இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad உடன் AirPodsஐப் பயன்படுத்துதல்

நீங்கள் iPad உடன் AirPodsஐ (தனியாக விற்கப்படுகிறது) இணைத்த பிறகு, AirPodsஐப் பயன்படுத்தி iPadஇல் பிளே செய்யப்படும் ஆடியோவைக் கேட்கலாம், FaceTime அழைப்புகளைச் செய்யலாம் மற்றும் பதிலளிக்கலாம், மெசேஜ்களைக் கேட்கலாம் மற்றும் பதிலளிக்கலாம், உங்களுக்குத் தேவைப்படும்போது நினைவூட்டல்களைக் கேட்கலாம், சத்தமான சூழலில் உரையாடல்களை இன்னும் எளிதாகக் கேட்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

iPad உடன் AirPodsஐ இணைத்தல்

  1. iPadஇல், அமைப்புகள்  > Bluetooth என்பதற்குச் சென்று Bluetoothஐ ஆன் செய்யவும்.

  2. iPad முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • AirPods (1ஆவது, 2ஆவது, 3ஆவது ஜெனரேஷன்கள்) மற்றும் AirPods Pro: உங்கள் AirPods உள்ளேயே இருக்கும் வகையில் கேஸைத் திறந்து, அதை iPadக்கு அருகில் வைக்கவும்.

    • AirPods Max: Smart Caseஇல் இருந்து AirPods Maxஐ எடுத்து iPadக்கு அருகில் AirPods Maxஐப் பிடித்துக்கொள்ளவும்.

  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: உங்கள் AirPods Maxஐ இணைப்பதற்கான திரையில் காட்டப்படும் வழிமுறைகள் காட்டப்படவில்லை எனில், அமைப்புகள் >Bluetooth என்பதற்குச் சென்று, உங்கள் AirPods Max ஐத் தேர்ந்தெடுக்கவும். AirPods Maxஇல் ஸ்டேட்டஸ் லைட் வெள்ளை நிறத்தில் ஃப்ளாஷ் ஆகவில்லை என்றால், அது வரும் வரை “இரைச்சல் கட்டுப்பாடு” பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள, ஆதரிக்கப்படும் அனைத்துச் சாதனங்களுடனும் (iOS 10, iPadOS 13, macOS 10.12, watchOS 3 அல்லது அதற்குப் பிந்தையவை தேவை) உங்கள் AirPods தானாக இணைக்கப்படும்.

குறிப்பு: உங்கள் AirPodsஐ இணைக்க முடியாவிட்டால், AirPods இணையவில்லை எனில் என்ன செய்வது? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

AirPods மற்றும் iPad மூலம் பல விஷயங்களைச் செய்தல்

உங்கள் AirPodsஇல் இருந்து அதிக பலன்களை எப்படிப் பெறுவது என்பது குறித்த விரிவான வழிமுறைகளுக்கு, AirPods பயனர் வழிகாட்டியைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.