • முன்னிலைப்படுத்தப்படுபவற்றைத் தேடிப் பார்க்க திரையின் மேலே இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்த பிறகு “பிளே” பட்டனை (இருந்தால்) தட்டவும்.

    • நீங்கள் விட்ட இடத்தில் இருந்து உடனடியாகப் பார்க்க, முகப்பைத் தட்டி பார்ப்பதைத் தொடர்க வரிசையில் உள்ள ஒன்றைத் தட்டவும்.

    • மேலும் வரிசைகளைப் பார்க்க கீழே ஸ்க்ரால் செய்து, நீங்கள் பார்க்க விரும்புவதைத் தட்டவும். அந்த ஐட்டத்திற்கான பக்கம் திறக்கப்படும்போது, பிளே பட்டனை (இருந்தால்) தட்டவும் அல்லது நீங்கள் பார்க்க விரும்பும் குறிப்பிட்ட எபிசோடு அல்லது டிரெய்லரைத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: ஒரு வகையின் கீழ் உள்ள அனைத்து ஐட்டங்களையும் பார்க்க லது ஒரு தொகுப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க, வரிசையின் தலைப்பைத் தட்டவும்.

உள்ளடக்கத்தைப் பதிவிறக்குதல்

Apple TV செயலியில், திரைப்படங்களையும் ஒரு டிவி நிகழ்ச்சியின் எபிசோடுகளையும் நீங்கள் பதிவிறக்கலாம். டிவி நிகழ்ச்சியின் முழு சீசனையும் நீங்கள் பதிவிறக்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு ஐட்டத்தின் விவரங்களைப் பார்க்க அதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும் (சில தலைப்புகளுக்கு சில விருப்பங்கள் கிடைக்காது):

    • திரைப்படங்களைப் பதிவிறக்க: மேல் வலது மூலையில் உள்ள “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • ஒரு டிவி நிகழ்ச்சியின் எபிசோடைப் பதிவிறக்க: மேல் வலது மூலையில் உள்ள “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டி, சீசனைத் தட்டவும், பிறகு நீங்கள் பதிவிறக்க விரும்பும் எபிசோடை அடுத்துள்ள “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • டிவி நிகழ்ச்சியின் முழு சீசனையும் பதிவிறக்க: மேல் வலது மூலையில் உள்ள “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டி, சீசனைத் தட்டவும், பிறகு எபிசோடுகளின் பட்டியலுக்கு மேலே உள்ள சீசன் பட்டனைத் தட்டவும்.

பதிவிறக்கப்பட்டதை உங்கள் லைப்ரரியில் கண்டறியலாம் மற்றும் iPad இணையத்துடன் இணைக்கப்படாவிட்டாலும் அதைப் பார்க்கலாம்.

பிளேபேக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்

பிளேபேக் செய்யும் போது, கட்டுப்பாடுகளைக் காட்ட திரையைத் தட்டவும்.

ஒரு டிவி நிகழ்ச்சி பிளே செய்யப்படும்போது கட்டுப்பாடுகள் காட்டப்படுகின்றன. மூடுக, பிக்சர்-இன்-பிக்சர், AirPlay மற்றும் பகிர் பட்டன்கள் மேலே இடதுபக்கத்தில் உள்ளன. வால்யூம் ஸ்லைடர் மேலே வலதுபக்கத்தில் உள்ளது. 10 விநாடிகள் பின்செல், இடைநிறுத்து, 10 விநாடிகள் முன்னோக்கிச் செல் ஆகிய பட்டன்கள் மையத்தில் உள்ளன. கீழ் மையத்தின் குறுக்காக ஒரு ஸ்லைடர் உள்ளது. நீங்கள் அதை இழுத்து வீடியோ பிளே ஆகும் நிலையைச் சரிசெய்ய முடியும். பிளே ஆன நேரம் மற்றும் மீதமுள்ள நேரம் இரண்டும் ஸ்லைடரின் இருபுறமும் தோன்றும். கீழே இடதுபுறத்தில் “தகவல்”, “கூடுதல் விவரம்”, “பார்ப்பதைத் தொடர்க” பட்டன்கள் உள்ளன.

கட்டுப்பாடு

விளக்கம்

"பிளே செய்" பட்டன்

பிளே செய்

"இடைநிறுத்து" பட்டன்

இடைநிறுத்து

“10 விநாடிகள் பின்னோக்கிச் செல்” பட்டன்

10 விநாடிகளுக்குப் பின் சென்று ரிவைண்ட் செய்ய தொட்டுப் பிடித்தல்

“10 விநாடிகள் முன்னோக்கிச் செல்” பட்டன்

10 விநாடிகள் முன்னோக்கிச் சென்று விரைவாக முன்னோக்கிச் செல்ல தொட்டுப் பிடித்தல்

பிளேபேக் வேக பட்டன்

பிளேபேக் வேகத்தை மாற்றுதல்

“ஆடியோ டிராக்” பட்டன்

ஆடியோ டிராக்கை மாற்றுதல், உரையாடலை மேம்படுத்துதல்

“தெளிவான விருப்பங்கள்” பட்டன்

சப்டைட்டில்களையும் காட்சி விளக்கங்களையும் காட்டு

"பகிர்" பட்டன்

எபிசோடு, திரைப்படம், டிரெய்லர் அல்லது ஸ்போர்ட்ஸ் நிகழ்வைப் பகிர்தல்

AirPlay பட்டன்

வீடியோவை பிற சாதனங்களுக்கு ஸ்ட்ரீம் செய்தல்

பிக்சர்-இன்-பிக்சர் பட்டன்

பிக்சர்-இன்-பிக்சர் அம்சத்தின் மூலம் மற்றொரு செயலியைப் பயன்படுத்தும் போதும் வீடியோவைத் தொடர்ந்து பார்க்கலாம்

