இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் கேலண்டர் அமைப்புகளை மாற்றுதல்

“கேலண்டர்” செயலியில் iCloud, Google, Microsoft Exchange, Yahoo போன்ற பல கணக்குகளை நீங்கள் சேர்க்கலாம். புதிய நிகழ்வுகளை உருவாக்குவதையும் உங்களுக்குப் பொருத்தமான வகையில் உங்கள் கேலண்டரைக் காட்டவும் இயல்புநிலை அமைப்புகளை மாற்றலாம். உதாரணமாக, புதிய நிகழ்வுகளுக்கான இயல்புநிலை கேலண்டரை நீங்கள் தேர்வுசெய்யலாம், புதிய நிகழ்வுகளின் நேரஅளவை மாற்றலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

iCloud, Google, Exchange அல்லது Yahoo கேலண்டர் கணக்குகளை அமைத்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. “கேலண்டர் கணக்கு” என்பதைத் தட்டி, “கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. சேவையின் பெயரைத் தட்டி (உதாரணமாக iCloud, Microsoft Exchange அல்லது Google), உள்நுழையவும்.

CalDAV கணக்கைச் சேர்த்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. “கேலண்டர் கணக்கு” என்பதைத் தட்டி, “கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. “வேறொரு கணக்கைச் சேர்” என்பதைத் தட்டி, “CalDAV கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் சர்வர் மற்றும் கணக்குத் தகவலை உள்ளிடவும்.

குறிப்பு: Push அறிவிப்புகளை ஆதரிக்காத கணக்கை நீங்கள் சேர்த்தால், அந்தக் கணக்கிலிருந்து உங்கள் கேலண்டரைப் புதுப்பிப்பதற்கான ஃபெட்ச் திட்டமிடலை நீங்கள் அமைக்கலாம். அமைப்புகள்  > செயலிகள் > கேலண்டர் என்பதற்குச் செல்லவும். “கேலண்டர் கணக்குகள்” என்பதைத் தட்டி, “புதிய தரவைப் பெறுக” என்பதைத் தட்டவும். “பெறுக” என்பதற்குக் கீழிருந்து ஓர் திட்டமிடலைத் தேர்வுசெய்ய வேண்டும். “தானியங்கு” என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் iPad சார்ஜ் செய்யப்பட்டு Wi-Fi உடன் இணைக்கப்பட்டிருக்கும்போது புதிய தரவுகள் பதிவிறக்கப்படும்.

இயல்புநிலை கேலண்டரைத் தேர்வுசெய்தல்

உங்களிடம் பல கேலண்டர்கள் இருந்தால், நீங்கள் இயல்புநிலை கேலண்டரைத் தேர்வுசெய்யலாம், அதுமட்டுமல்லாமல் நீங்கள் உருவாக்கும் புதிய நிகழ்வுகள் அனைத்தும் அந்த கேலண்டரில் தானாகச் சேர்க்கப்படும்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. இயல்புநிலை கேலண்டரைத் தட்டி, உங்கள் இயல்புநிலை கேலண்டராகப் பயன்படுத்த விரும்பும் கேலண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: ஒரு நிகழ்வை உருவாக்கிய பிறகும் அதை வேறு கேலண்டருக்கு நகர்த்தலாம். பல கேலண்டர்களைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ள, பல கேலண்டர்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

இயல்புநிலை நிகழ்வு அமைப்புகளை அமைத்தல்

புதிய நிகழ்வுகளுக்கான நேரஅளவு, வரவிருக்கும் நிகழ்விற்குச் செல்ல வேண்டிய நேரம் வரும்போது விழிப்பூட்ட வேண்டுமா என்பன போன்ற பல கேலண்டர் நிகழ்வுகளுக்கான இயல்புநிலை அமைப்புகளை நீங்கள் மாற்றலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • நிகழ்வுகளுக்கான இயல்புநிலை விழிப்பூட்டல் நேரங்களை அமைத்தல்: இயல்புநிலை விழிப்பூட்டல் நேரத்தைத் தட்டி, பிறந்த நாள், நிகழ்வுகள் அல்லது அனைத்து நாள் நிகழ்வுகளைத் தட்டவும், பிறகு ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    • வரவிருக்கும் நிகழ்வுக்கு புறப்படும் நேரம் வரும்போது விழிப்பூட்ட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய: இயல்புநிலை விழிப்பூட்டல் நேரத்தைத் தட்டி, “புறப்படும் நேரம்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

    • புதிய நிகழ்வுகளுக்கான இயல்புநிலை நேரஅளவை மாற்ற: புதிய நிகழ்வுகளுக்கான நேரஅளவைத் தட்டி, நேரத்தின் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

    • நீங்கள் ஒரு புதிய நிகழ்வை உருவாக்கும்போது கேலண்டர் இருப்பிடத்தைப் பரிந்துரைக்கிறதா என்பதைத் தேர்வுசெய்ய: இருப்பிடப் பரிந்துரைகளை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்கள் கேலண்டர் காட்டப்படும் விதத்தை மாற்றுதல்

உங்களுக்கு மிக முக்கியமான தகவல்களை ஹைலைட் செய்ய உதவும் வகையில் உங்கள் கேலண்டர் காட்டப்படும் விதத்தைப் பிரத்தியேகமாக்கலாம். உதாரணமாக, எந்த நாளில் வாரத்தைத் தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம், சீனம், ஹீப்ரு அல்லது ஹிஜ்ரி கேலண்டர் (கிரெகோரியன் கேலண்டருடன்) மற்றும் பலவற்றைக் காட்டலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • சீனம், ஹீப்ரு அல்லது ஹிஜ்ரி கேலண்டரைக் காட்டுதல்: “மாற்று கேலண்டர்கள்” என்பதைத் தட்டி, கேலண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.

    • வருடத்தின் ஒவ்வொரு வாரத்திற்கும் அடுத்துள்ள வார எண்ணைக் காட்ட: வார எண்களை ஆன் செய்யவும்.

    • “வாரக் காட்சி” என்பதில் தற்போதைய நாளை முதல் நாளாகக் காட்ட: “வாரக் காட்சியை இன்று தொடங்கு” என்பதை ஆன் செய்யவும்.

    • வாரத்தைத் தொடங்க வேறு ஒரு நாளைத் தேர்வுசெய்ய: வாரத்தைத் தொடங்கும் தேதியைத் தட்டவும், “நாள்” என்பதைத் தட்டவும்.

நீங்கள் கேலண்டரைப் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் அனைத்துச் செயலிகளிலும் பரிந்துரைகளைச் செய்ய Siriஐ நீங்கள் அனுமதிக்கலாம். அமைப்புகள் > செயலிகள் > கேலண்டர் என்பதற்குச் சென்று, “Siri” என்பதைத் தட்டி, “இந்தச் செயலியில் இருந்து கற்றுக்கொள்” என்பதை ஆன் செய்யவும். கேலண்டர் பரிந்துரைகளையும் உள்ளடக்கத்தையும் தேடல் மற்றும் விட்ஜெட்களில் காட்டுவதற்கும் அறிவிப்புகளாகக் காட்டுவதற்கும் நீங்கள் அனுமதிக்கலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.