இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் உங்கள் தரவைப் பார்வையிடுதல்

உங்கள் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். உதாரணமாக, காலப்போக்கில் உங்கள் அளவீடுகள் மாறுகின்றனவா என்பதைச் சரிபார்ப்பதுடன் செயல்பாடு, உறக்கம், மனநிறைவு மற்றும் பலவற்றுக்கான இலக்குகளை நீங்கள் எவ்வளவு சிறப்பாக அடைகிறீர்கள் எனப் பார்க்கலாம்.

“சுருக்கவிவரம்” திரையில் நீங்கள் பின் செய்துள்ள உடல்நல வகைகளைப் பிரத்தியேகமாக்குதல்

உங்களுக்கு மிகவும் முக்கியம் எனக் கருதும் உடல்நல வகைகளான மருந்துகள், இதயத்துடிப்பு, காலடிகள் போன்ற பலவற்றை பின் செய்து ஒழுங்கமைக்கலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி, பின் செய்தவை என்பதற்கு அடுத்துள்ள “திருத்து” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உடல்நலன் வகையைப் பின் செய்ய: ஒரு வகைக்கு அடுத்துள்ள “பின் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • உடல்நல வகையின் பின்னை அகற்ற: ஒரு வகைக்கு அடுத்துள்ள “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • உங்கள் பின் செய்யப்பட்ட பட்டியலில் உள்ள உடல்நல வகைகளை மறுவரிசைப்படுத்த: ஒரு வகைக்கு அருகில் மேலே அல்லது கீழே உள்ள "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐ இழுக்கவும்.

  4. நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்கள் ஹைலைட்களைப் பார்வையிடுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி, உங்கள் சமீபத்திய உடல்நலம் மற்றும் உடற்பயிற்சித் தரவின் ஹைலைட்களைப் பார்க்க “ஹைலைட்கள்” என்பதற்குச் செல்லவும்.

  3. பின்வருவனவற்றைச் செய்யவும்:

    • ஹைலைட் பற்றிய கூடுதல் தரவைக் காட்ட: அதன் கிராஃபைத் தட்டவும்.

    • அனைத்து ஹைலைட்களையும் பார்க்க: “அனைத்து ஹைலைட்டுகளையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

உங்கள் உடல்நல நிலவரங்களைப் பார்வையிடுதல்

காலப்போக்கில் உங்கள் உடல்நலத் தரவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க உதவ, ஓய்வெடுக்கும் நேரத்தில் இதயத்துடிப்பின் விகிதம், காலடிகளின் எண்ணிக்கை, உறக்கத்தின் அளவு போன்ற தரவுகளின் வகைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து உடல்நலம் செயலி உங்களுக்குத் தெரிவிக்க முடியும். இந்த அளவீடுகள் எவ்வளவு மாறியுள்ளன, எவ்வளவு காலத்திற்கு மாறியுள்ளன என்பதை “நிலவர வரிகள்” காட்டும்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியைத் திறக்கவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி சமீபத்திய டிரெண்ட்டுகளைப் பார்க்க “டிரெண்ட்டுகள்” என்பதில் கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும்.

  3. உடல்நலம் செயலி, உடல்நல நிலவரங்களைக் கண்டறிந்திருந்தால், நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

    • டிரெண்டு பற்றிய கூடுதல் தரவைக் காட்ட: அதன் கிராஃபைத் தட்டவும்.

    • அனைத்து டிரெண்ட்டுகளையும் பார்க்க: “அனைத்து உடல்நல நிலவரங்களையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

உங்கள் உடல்நல நிலவரங்கள் குறித்த அறிவிப்புகளைப் பெற, “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி, மேலே இடதுபுறத்தில் உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களுக்கு அடுத்துள்ள “சுயவிவரம்” என்பதைத் தட்டி, “அறிவிப்புகள்” என்பதைத் தட்டி, “நிலவரங்கள்” என்பதை ஆன் செய்யவும்.

குறிப்பிட்ட உடல்நல வகைக்கான உடல்நல நிலவரங்கள், ஹைலைட்கள், விவரங்களைப் பார்வையிடுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. உடல்நல வகைகள் பட்டியலைக் காட்ட, “தேடு” பட்டன்-ஐத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • ஒரு பிரிவைத் தட்டவும். (அனைத்து வகைகளையும் பார்க்க, மேலும் கீழும் ஸ்க்ரால் செய்யவும்.)

    • தேடல் புலத்தைத் தட்டி, ஒரு வகையின் பெயரை (நகர்வுநிலை போன்றவை) அல்லது ஒரு குறிப்பிட்ட வகைத் தரவை (வாக்கிங் வேகம் போன்றவை) டைப் செய்யவும்.

  3. தரவு வகையைப் பொறுத்து, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்ய முடியும்:

    • ஏதேனும் ஒரு தரவைப் பற்றிய விவரங்களைப் பார்க்க: “விவரங்கள்” பட்டன் என்பதைத் தட்டவும்.

    • தரவுகளின் வாராந்தர, மாதாந்தர மற்றும் வருடாந்தரக் காட்சிகளைப் பார்க்க: திரையின் மேல்பகுதியில் உள்ள தாவல்களைத் தட்டவும்.

    • தரவை நேரடியாக உள்ளிட: திரையின் மேல் வலது மூலையில் உள்ள “தரவைச் சேர்” பட்டனைத் தட்டவும்.

    • சுருக்கவிவரத் திரையில் பின் செய்ய: “சுருக்கவிவரத்தில் பின் செய்” என்பதைத் தட்டவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

    • தரவைப் பகிர அனுமதிக்கப்படும் செயலிகளையும் சாதனங்களையும் பார்க்க: “விருப்பங்கள்” என்பதற்குக் கீழே உள்ள, தரவு ஆதாரங்கள் & அணுகல் என்பதைத் தட்டவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

    • தரவை நீக்க: “விருப்பங்கள்” என்பதற்குக் கீழே உள்ள “அனைத்துத் தரவுகளையும் காட்டு” என்பதைத் தட்டி, தரவுப் பதிவில் இடதுபக்கம் ஸ்வைப் செய்து, “நீக்கு” என்பதைத் தட்டவும். அனைத்துத் தரவுகளையும் நீக்க, “திருத்து” என்பதைத் தட்டி, “அனைத்தையும் நீக்கு” என்பதைத் தட்டவும்.

    • அளவீட்டு அலகை மாற்ற: “விருப்பங்கள்” என்பதற்குக் கீழே உள்ள “யூனிட்” என்பதைத் தட்டி, யூனிட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி கீழே “உடல்நலம் செயலியிலிருந்து மேலும் பெறுக” அல்லது கட்டுரைகள் என்பதற்கு ஸ்க்ரால் செய்யவும்.

  3. மேலும் அறிய ஓர் ஐட்டத்தைத் தட்டவும்.

பல உடல்நல வகைகளில் உள்ள விவரங்களைப் பார்க்கும்போது, உங்கள் தரவுகளுடன் சேர்த்து பரிந்துரைக்கப்படும் செயலிகளும் காட்டப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.