இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் திரை ஒளிர்வையும் நிறத்தையும் சரிசெய்தல்

iPadஇல், உங்கள் திரையின் ஒளிர்வைக் குறைக்கலாம் அல்லது வெளிச்சமாக்கலாம் (ஒளிர்வைக் குறைப்பது பேட்டரி ஆயுளை நீட்டிக்கும்). அடர் பயன்முறை, True Tone, Night Shift ஆகியவற்றைப் பயன்படுத்தி திரை நிறத்தையும் ஒளிர்வையும் நீங்களே சரிசெய்யலாம் அல்லது தானாகச் சரிசெய்யப்படும் வகையில் அமைக்கலாம்.

திரையின் ஒளிர்வை நீங்களே சரிசெய்தல்

அடர் பயன்முறை ஆன் செய்யப்பட்டுள்ள iPad முகப்புத் திரை.

உங்கள் iPadஇன் திரை ஒளிர்வைக் குறைக்க அல்லது பிரகாசமாக்க, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

திரையின் ஒளிர்வைத் தானாகச் சரிசெய்தல்

உள்ளமைக்கப்பட்ட ஆம்பியன்ட் லைட் சென்சாரைப் பயன்படுத்தி தற்போதுள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப திரை ஒளிர்வை iPad சரிசெய்யும்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை என்பதற்குச் செல்லவும்.

  2. “டிஸ்ப்ளே & வார்த்தை அளவு” என்பதைத் தட்டி, தானியங்கு ஒளிர்வை ஆன் செய்யவும்.

    “தானியங்கு ஒளிர்வு” அமைப்பை ஆஃப் செய்தால் ஆற்றல் நுகர்வு அதிகரிக்கலாம்.

அடர் பயன்முறையை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

குறைந்த வெளிச்சம் உள்ள சூழல்களுக்கு மிகவும் பொருத்தமான அடர் நிற அமைப்பை ஒட்டுமொத்த iPadக்கும் அடர் பயன்முறை வழங்குகிறது. அடர் பயன்முறையை ஆன் செய்வதன் மூலம், சில சூழல்களில் உங்கள் iPadஐப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக, படுத்துக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு அருகில் இருப்பவருக்கு எந்த இடையூறும் இல்லாமல் படித்தல்.

பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • அடர் பயன்முறையை ஆன் அல்லது ஆஃப் செய்ய, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, “ஒளிர்வு” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, “தோற்றம்” பட்டன்-ஐத் தட்டவும்.

  • அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் சென்று, “அடர் பயன்முறையை” ஆன் செய்ய “அடர்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது அதை ஆஃப் செய்ய “வெளிர்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடர் பயன்முறை தானாக ஆன் அல்லது ஆஃப் செய்யப்படும் வகையில் திட்டமிடுதல்

இரவில் (அல்லது பிரத்தியேகமாகத் திட்டமிடப்பட்ட நேரத்தில்) அடர் பயன்முறை தானாக ஆன் செய்யப்படும் வகையில் அமைப்புகளில் நீங்கள் அமைக்கலாம்.

  1. அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் செல்லவும்.

  2. “தானியங்கு” என்பதை ஆன் செய்து “விருப்பங்கள்” என்பதைத் தட்டவும்.

  3. “சூரிய உதயம் முதல் சூரியன் மறைவு வரை” என்பதையோ “பிரத்தியேகத் திட்டமிடல்” என்பதையோ தேர்ந்தெடுக்கவும்.

    பிரத்தியேகத் திட்டமிடலைத் தேர்வுசெய்தால், அடர் பயன்முறையை நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்ய விரும்பும் நேரத்தைத் திட்டமிடுவதற்கான விருப்பங்களைத் தட்டவும்.

    “சூரிய உதயம் முதல் சூரியன் மறைவு வரை” விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு எப்போது இரவுநேரம் என்பதைத் தீர்மானிப்பதற்காக உங்கள் கடிகாரம் மற்றும் புவி இருப்பிடத்தில் உள்ள தரவை iPad பயன்படுத்தும்.

Night Shiftஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்

Night Shiftஐ நீங்களாகவே ஆன் செய்யலாம், பகல் பொழுதில் இருட்டான அறையில் நீங்கள் இருக்கும்போது இது உதவிகரமானதாக இருக்கும்.

கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, “ஒளிர்வு” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, “Night Shift” பட்டன்-ஐத் தட்டவும்.

Night Shift தானாக ஆன் அல்லது ஆஃப் செய்யப்பட அதைத் திட்டமிடுதல்

இரவில் உங்கள் டிஸ்ப்ளேவின் நிறங்களை ஸ்பெக்ட்ரமின் “வார்மர்” என்பதன் இறுதிப்பகுதி வரை மாற்றி உங்கள் கண்களுக்கு இதமாக இருக்கும் வகையில் திரையை மாற்ற Night Shiftஐத் திட்டமிடவும்.

  1. அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு > Night Shift என்பதற்குச் செல்லவும்.

  2. “திட்டமிடப்பட்டது” என்பதை ஆன் செய்யவும்.

  3. Night Shiftக்கான கலர் பேலன்ஸைச் சரிசெய்ய, “நிறச் செறிவு” என்பதற்குக் கீழே உள்ள ஸ்லைடரில் ஸ்பெக்ட்ரமின் “வார்மர்” அல்லது “கூலர்” என்பதன் இறுதிப்பகுதி வரை இழுக்கவும்.

  4. “தொடக்க நேரம்” என்பதைத் தட்டி, “சூரிய உதயம் முதல் சூரியன் மறைவு வரை” என்பதையோ “பிரத்தியேகத் திட்டமிடல்” என்பதையோ தேர்ந்தெடுக்கவும்.

    பிரத்தியேகத் திட்டமிடலைத் தேர்வுசெய்தால், Night Shiftஐ நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்ய விரும்பும் நேரத்தைத் திட்டமிடுவதற்கான விருப்பங்களைத் தட்டவும்.

    “சூரிய உதயம் முதல் சூரியன் மறைவு வரை” விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு எப்போது இரவுநேரம் என்பதைத் தீர்மானிப்பதற்காக உங்கள் கடிகாரம் மற்றும் புவி இருப்பிடத்தில் உள்ள தரவை iPad பயன்படுத்தும்.

    குறிப்பு: அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் சென்று இருப்பிடச் சேவைகளை ஆஃப் செய்தாலோ, அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் சென்று “நேர மண்டலத்தை அமைத்தல்” விருப்பத்தை ஆஃப் செய்தாலோ “சூரிய உதயம் முதல் சூரியன் மறைவு வரை” விருப்பம் கிடைக்காது.

True Toneஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், உங்களைச் சுற்றியுள்ள வெளிச்சத்திற்குப் பொருந்தும் வகையில் டிஸ்ப்ளேவின் வண்ணத்தையும் வெளிச்சத்தையும் True Tone தானாக மாற்றும்.

பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • True Toneஐ ஆன் அல்லது ஆஃப் செய்ய, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, “ஒளிர்வு” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து “True Tone” பட்டன்-ஐத் தட்டவும்.

  • அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் சென்று, True Toneஐ ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.