iPadஇல் கேம் தொடர்பான அமைப்புகளை மாற்றுதல்

Apple Games செயலி மற்றும் Game Center அமைப்புகளை மாற்றுவதன் மூலம் iPadஇல் உங்கள் கேமிங் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கலாம். இந்த அமைப்புகள் மூலம் அறிவிப்புகள், நட்புக் கோரிக்கைகள், மல்டிபிளேயர் கேமிங் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம்.

Apple Games செயலியின் அமைப்புகளை மாற்றுதல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “கேம்ஸ்” என்பதைத் தட்டி பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் கேமிங் செயல்பாட்டை ஒன்றிணைத்து தொடர்புடைய உள்ளடக்கத்தைக் காட்டுதல் அல்லது மறைத்தல்: “கேமிங் செயல்பாடுகளை ஒன்றிணைத்தல்” என்பதைத் ஆன் செய்யவும்.

    • கேம்ஸ் பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களை Appleக்கு அறிக்கையளிக்கப் பயன்படுத்தப்படும் அடையாளத் தகவலை மீட்டமைத்தல்: “அடையாளத் தகவலை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

Game Center அமைப்புகளை மாற்றுதல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. Game Center என்பதைத் தட்டி பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • நண்பர்களைப் பார்த்தல்: “அனைத்து நண்பர்களும்” என்பதைத் தட்டவும்.

    • நட்புக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்: “நட்புக் கோரிக்கைகள்” என்பதைத் தட்டவும்.

    • உங்கள் Game Center நண்பர்களின் பட்டியலை அணுக செயலிகளுக்கு அனுமதி வழங்குதல் அல்லது மறுத்தல்: “நண்பர்கள் பட்டியலைப் பகிர்” என்பதைத் தட்டி, “நண்பர்கள் பட்டியலைப் பகிர்” என்பதை ஆன் செய்யவும்.

    • உங்கள் Apple கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியையும் ஃபோன் எண்ணையும் பயன்படுத்தி உங்களைக் கண்டறிய Game Center நண்பர்களை அனுமதித்தல்: “உங்களைக் கண்டறிய நண்பர்களுக்கு உதவுங்கள்” என்பதை ஆன் செய்யவும்.

    • செயல்பாட்டுப் பகிர்வை நிர்வகித்தல்: உங்கள் சுயவிவரம், சாதனையின் செயல்நிலை, லீடர்போர்டு புதுப்பிப்புகள், சமீபத்தில் விளையாடிய கேம்கள் ஆகியவற்றைப் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைக் குறிப்பிட “அனைவரும்”, “நண்பர்கள் மட்டும்” அல்லது “நீங்கள் மட்டுமே” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • அருகிலுள்ள பிளேயர்களிடம் இருந்து அழைப்புகளை அனுமதித்தல்: அதே கேமை விளையாடும் அருகிலுள்ள Game Center பிளேயர்கள் Wi-Fi அல்லது Bluetooth® மூலம் மல்டிபிளேயர் கேம் விளையாட உங்களை அழைப்பதை அனுமதிக்க “அருகிலுள்ள பிளேயர்கள்” என்பதை ஆன் செய்யவும்.

    • Game Centerஇல் இருந்து வெளியேறுதல்: வெளியேறுக என்பதைத் தட்டவும்.

Game Center கட்டுப்பாடுகளை மாற்றுதல்

நட்புக் கோரிக்கைகள், மல்டிபிளேயர் கேம்கள், செயலிக்குள் வாங்குதல்கள் ஆகிய அம்சங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் Game Center கட்டுப்பாடுகளை அமைத்து, பாதுகாப்பான, மேலும் கட்டுப்படுத்தப்பட்ட கேமிங் அனுபவத்தை உருவாக்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” என்பதைத் தட்டி, “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” என்பதை ஆன் செய்யவும்.

  3. “App Store, மீடியா, இணையம் & கேம்கள்” என்பதைத் தட்டி, Game Centerக்கு ஸ்க்ரால் செய்து, பின்வரும் ஏதேனும் கட்டுப்பாடுகளை அமைக்கவும்:

    • மல்டிபிளேயர் கேம்கள்

    • நண்பர்களைச் சேர்த்தல்

    • நண்பர்களுடன் இணைதல்

    • திரைப் பதிவு

    • அருகிலுள்ள மல்டிபிளேயர்

    • தனிப்பட்ட மெசேஜிங்

    • சுயவிவரத் தனியுரிமை மாற்றங்கள்

    • அவதார் & புனைபெயர் மாற்றங்கள்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.