iPadஇல் பிள்ளையின் ஸ்கிரீன் டைம் கோரிக்கைக்குப் பதிலளித்தல்

பெற்றோர் தங்களின் பிள்ளைகள் சாதனங்களில் செலவிடும் நேரத்தையும், அவர்கள் எந்தச் செயலிகளைப் பயன்படுத்தலாம், யாரைத் தொடர்புகொள்ளலாம் என்பதையும் நிர்வகிக்க “ஸ்கிரீன் டைம்” அம்சம் உதவுகிறது. நீங்கள் நிர்ணயித்த வரம்பை அவர்கள் எட்டும்போது இந்த அம்சம் மூலம் அவர்கள் கோரிக்கைகளை விடுக்கலாம். எடுத்துக்காட்டாக:

  • “செயல்படா நேரம்” அல்லது “செயலி வரம்புகள்” என்பதை ஆன் செய்தால், நேர வரம்பை எட்டிய பிறகு திரையைக் கூடுதல் நேரம் பார்க்க அனுமதிக்குமாறு அவர்கள் கேட்க முடியும்.

  • உங்கள் பிள்ளை தனது தொடர்புப் பட்டியலில் உள்ளவர்களுடன் மட்டுமே தொடர்புகொள்ளக்கூடிய வகையில் “தகவல்தொடர்பு வரம்புகள்” அம்சத்தை நீங்கள் அமைத்திருந்தால், பட்டியலில் புதிய தொடர்பைச் சேர்க்க அவர் அனுமதி கேட்கலாம்.

    குறிப்பு: தேவையான தொழில்நுட்பத் தேவைகளை ஒரு செயலி கொண்டிருந்தால், அந்தச் செயலியில் பிற நபர்களுடன் தொடர்புகொள்ள உங்கள் பிள்ளை அனுமதி கேட்கலாம்.

ஸ்கிரீன் டைம் மட்டுமல்லாமல், பிற கோரிக்கைகளையும் உங்கள் பிள்ளையால் அனுப்பமுடியும். “வாங்க அனுமதி கேள்” அம்சத்தை நீங்கள் அமைத்திருந்தால், ஒரு செயலியைப் பதிவிறக்கவோ, பகிரப்பட்ட செயலியை மீண்டும் பதிவிறக்கவோ, App Store, iTunes Store, Apple Books ஆகியவற்றிலிருந்து ஓர் ஐட்டத்தை வாங்கவோ உங்கள் பிள்ளை அனுமதி கேட்கலாம். தற்போதைய வயது வரம்பிற்குள் இல்லாத செயலியை வாங்க அல்லது பதிவிறக்க அவர் விரும்பினால், அதற்கான விதிவிலக்கு வழங்கும்படியும் உங்களிடம் கேட்கலாம். “வாங்க அனுமதி கேள்” அம்சத்தை அமைக்க அல்லது இந்தக் கோரிக்கைகளைக் கையாள, “வாங்க அனுமதி கேள்” அம்சத்தைச் சிறாருக்கு ஆன் செய்தல் மற்றும் பிள்ளையின் விதிவிலக்குக் கோரிக்கைக்குப் பதிலளித்தல் என்பதைப் பார்க்கவும்.

குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள சிறாருக்கான திரையில் “கூடுதல் நேரத்திற்கான கோரிக்கைகள்” பிரிவு காட்டப்பட்டுள்ளது.

பிள்ளையின் ஸ்கிரீன் டைம் கோரிக்கைக்கு அவரது சாதனத்திலேயே நேரடியாகப் பதிலளித்தல்

  1. பிள்ளையின் சாதனத்தில், தொடர்புடைய செயலியைத் திறந்து, கோரிக்கையைத் தொடங்க ஒரு விருப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். (உதாரணத்திற்கு, “கூடுதல் நேரத்தைக் கோருக” என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.)

  2. “ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உள்ளிடவும்” என்பதை கிளிக் செய்யவும் அல்லது தட்டவும், பிறகு ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உள்ளிடவும்.

  3. ஏற்கவோ நிராகரிக்கவோ ஒரு விருப்பத்தைக் கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.

உங்கள் iPadஇல் பிள்ளையின் ஸ்கிரீன் டைம் கோரிக்கைக்குப் பதிலளித்தல்

உங்கள் பிள்ளையின் கோரிக்கைக்கு உங்கள் iPadஇல் இருந்து நீங்கள் அனுமதி வழங்கலாம். உதாரணமாக, ஒரு செயலியை அதிக நேரம் பயன்படுத்த அனுமதி கோருதல்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

  3. உங்கள் பிள்ளை கோரிக்கை விடுத்திருந்தால், செயலிகளின் பட்டியல் காட்டப்படும். பிள்ளையின் கோரிக்கைகளுக்குக் கீழே உள்ள செயலியைத் தட்டி, ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உள்ளிடவும்.

  4. கோரிக்கையைப் பொறுத்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • 15 நிமிடங்களுக்கு அங்கீகரித்தல்: “15 நிமிடங்களுக்கு ஒப்புதல் அளி” என்பதைத் தட்டவும்.

    • ஒரு மணிநேரத்திற்கு அங்கீகரித்தல்: “ஒரு மணிநேரத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்” என்பதைத் தட்டவும்.

    • ஒரு நாளில் எஞ்சியுள்ள காலத்தை அங்கீகரித்தல்: “முழு நாளுக்கும் ஒப்புதல் அளிக்கவும்” என்பதைத் தட்டவும்.

    • கோரிக்கையை அங்கீகரித்தல்: “கோரிக்கையை அங்கீகரி” என்பதைத் தட்டவும்.

    • கோரிக்கையை நிராகரித்தல்: “ஒப்புதல் அளிக்க வேண்டாம்” என்பதைத் தட்டவும்.

அறிவிப்புகள் மற்றும் மெசேஜஸில் இருந்தே கோரிக்கைகளுக்கு நேரடியாக அனுமதி வழங்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அறிவிப்பு/மெசேஜில், “அங்கீகரி”, “அனுமதி”, “நிராகரி” ஆகியவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் (அல்லது ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்ய, “விருப்பங்கள்” பாப்-அப் மெனுவை கிளிக் செய்யவும்).

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.