இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadக்கான மவுஸ் செயல்கள் மற்றும் சைகைகள்

மவுஸைப் பயன்படுத்தி செயலிகளைத் திறக்கலாம், முகப்புத் திரைக்குச் செல்லலாம், Slide Overஐத் திறக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம் (மவுஸ் சாதனங்கள் தனியாக விற்கப்படுகின்றன).

Macக்கு (ஆதரிக்கப்படும் மாடல்களில் macOS 12.3 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை) அருகில் iPad இருக்கும்போது, நீங்கள் இரு சாதனங்களுக்கும் இடையே மவுஸைப் பகிரலாம்.

குறிப்பு: குறிப்பிட்ட சில iPad மாடல்களில் குறிப்பிட்ட சில மவுஸ் சாதனங்கள் மட்டுமே முற்றிலும் இணக்கமாக இருக்கும்.

மவுஸ் செயல்கள்

ஆக்‌ஷன்

விளக்கம்

மவுஸை கிளிக் செய்வதைக் குறிக்கும் விளக்கப்படம்.

கிளிக் செய்தல். கிளிக் செய்வதை உணரும் வரை மவுஸை அழுத்தவும்.

மவுஸைத் தொட்டுப் பிடித்திருப்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

கிளிக் செய்து பிடித்திருத்தல். மவுஸை அழுத்திப் பிடித்திருக்கவும்.

ஒரு ஐட்டத்தை இழுக்க மவுஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

இழுத்தல். ஒரு ஐட்டத்தை கிளிக் செய்து பிடித்திருக்கவும், பின்னர் மவுஸை நகர்த்தவும்.

மவுஸை கிளிக் செய்வதைக் குறிக்கும் விளக்கப்படம்.

iPadஐச் செயல்படுத்துல். மவுஸை கிளிக் செய்யவும்.

இல்லையெனில், நீங்கள் வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்தினால் ஏதேனும் ஒரு கீயை அழுத்தவும்.

Dockஐத் திறக்க மவுஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

Dockஐத் திறத்தல். மவுஸை நகர்த்தி, திரையின் அடிப்பகுதியில் பாயின்டரை வைக்கவும்.

முகப்புத் திரைக்குச் செல்ல மவுஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

முகப்புத் திரைக்குச் செல்லுதல். மவுஸை நகர்த்தி, திரையின் அடிப்பகுதியில் பாயின்டரை வைக்கவும். Dock தோன்றிய பிறகு, திரையின் அடிப்பகுதியைத் தாண்டி பாயின்டரை நகர்த்தவும்.

இல்லையெனில், திரையின் அடிப்பகுதியில் உள்ள பாரை கிளிக் செய்யவும் (Face IDஐக் கொண்ட iPadஇல்).

செயலி மாற்றியைத திறக்க மவுஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

செயலி மாற்றியைத் திறத்தல். முகப்புத் திரை தெரியும்போது, திரையின் அடிப்பகுதியைத் தாண்டி பாயின்டரை நகர்த்தவும்.

இல்லையெனில், ஒரு செயலித் திரையின் அடிப்பகுதியில் உள்ள பாரைத் திரையின் நடுவில் இழுத்து நிறுத்தவும் (Face IDஐக் கொண்ட iPadஇல்).

Slide Overஐப் பார்க்க மவுஸைப் எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

Slide Overஐப் பார்த்தல். மவுஸைப் பயன்படுத்தி, திரையின் வலது விளிம்பைத் தாண்டி பாயின்டரை நகர்த்தவும். Slide Overஐ மறைக்க, வலது விளிம்பைத் தாண்டி பாயின்டரை மீண்டும் நகர்த்தவும்.

அறிவிப்பு மையத்தைத் திறக்க மவுஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

கட்டுப்பாட்டு மையத்தைத் திறத்தல். மேல் வலதுபுறத்தில் உள்ள ஸ்டேட்டஸ் ஐகான்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மவுஸைப் பயன்படுத்தி பாயின்டரை நகர்த்தி கிளிக் செய்யவும்.

இல்லையெனில், திரையின் மேல் வலது மூலையைத் தாண்டி பாயின்டரை நகர்த்தவும்.

அறிவிப்பு மையத்தைத் திறக்க மவுஸை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

அறிவிப்பு மையத்தைத் திறத்தல். மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்டேட்டஸ் ஐகான்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மவுஸைப் பயன்படுத்தி பாயின்டரை நகர்த்தி கிளிக் செய்யவும்.

இல்லையெனில், மவுஸைப் பயன்படுத்தி திரையின் மேற்புறத்தைத் தாண்டி (மையத்திற்கு அருகே) பாயின்டரை நகர்த்தவும்.

Magic Mouse 2 மவுஸ் சைகைகள்

சைகை

விளக்கம்

மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்வதற்கான மவுஸ் சைகைகளைக் குறிக்கும் விளக்கப்படம்.

மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்தல். மவுஸின் மேற்பரப்பில் விரலை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி ஸ்லைடு செய்யவும்.

இடது மற்றும் வலதுபுறமாக ஸ்க்ரால் செய்வதற்கான மவுஸ் சைகைகளைக் குறிக்கும் விளக்கப்படம்.

இடது அல்லது வலதுபுறமாக ஸ்க்ரால் செய்தல். மவுஸின் மேற்பரப்பில் விரலை இடது அல்லது வலதுபுறமாக ஸ்லைடு செய்யவும்.

மவுஸின் வலது பக்கத்தில் செகண்டரி கிளிக் இருப்பதைக் குறிக்கும் விளக்கப்படம்.

செகண்டரி கிளிக். முகப்புத் திரையில் உள்ள ஐகான்கள், மெயில்பாக்ஸில் உள்ள மெசேஜ்கள், “கட்டுப்பாட்டு மையத்தில்” உள்ள கேமரா பட்டன் போன்ற ஐட்டங்களைக் கிளிக் செய்தால் விரைவுச் செயல்கள் மெனு காட்டப்பட மவுஸின் ஒரு பக்கத்தில் விரலைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: “செகண்டரி கிளிக்கை” ஆன் செய்வதற்கும், மவுஸின் எந்தப் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்வதற்கும், அமைப்புகள்  > பொது அமைப்புகள் > டிராக்பேடு & மவுஸ் > செகண்டரி கிளிக் என்பதற்குச் செல்லவும்.

நீங்கள் வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், மவுஸை கிளிக் செய்யும் போது கன்ட்ரோல் கீயை அழுத்தலாம். பல பட்டன்களைக் கொண்ட மவுஸில், இரண்டாவது பட்டனை கிளிக் செய்யவும்.

இன்றைய செயல்பாடுகளைத் திறப்பதற்கான மவுஸ் சைகையைக் குறிக்கும் விளக்கப்படம்.

இன்றைய செயல்பாடுகளைத் திறத்தல். முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரை தெரியும்போது, மவுஸின் மேற்பரப்பில் வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

முகப்புத் திரையில் தேடலைத் திறப்பதற்கான மவுஸ் சைகையைக் குறிக்கும் விளக்கப்படம்.

முகப்புத் திரையில் தேடலைத் திறத்தல். மவுஸின் மேற்பரப்பில் கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.