"மூடுக" பட்டன்

பிளேபேக்கை நிறுத்துதல்

ஆடியோ மியூட் செய்யப்படும்போது, வசனங்கள் தானாகத் தோன்றும். நீங்கள் 10 விநாடிகளுக்குப் பின்னோக்கிச் சென்றால், வசனங்கள் தோன்றும். வசனங்களை ஆஃப் செய்ய, “தெளிவான விருப்பங்கள்” பட்டன்-ஐத் தட்டி “ஆஃப்” என்பதைத் தட்டவும்.

பிளேபேக் செய்யும் போது ஆடியோ விருப்பங்களை மாற்றுதல்

  1. பிளேபேக் செய்யும் போது பிளேபேக் கட்டுப்பாடுகளைக் காட்ட திரையைத் தட்டவும்.

  2. “ஆடியோ டிராக்” பட்டன்-ஐத் தட்டி, “உரையாடலை மேம்படுத்துதல்” அம்சத்தைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:

    • மேலும் மேம்படுத்த: உரையாடலை மிக்ஸில் மிக முக்கியமானதாக ஆக்குகிறது.

    • மேம்படுத்துதல்: உரையாடலை மிக்ஸில் இன்னும் முக்கியமானதாக ஆக்குகிறது.

    • ஆ:ப்: உரையாடலை மேம்படுத்துவதை ஆஃப் செய்கிறது.

நிகழ்ச்சிகள், கதாபாத்திரங்கள், நடிகர்கள் மற்றும் இசை பற்றிய தகவல்களைப் பெறுதல்

பிளேபேக் செய்யும்போது, நீங்கள் பார்க்கும் திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம் அல்லது நேரடியாக “பார்ப்பதைத் தொடர்க” பட்டியலுக்குச் செல்லலாம்.

Apple TV திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியைப் (Apple TV சந்தா தேவை) பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையில் காட்டப்படும் நடிகர்கள், கதாப்பாத்திரங்கள், இசை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் “கூடுதல் தகவல்கள்” அம்சம் மூலம் நீங்கள் பெறலாம். ஒரு நடிகர் மீது தட்டுவதன் மூலம் அவரது பின்னணி தகவல்கள் மற்றும் திரைவாழ்க்கை பக்கத்தைப் பார்க்கலாம் அல்லது பின்னணியில் பிளே ஆகும் ஒரு பாடலை விரைவாகப் பார்த்து அதை Apple Music பிளேலிஸ்ட்டில் (Apple Music சந்தா தேவை) சேர்க்கலாம்.

  1. பிளேபேக் செய்யும் போது பிளேபேக் கட்டுப்பாடுகளைக் காட்ட திரையைத் தட்டவும்.

  2. பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தட்டவும்:

    • தகவல்: நீங்கள் பார்ப்பது குறித்து கூடுதல் தகவல்களைப் பார்க்கவும்.

    • கூடுதல் விவரம்: மேலும் தகவல்களைப் பார்க்க நடிகர் அல்லது கதாபாத்திரம் என்பதைத் தட்டவும். இசை குறித்த தகவல் காட்டப்பட்டால், அந்தப் பாடலைத் தட்டி, இசை செயலியில் உள்ள பிளேலிஸ்ட்டில் சேர்க்கலாம் (Apple TV மற்றும் Apple Music சந்தாக்கள் தேவை).

    • பார்ப்பதைத் தொடர: “பார்ப்பதைத் தொடர்க” என்பதற்கு நேரடியாகச் சென்று, ஒரு ஐட்டத்தைத் தட்டி அதை விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் அல்லது பார்க்கத் தொடங்கலாம்.

    • நேரலை ஸ்போர்ட்ஸ்: நேரலை மற்றும் இனிவரும் விளையாட்டு நிகழ்வுகளைப் பார்க்கவும்.

Apple TVக்குச் சந்தா தேவை. சில நாடுகள் மற்றும் வட்டாரங்களில் பின்வருவனவற்றில் சில அல்லது அனைத்தும் இதற்கான சந்தாவில் அடங்கும்: வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் பேஸ்பால், மேஜர் லீக் சாக்கர் (MLS) மற்றும் Formula 1. சில அம்சங்களும் உள்ளடக்கங்களும் சில நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது. Apple TV செயலியில் வாடகைக்கு எடுக்கவோ வாங்கவோ கிடைக்கும் மூன்றாம் தரப்பு பிராண்டட் சந்தாச் சேவைகள் அல்லது உள்ளடக்கங்கள் Apple TV சந்தாவில் அடங்காது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.