இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள வாய்ஸ் மெமோக்கள் பதிவை கோப்புகளுக்கு எக்ஸ்போர்ட் செய்தல்

உங்கள் iPadஇல் உள்ள வாய்ஸ் மெமோவிலிருந்து எந்தப் பதிவையும் கோப்புகள் செயலிக்கு எக்ஸ்போர்ட் செய்யலாம். இயல்பாக, பதிவுகள் .m4a வடிவமைப்பில் எக்ஸ்போர்ட் செய்யப்படும். இதன் மூலம் லேயர் செய்த பதிவுகள் தட்டையாக்கப்பட்டு ஸ்பேஷியல் ஆடியோ ஸ்டீரியோவாக மாற்றப்படும். இருப்பினும், நீங்கள் பகிரும்போது, லேயர்கள் அல்லது பதிவு செய்வதற்கான எஃபெக்ட்கள் எதையேனும் தக்கவைத்துக்கொள்ள உங்கள் பகிர்வு விருப்பங்களை மாற்றத் தேர்வுசெய்யலாம்.

கோப்புகளுக்குப் பதிவை எக்ஸ்போர்ட் செய்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “வாய்ஸ் மெமோக்கள்” செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் பதிவைத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. எஃபெக்ட்களையும் லேயர்களையும் பின்னர் மாற்றக்கூடிய வகையில் உள்ள ஒரு கோப்பை (QuickTime ஆடியோ வடிவமைப்பு) எக்ஸ்போர்ட் செய்ய, “விருப்பங்கள்” என்பதைத் தட்டி, “திருத்தக்கூடியது” என்பதைத் தட்டவும். உங்கள் லேயர்களை இணைக்க வேண்டுமா அல்லது பிரிக்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. கீழே ஸ்க்ரால் செய்து, “கோப்புகளில் சேமி” என்பதைத் தட்டி, பதிவைச் சேமிக்க விரும்பும் இடத்தைத் தேர்வுசெய்து, “சேமி” என்பதைத் தட்டவும்.

கோப்புகள் செயலியில் இருந்து, உங்கள் பதிவை Logic Proக்கு இம்போர்ட் செய்யலாம், அங்கு தொழில்முறையான ஆடியோ எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி அதைத் திருத்தலாம் அல்லது மேம்படுத்தலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.