இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் குறிச்சொற்கள் மூலம் குறிப்புகளை ஒழுங்கமைத்தல்

குறிப்புகள் செயலியில், உங்கள் குறிப்புகளை வகைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் குறிச்சொற்களைப் பயன்படுத்துவது வேகமான மற்றும் வசதியான வழிமுறையாகும். குறிப்பில் #shopping, #work போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிச்சொற்களைச் சேர்க்கலாம், மேலும் குறிச்சொல் உலாவி அல்லது ஸ்மார்ட் கோப்புறைகளைப் பயன்படுத்தி கோப்புறைகள் முழுவதும் உங்கள் குறிப்புகளைத் தேடலாம் ஃபில்டர் செய்யலாம்.

குறிப்புகளில் குறிச்சொற்களைச் சேர்த்தல்

குறிப்பில் ஒரு குறிச்சொல்லைச் சேர்க்க, #ஐத் தொடர்ந்து குறிச்சொல் பெயரை டைப் செய்யவும், பின்னர் குறிச்சொல்லைச் செயல்படுத்த குறிச்சொல்லுக்குப் பிறகு ஓர் இடைவெளியைச் சேர்க்கவும். செயலில் உள்ள குறிச்சொற்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்படும். கீபோர்டுக்கு மேலே உள்ள மெனுவிலிருந்து ஏற்கெனவே உள்ள குறிச்சொல்லையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். குறிச்சொற்கள் ஒரு வார்த்தையாக மட்டுமே இருக்க முடியும், ஆனால் வார்த்தைகளை இணைக்க கோடுகள் மற்றும் அடிக்கோடுகளைப் பயன்படுத்தலாம். உங்கள் குறிச்சொல்லைச் செயல்படுத்தாமல் குறிப்பைச் சேமித்தால், அது குறிச்சொல்லாகச் சேமிக்கப்படாது. குறிப்பில் பல குறிச்சொற்களைச் சேர்க்கலாம்.

உதவிக்குறிப்பு: குறிப்பில் குறிச்சொல்லை எழுத Apple Pencil அல்லது உங்கள் விரலைப் பயன்படுத்தலாம். அடிக்கோடிடப்பட்ட குறிச்சொல்லைத் தட்டி “குறிச்சொல்லாக மாற்று" என்பதைத் தட்டவும்.

குறிச்சொல்லுக்கு மறுபெயரிடுதல் அல்லது நீக்குதல்

பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:

  • கோப்புறைகள் பட்டியலின் கீழ்ப்பகுதியில் உள்ள “குறிச்சொற்கள்” பிரிவின் கீழே உள்ள ஒரு குறிச்சொல்லைத் தொட்டுப் பிடித்து “குறிச்சொல்லுக்கு மறுபெயரிடு” அல்லது “குறிச்சொல்லை நீக்கு” என்பதைத் தட்டவும்.

    குறிச்சொற்கள் பட்டியலைக் காட்ட நீங்கள் “சைடுபாரை நிலைமாற்று” பட்டன்-ஐத் தட்ட வேண்டியிருக்கலாம்.

  • “திருத்து” (கோப்புறைகள் பட்டியலின் மேலே இருக்கும்) என்பதைத் தட்டி, குறிச்சொல்லின் பெயரை மாற்ற அதைத் தட்டவும் அல்லது “நீக்கு” பட்டன்-ஐத் தட்டி, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

நீங்கள் ஒரு குறிச்சொல்லை நீக்கினால், அதைப் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் கோப்புறைகளில் இருந்தும் அது அகற்றப்படும்.

குறிச்சொற்கள் மூலம் குறிப்புகளைப் பார்த்தல்

கோப்புறைகள் பட்டியலின் கீழ்ப்பகுதியில் உள்ள “குறிச்சொற்கள்” பிரிவின் கீழே (தேவைப்பட்டால், குறிச்சொற்கள் பட்டியலைக் காட்ட “சைடுபாரை நிலைமாற்று” பட்டன் பட்டனைத் தட்டவும்), பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • அனைத்துக் குறிச்சொற்களுடன் குறிப்புகளைப் பார்த்தல்: “அனைத்துக் குறிச்சொற்கள்” என்பதைத் தட்டவும்.

  • குறிப்பிட்ட குறிச்சொற்களுடன் குறிப்புகளைப் பார்த்தல்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிச்சொற்களைத் தட்டவும்; குறிச்சொற்களை விலக்க, பெயர் மீது ஒரு கோடு வரும் வரை குறிச்சொல்லைத் தட்டவும். தேர்ந்தெடுக்கப்பட்ட குறிச்சொற்களில் ஏதேனும் ஒன்றுடன் அல்லது அனைத்துடனும் பொருந்தக்கூடிய குறிப்புகளைப் பார்க்க, தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.