iPadஇல் “முன்னோட்டம்” செயலியில் உரை மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்தல்

நீங்கள் ஆவணத்தை ஸ்கேன் செய்து PDFஐ உருவாக்கலாம்.

  1. iPadஇல் முன்னோட்டம் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஆவணங்களை ஸ்கேன் செய்” என்பதைத் தட்டவும்.

  3. உரை அல்லது ஆவணம் திரையில் காட்டப்படும் வகையில் iPad கேமராவை வைக்கவும்.

    அந்தப் பக்கத்தை iPad தானாகவே படமெடுக்கும். தானாக ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, நீங்களே நேரடியாக ஸ்கேன் செய்ய விரும்பினால், “தன்னியக்கம்” (“நேரடி” என லேபிள் மாறும்) என்பதைத் தட்டி ஷட்டர் பட்டனைத் தட்டவும்.

  4. கூடுதல் பக்கங்களை ஸ்கேன் செய்ய மேலே உள்ள படியை மீண்டும் செய்யவும்.

  5. ஸ்கேன் செய்ததை கிராப் செய்ய, சுழற்ற அல்லது நிறத்தைச் சரிசெய்ய, திரையின் கீழ்ப்புறம் உள்ள சிறுபடங்களைத் தட்டவும்.

  6. ஸ்கேன் செய்து முடித்ததும் “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.