இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் செயலிகளுக்கு இடையே மாறுதல்

Dock, Exposé அல்லது சைகையைப் பயன்படுத்தி ஒரு செயலி அல்லது சாளரத்தில் இருந்து மற்றொன்றிற்கு விரைவாக மாறலாம். முன்பு பார்த்த செயலிக்குத் திரும்பும்போது, நீங்கள் விட்ட இடத்தில் இருந்தே அதைப் பார்க்கலாம்.

Dockஇல் இருந்து ஒரு செயலியைத் திறத்தல்

திரையின் கீழ் விளிம்பில் இருந்து Dockஐ வெளியே கொண்டு வரும் வகையில் போதிய தூரம் மேல்நோக்கி ஸ்வைப் செய்து, நீங்கள் திறக்க விரும்பும் செயலியைத் தட்டவும்.

பிடித்தமான செயலிகள் Dockஇன் இடதுபுறத்தில் இருக்கும். iPadஇல் சமீபத்தில் நீங்கள் திறந்தவை, உங்கள் அருகிலுள்ள iPhone அல்லது Macஇல் திறந்துள்ளவை போன்ற பரிந்துரைக்கப்படும் செயலிகள் வலதுபுறத்தில் காட்டப்படும். Dockஇல் வலதுபுறத்தில் உள்ள ஐகான் செயலி லைப்ரரியைத் திறக்கிறது.

“கோப்புகள்” செயலியில் இருந்து கோப்புறைகளை Dockக்கு நகர்த்தியும் அவற்றை விரைவாகத் திறக்கலாம். ”கோப்புகள்” செயலியில் கோப்புகளையும் கோப்புறைகளையும் மாற்றியமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

இடதுபுறத்தில் ஆறு பிடித்தமான செயலிகளையும் வலதுபுறத்தில் மூன்று பிடித்தமான செயலிகளையும் கொண்ட Dockஐ முகப்புத் திரை காட்டுகிறது. Dockஇல் வலதுபுறத்தில் உள்ள ஐகான் செயலி லைப்ரரியைத் திறக்கிறது.

Exposé மூலம் செயலிகளைப் பார்த்தல் மற்றும் அவற்றுக்கிடையே மாறுதல்

நீங்கள் திறந்து வைத்திருக்கும் அனைத்துச் செயலிகளையும் சாளரங்களையும் Exposé மூலம் பார்க்கலாம், அவற்றுக்கிடையே மாறலாம்.

  1. திரையின் அடிப்பகுதியில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்து திரையின் மையத்தில் இடைநிறுத்திவிட்டு உங்கள் விரலை எடுக்கவும்.

    சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட பல செயலிகளை Exposé காட்டுகிறது.
  2. திறந்திருக்கும் செயலிகளைத் தேட, வலதுபுறமாக அல்லது இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

    நீங்கள் ஒரே திரையில் பல சாளரங்களில் பணிபுரிந்தால், அந்தச் சாளரங்கள் வலதுபுறத்தில் காட்டப்படும். திறந்திருக்கும் மற்ற செயலிகள் இடதுபுறத்தில் காட்டப்படும்.

  3. செயலிச் சாளரத்தைத் திறக்க அதைத் தட்டவும்.

இவற்றையும் பாருங்கள்iPadஇல் செயலியைத் திறத்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.