இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல், ரோட்டரைப் பயன்படுத்தி VoiceOverஐக் கட்டுப்படுத்துதல்

VoiceOver செயல்படும் விதத்தை மாற்ற, திரையில் உள்ள VoiceOver ரோட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். VoiceOver ஒலியளவு அல்லது பேச்சின் வேக வீதத்தை நீங்கள் மாற்றலாம், திரையில் ஒரு ஐட்டத்திலிருந்து அடுத்த ஐட்டத்திற்குச் செல்லலாம், பிரெய்ல் திரை உள்ளீடு, கையெழுத்து போன்ற சிறப்பு உள்ளீட்டு முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

“பேச்சின் வேக வீதம்” அமைப்பைக் குறிக்கும் டயலைக் கொண்ட ரோட்டார் கட்டுப்பாடு.

VoiceOverஐக் கட்டுப்படுத்த நீங்கள் Apple வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்தும்போது, ஒலியளவு, பேசும் வேகம், பிட்ச் மற்றும் ஒலிப்புமுறையின் பயன்பாடு, எதிரொலியை டைப் செய்தல், நிறுத்தற்குறியை வாசித்தல் போன்ற அமைப்புகளை மாற்ற ரோட்டரைப் பயன்படுத்தலாம்.

VoiceOver ரோட்டரைப் பயன்படுத்துதல்

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, டயல் செய்வதைப் போல திரையில் உங்கள் இரண்டு விரல்களைச் சுழற்றவும். இரண்டு கைகளிலும் ஒவ்வொரு விரலைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், ஒரு விரலால் மேலே இழுக்கும் அதே சமயத்தில் மற்றொரு விரலால் கீழ் நோக்கி இழுக்கவும்.

    VoiceOver ரோட்டர் அமைப்பின் பெயரைப் படித்துக்காட்டும். மேலும் சில அமைப்புகளின் பெயர்களைக் கேட்க, உங்கள் விரல்களைச் சுழற்றிக்கொண்டே இருக்கவும். உங்களுக்குத் தேவையான அமைப்பின் பெயர் கேட்கும்போது உங்கள் விரல்களைச் சுழற்றுவதை நிறுத்தவும்.

  2. அமைப்பைப் பயன்படுத்த, திரையில் உங்கள் விரலை மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    நீங்கள் செய்யும் செயல்பாட்டைப் பொறுத்தே கிடைக்கக்கூடிய ரோட்டார் அமைப்புகளும் அவற்றுக்கான எஃபெக்ட்களும் அமையும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு இணையப்பக்கத்தில் உலாவும்போது தலைப்புகளைத் தேர்வுசெய்தால், VoiceOver கர்சரை அடுத்த அல்லது முந்தைய தலைப்புக்கு நகர்த்த கீழ் அல்லது மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

VoiceOver ரோட்டரைப் பிரத்தியேகமாக்குதல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • ரோட்டர் அமைப்புகளைச் சேர்க்க அல்லது மறுவரிசைப்படுத்த: அமைப்புகளை மறுவரிசைப்படுத்த, ரோட்டரைத் தட்டிய பிறகு நீங்கள் விரும்பும் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும் அல்லது "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐ இழுக்கவும்.

    • மற்றொரு மொழியைச் சேர்த்தல்: பேசும் குரலை மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும்.

    • ரோட்டர் செயல்களை VoiceOver உறுதிசெய்ய: “சொல்லும் விதம்” என்பதைத் தட்டி “பேச்சுக்கான உறுதிப்படுத்துதல்” என்பதை ஆன் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.