இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் பங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

பங்குச்சந்தையின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், நீங்கள் பின்தொடரும் பங்குகளின் செயல்திறனைப் பார்க்கவும் “பங்குகள்” செயலியைப் பயன்படுத்தவும்.

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள், “How are the markets doing?” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

iPadஇல் “பங்குகள்” செயலியின் திரையில் காலை நேரத்தில் பங்கின் செயல்திறனைக் காட்டும் வரைபடம் காட்டப்பட்டுள்ளது. இடது புறத்தில் டிக்கர் குறியீடுகளின் பட்டியல் உள்ளது. வரைபடத்திற்கு மேலே ஒரு வாரம் அல்லது மாதங்கள், வருடங்கள் என அதிகரிக்கும் காலப் பகுதிகளில், 10 வருடங்கள் வரை பங்கின் செயல்திறனைப் பார்ப்பதற்கான பட்டன்கள் உள்ளன. வரைபடத்திற்குக் கீழே தொடக்க விலை, அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை, சந்தை மூலதனம் போன்ற பங்கு தொடர்பான விவரங்களும் வணிகம் தொடர்பான செய்திகளுக்கு இணைப்புகளும் உள்ளன.

பங்குகளைச் சரிபார்த்தல்

ஒரு பங்கின் மிகச் சமீபத்திய விலை, தினசரி சதவீத மாற்றம், சந்தை மூலதன மதிப்பு மற்றும் பலவற்றை நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள டிக்கர் குறியீட்டைத் தட்டவும் அல்லது குறியீட்டைத் தேடுவதற்கு மேலே உள்ள தேடல் புலத்தைப் பயன்படுத்தவும். பிறகு தேடல் முடிவுகளில் உள்ள குறியீட்டைத் தட்டவும்.

மேலும் விவரங்களுக்கு, கீழே உள்ள விளக்கப்படங்கள், விவரங்கள் மற்றும் செய்திகளைக் காட்டுதல் என்பதைப் பார்க்கவும்.

“எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் குறியீடுகளை நிர்வகித்தல்

பங்குகள் செயலியை முதன்முதலாகத் திறக்கும்போது, டிக்கர் குறியீடுகளின் பட்டியல் திரையில் தோன்றும். இது “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியல் என்று அழைக்கப்படும். “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலைப் புதுப்பித்து நிர்வகிக்கலாம். மேலும் உங்களின் சொந்த விருப்பப் பட்டியல்களை உருவாக்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குறியீட்டைச் சேர்க்க: தேடல் புலத்தில், டிக்கர் குறியீடு, நிறுவனத்தின் பெயர், நிதியின் பெயர் அல்லது குறியீட்டை உள்ளிடவும். தேடல் முடிவுகளில் “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “உரையை அழி” பட்டன்-ஐத் தட்டவும்.

    • குறியீட்டை நீக்க: உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள குறியீட்டில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து “அகற்று” என்பதைத் தட்டவும்.

      குறிப்பு: “எனது குறியீடுகள்” விருப்பப் பட்டியலில் இருந்து ஒரு குறியீட்டை நீங்கள் நீக்கினால், அந்தக் குறியீடு உங்களின் பிற விருப்பப் பட்டியல்களில் இருந்தும் நீக்கப்படும் (பல விருப்பப் பட்டியல்களை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்).

    • குறியீடுகளை மறுவரிசைப்படுத்த: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “விருப்பப் பட்டியலைத் திருத்து” என்பதைத் தட்டி, "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, புதிய இடத்திற்குக் குறியீட்டை இழுக்கவும்.

    • வர்த்தகம் செய்யப்படும் பங்கின் நாணய வகையைக் காட்டுதல்: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “விருப்பப் பட்டியல் காட்டுவது” என்பதைத் தட்டி, “கரன்சியைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    • குறியீட்டைப் பகிர: உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ள ஒரு குறியீட்டில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “பகிர்” என்பதைத் தட்டிய பிறகு, மெசேஜஸ், Mail போன்ற பகிர்வு முறையைத் தேர்வுசெய்யவும்.

விளக்கப்படங்கள், விவரங்கள் மற்றும் செய்திகளைக் காட்டுதல்

டிக்கர் குறியீடுகளைப் பற்றிய ஊடாடும் விளக்க அட்டவணைகள், செயல்திறன் விவரங்கள் மற்றும் தொடர்புடைய செய்திகளை உங்கள் விருப்பப்பட்டியல் மற்றும் நீங்கள் தேடும் குறியீடுகளில் பார்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பங்குகள் செயலிக்குச் செல்லவும்.

  2. மேலும் விவரங்களைப் பார்க்க விரும்பும் குறியீட்டின் மீது தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • காலப்போக்கில் பதிவான செயல்திறனைக் காட்ட: விளக்கப்பட அட்டவணையின் மேலே உள்ள நேர வரம்பு தேர்வுகளிலிருந்து விருப்பத்தைத் தட்டவும்.

    • குறிப்பிட்ட தேதி அல்லது நேரத்திற்கான மதிப்பைக் காட்ட: விளக்கப்படத்தை ஒரு விரலால் தொட்டு பிடிக்கவும்.

    • காலப்போக்கில் பதிவான மதிப்பில் உள்ள வேறுபாட்டைக் காட்ட: இரண்டு விரல்களால் விளக்கப்படத்தைத் தொட்டு பிடித்துக் கொள்ளவும்.

    • மேலும் விவரங்களைக் காட்ட: 52-வார உயர் மற்றும் தாழ்வு, பீட்டா, EPS மற்றும் சராசரி வர்த்தக அளவு போன்ற கூடுதல் பங்கு விவரங்களை அட்டவணைக்குக் கீழே பார்க்கவும்.

    • செய்திகளைப் படிக்க: குறியீடு தொடர்பான கூடுதல் செய்திகளைப் பார்க்க மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் அல்லது சைடுபாரில் உள்ள “வணிகச் செய்திகள்” என்பதைத் தட்டி, ஒரு செய்தியைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் விருப்பப்பட்டியலில் உள்ள குறியீட்டைத் தொட்டுப் பிடித்து அதன் செயல்திறனை விரைவாகப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.