iPadஇல் Siriஐப் பயன்படுத்தி அழைக்கலாம், மெசேஜ் செய்யலாம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பலாம்

ஃபோன், FaceTime, மெசேஜஸ், Mail ஆகிய செயலிகளுடன் Siriஐப் பயன்படுத்தி உங்கள் அருகிலும் தொலைவிலும் உள்ள நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம். இருப்பிடச் சேவைகள் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நீங்கள் கேட்டால் உங்கள் இருப்பிடத்தைப் பற்றிய தகவல்களைக் கூட Siri வழங்கும்.

அழைப்புகளைச் செய்தல்

Siri: iPadஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

  • “Call Eliza’s mobile”

  • “Return my last call”

  • “Redial that last number”

  • “FaceTime Mom”

கவனத்திற்கு: வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும். முக்கியமான பாதுகாப்புத் தகவல் பக்கத்தைப் பார்க்கவும்.

Siriஐப் பயன்படுத்தி மெசேஜ்களை அனுப்புதல், வாசிக்கச் செய்து கேட்டல் மற்றும் பதிலளித்தல்

Siri பயன்படுத்தி நீங்கள் மெசேஜ்களை அனுப்பலாம், உங்களுக்கு வரும் மெசேஜ்களை உரக்க வாசிக்கச் செய்து கேட்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம். Siriஐப் பயன்படுத்துவது எப்படி என்று அறிக.

Siri: iPadஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

  • “Send a message to Mayuri saying, how about tomorrow?”

  • “Read my last message from Antonio”

  • “Reply, that’s great news!”

உங்களுக்கு மெசேஜை வாசித்துக் காட்டிய பிறகு Siri அதை அனுப்ப முடியும். அமைப்புகள்  > Siri (இல்லையெனில் Apple Intelligence & Siri) > Siri மூலம் மெசேஜ் அனுப்புதல் என்பதற்குச் சென்று “மெசேஜ்களைத் தானாக அனுப்பு” என்பதை ஆன் செய்யவும்.

கவனத்திற்கு: வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும். முக்கியமான பாதுகாப்புத் தகவல் பக்கத்தைப் பார்க்கவும்.

Mail செயலியில் மின்னஞ்சல்களைப் படித்தல் மற்றும் எழுதுதல்

Siri: iPadஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

  • “Read me my emails”

  • “Email this photo to mom”

  • “Send an email to Ashley”

உங்கள் தொடர்புகளுடன் உள்ளடக்கத்தைப் பகிர்தல்

உங்கள் தொடர்புகளில் உள்ள நபர்களுடன் புகைப்படங்கள், இணையப்பக்கங்கள், Apple Music அல்லது Apple Podcastsஇன் உள்ளடக்கம், மேப்ஸ் இருப்பிடங்கள் போன்ற திரையில் உள்ள மேலும் பல ஐட்டங்களைப் பகிரலாம்.

உதாரணமாக, உங்கள் புகைப்பட லைப்ரரியில் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, புகைப்படத்துடன் ஒரு புதிய மேசேஜை உருவாக்க, Siriஐச் செயல்படுத்தி, “Send this to mom” எனச் சொல்லலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.