இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் வன்பொருள் அம்சங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் iPadஇல் உள்ள கேமராவையும் மைக்ரோஃபோனையும் செயலிகள் பயன்படுத்துவதற்கு முன், அதற்கான அனுமதியை அவை உங்களிடம் கேட்கவேண்டும் அத்துடன் அதற்கான விளக்கத்தையும் வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு சமூக வலைதளச் செயலி உங்கள் கேமராவைப் பயன்படுத்தக் கேட்கலாம், இதனால் நீங்கள் படமெடுத்து அந்தச் செயலியில் பதிவேற்றலாம். அதேபோல் Bluetooth® இணைப்பு, மோஷன் மற்றும் ஃபிட்னஸ் சென்சார்கள் உங்கள் லோக்கல் நெட்வொர்க்கில் உள்ள சாதனங்கள் ஆகியவை உட்பட பல்வேறு மென்பொருள் அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான அணுமதியை செயலிகள் உங்களிடம் கேட்கவேண்டும்.

இந்த வன்பொருள் அம்சங்களுக்கான அணுகலை எந்தெந்தச் செயலிகள் கோரியுள்ளன என்பதை நீங்கள் மறுஆய்வு செய்யலாம், உங்கள் விருப்பப்படி அவற்றின் அணுகலை மாற்றலாம்.

கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் பிற வன்பொருள் அம்சங்களுக்கான அணுகலை மறுஆய்வு செய்தல் அல்லது மாற்றுதல்

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. கேமரா, Bluetooth, லோக்கல் நெட்வொர்க், மைக்ரோஃபோன் போன்ற வன்பொருள் அம்சத்தைத் தட்டவும்.

பட்டியல் அணுகலைக் கோரிய செயலிகலைக் காட்டுகிறது. பட்டியலில் உள்ள எந்தவொரு செயலிக்கும் அணுகலை நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

குறிப்பு: ஒரு செயலி கேமராவைப் பயன்படுத்தும் போதெல்லாம் (கேமரா மற்றும் மைக்ரோஃபோன் ஒன்றாக பயன்படுத்தப்படும் போதும்) பச்சை நிற இண்டிகேட்டர் காட்டப்படும். ஒரு செயலி கேமரா இல்லாமல் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் போதெல்லாம் திரையின் மேற்புறத்தில் ஆரஞ்சு நிற இண்டிகேட்டர் காட்டப்படும். மேலும், ஒரு செயலி சமீபத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிக்க, கட்டுப்பாட்டு மையத்தின் மேலே ஒரு மெசேஜ் காட்டப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.