இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் ஸ்லீப் ஃபோகஸைப் பயன்படுத்துதல்

ஸ்லீப் ஃபோகஸை அமைத்த பிறகு, நீங்கள் கட்டுப்பாட்டு மையத்தில் அதை விரைவாக ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். உறங்குவதற்கு முன்னும் பின்னும் ஏற்படும் கவனச்சிதறல்களைக் குறைக்க ஸ்லீப் ஃபோகஸ் உதவும். எடுத்துக்காட்டாக, இது அறிவிப்புகளையும் ஃபோன் அழைப்புகளையும் ஃபில்டர் செய்யலாம், மேலும் நீங்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கலாம்.

ஸ்லீப் ஃபோகஸை அமைத்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஃபோகஸ்” என்பதைத் தட்டி, “உறக்கம்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் ஃபோகஸைப் பிரத்தியேகமாக்கவும்.

    உதாரணமாக, உங்களுக்கு முக்கியமான நபர்களிடமிருந்து குறுக்கீடுகளை நீங்கள் அனுமதிக்கலாம். பூட்டுத் திரையையும் முகப்புத் திரையையும் பிரத்தியேகமாக்கலாம். மேலும் “ஸ்லீப் ஃபோகஸ்” ஆனில் இருக்கும்போது செயலிகளும் உங்கள் சாதனங்களும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பிரத்தியேகமாக்கலாம்.

உங்கள் ஸ்லீப் ஃபோகஸை விரைவாக ஆன் அல்லது ஆஃப் செய்தல்

  1. iPadஇல் கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • ஸ்லீப் ஃபோகஸை ஆன் செய்ய: “ஃபோகஸ்” என்பதைத் தட்டி, “உறக்கம்” என்பதைத் தட்டவும்.

    • ஸ்லீப் ஃபோகஸை ஆஃப் செய்ய: உறக்கம் என்பதைத் தட்டி, “உறக்கம்” என்பதை மீண்டும் தட்டவும்.

உதவிக்குறிப்பு: “ஸ்லீப் ஃபோகஸ்” ஆன் செய்யப்பட்டிருந்தால், பூட்டுத் திரையில் “உறக்கம்” என்பதைத் தொட்டுப் பிடித்து, அதைத் தட்டுவதன் மூலம் அதை விரைவாக ஆஃப் செய்யலாம்.

உங்கள் அடுத்த திட்டமிடப்பட்ட உறக்க நேரம் அல்லது விழித்தெழும் நேரத்தில் உங்கள் ஸ்லீப் ஃபோகஸ் மீண்டும் ஆன் அல்லது ஆஃப் ஆகும்.

உங்கள் ஸ்லீப் ஃபோகஸ் அமைப்புகளை உங்கள் பிற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ள, உங்கள் “அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். அமைப்புகள் செயலிக்குச் சென்று “ஃபோகஸ்” என்பதைத் தட்டி, “அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.