இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மெசேஜைப் பிறகு அனுப்பத் திட்டமிடுதல்

இரவில் உங்கள் உறக்க நேரத்தில் அனுப்ப வேண்டியிருந்தாலோ, கட்டாயம் அனுப்ப வேண்டிய மிக முக்கியமான மெசேஜாக இருந்தாலோ, பிறகு அனுப்பும்படி ஒரு மெசேஜை நீங்கள் திட்டமிடலாம்.

குறிப்பு: நீங்கள் iMessageஐப் பயன்படுத்த வேண்டும். உங்கள் பெறுநர் எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தலாம், மெசேஜ் திட்டமிடப்பட்டிருப்பதை அவர்களுக்குத் தெரிவிக்கப்படாது. திட்டமிடப்பட்ட மெசேஜை மறுதிட்டமிட, திருத்த அல்லது நீக்க நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும்.

உரை புலத்தில் உள்ளிடப்படும் திட்டமிடப்பட்ட மெசேஜுடன் கூடிய மெசேஜஸ் உரையாடல்.

மெசேஜைத் திட்டமிடுதல்

எதிர்வரும் 14 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் மெசேஜை அனுப்ப நீங்கள் திட்டமிடலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மெசேஜைத் திட்டமிட விரும்பும் உரையாடலுக்குச் செல்லவும் அல்லது உரையாடலைத் தொடங்கவும்.

  3. “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “பின்னர் அனுப்பு” என்பதைத் தட்டவும்.

  4. திட்டமிடலைத் திறக்க, நேரத்தின் மீது தட்டவும். உங்கள் மெசேஜை எப்போது அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

    உரைப் புலத்தைச் சுற்றிலும் இடைவெளியுடன் கூடிய கோடு காட்டப்படும். உங்கள் மெசேஜ் எப்போது அனுப்பப்படும் என்ற தகவல் மெசேஜின் மேல்பகுதியில் காட்டப்படும்.

  5. மெசேஜை உள்ளிட்டு “அனுப்பு” பட்டன் ஐகானைத் தட்டவும்.

அனுப்பப்பட வேண்டிய நேரம் வரும் வரை சுற்றிலும் இடைவெளியுடன் கூடிய கோடுடன் மெசேஜ் காட்டப்படும். உங்கள் சாதனங்கள் அனைத்தும் ஆஃப்லைனில் இருந்தாலும் அது அனுப்பப்படும்.

குறிப்பு: திட்டமிடப்பட்ட மெசேஜ்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு அவை அனுப்பப்படும் வரை மட்டுமே Apple சர்வர்களில் சேமிக்கப்படும். மெசேஜ் அனுப்பப்படும்போது, அது Apple சர்வர்களில் இருந்து அகற்றப்படும். பலூன் திட நிறமாக மாறுவதுடன், இடைவெளியுடன் கூடிய கோடு மறைந்துவிடும்.

மெசேஜை அனுப்ப வேண்டிய நேரத்தை மாற்றுதல்

மெசேஜின் டெலிவரி நேரம் வருவதற்குள் அதை நீங்கள் மறுதிட்டமிடலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் மறுதிட்டமிட விரும்பும் மெசேஜ் உள்ள உரையாடலுக்குச் செல்லவும்.

    மெசேஜைப் பார்க்க முடியவில்லை என்றால், உரையாடலின் கீழ்ப்பகுதிக்குக் கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும். திட்டமிடப்பட்ட மெசேஜ்கள் அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்குக் கீழே தோன்றலாம்.

  3. தேதிக்கு (திட்டமிடப்பட்ட மெசேஜுக்கு மேற்புறம் இருக்கும்) அருகே உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • மறுதிட்டமிடுதல்: “நேரத்தைத் திருத்து” என்பதைத் தட்டி, புதிய நேரத்தைத் தேர்வுசெய்து, பின்னர் புதிய நேரத்தைச் அமைக்க திட்டமிடலுக்கு வெளியே தட்டவும்.

    • உடனடியாக அனுப்புதல்: “மெசேஜை அனுப்பு” என்பதைத் தட்டவும்.

திட்டமிடப்பட்ட மெசேஜைத் திருத்துதல்

திட்டமிடப்பட்ட மெசேஜை அதன் டெலிவரி நேரத்திற்குள் திருத்தலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் திட்டமிடப்பட்ட மெசேஜைக் கொண்ட உரையாடலுக்குச் செல்லவும்.

    மெசேஜைப் பார்க்க முடியவில்லை என்றால், உரையாடலின் கீழ்ப்பகுதிக்குக் கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும். திட்டமிடப்பட்ட மெசேஜ்கள் அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்குக் கீழே தோன்றலாம்.

  3. மெசேஜ் பபுளைத் தொட்டுப் பிடித்து, “திருத்து” என்பதைத் தட்டவும்.

  4. திருத்தங்களைச் செய்து, அந்தத் திருத்தங்களுடன் மீண்டும் அனுப்ப திருத்தியதை அனுப்புவதற்கான பட்டன் ஐகானைத் தட்டவும் அல்லது திருத்தங்களை ரத்துசெய்ய திருத்தியதை ரத்துசெய்வதற்கான பட்டன் ஐகானைத் தட்டவும்.

திட்டமிடப்பட்ட மெசேஜை நீக்குதல்

ஒரு மெசேஜை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே நீக்கும்போது, அது ரத்துசெய்யப்பட்டு பெறுநருக்கு அனுப்பப்படாது.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நீக்க விரும்பும் திட்டமிடப்பட்ட மெசேஜைக் கொண்ட உரையாடலுக்குச் செல்லவும்.

    மெசேஜைப் பார்க்க முடியவில்லை என்றால், உரையாடலின் கீழ்ப்பகுதிக்குக் கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும். திட்டமிடப்பட்ட மெசேஜ்கள் அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்குக் கீழே தோன்றலாம்.

  3. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் மெசேஜைத் தொட்டுப் பிடித்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.