இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள மேப்ஸில் பின் செய்வதன் மூலம் ஓர் இடத்தைக் குறித்தல்

இடங்களைக் குறிக்க பின்களைப் பயன்படுத்துவதன் மூலம் அந்த இடங்களைப் பின்னர் எளிதாகக் கண்டறியலாம்.

பூங்காவின் மேப்பில் குறிக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் மேப்ஸ் செயலி. இருப்பிடத்திற்கு திசைகளைப் பெறுவதற்கான பட்டன்கள், அதைச் சுற்றியுள்ள பகுதியைப் பதிவிறக்கவும் அல்லது மேல் இடதுபக்கம் தோன்றும் வகையில் நகர்த்தவும்.

பின்னைச் சேர்த்தல்

பின்னைச் சேர்ப்பதன் மூலம் இருப்பிடத்தை வேறொருவருடன் பகிரலாம், மேப்பில் ஏற்கெனவே குறிக்கப்படாத ஓர் இடத்தில் இருந்து உங்கள் வழித்தடத்தைத் தொடங்கலாம் அல்லது முடிக்கலாம். “இடங்கள்” பக்கத்தில் பல பின்களைச் சேமித்திருக்காத பட்சத்தில், ஒரு நேரத்தில் ஒரு பின் மட்டுமே காட்டப்படும்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின் மார்க்கர் தோன்றும்வரை மேப்பைத் தொட்டு பிடிக்கவும்.

    இடத்தைத் துல்லியமாகக் காட்ட, “நகர்த்து” என்பதைத் தட்டிய பிறகு மேப்பை இழுக்கவும்.

  3. பின்னைத் தட்டவும். பின்களைப் பயன்படுத்தி பல இடங்களைக் குறிக்க, ஒவ்வொரு பின்னாகச் சேர்க்கும்போதே அவற்றைச் சேமிக்கவும்.

பின் செய்த இடத்திற்கான வழிகளைப் பெற, பின்னைத் தட்டி, வழிகள் பட்டனைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: மேப்ஸ் செயலி மூடப்பட்டிருக்கும்போது உங்கள் தற்போதைய இருப்பிடத்தைக் குறிக்க வேண்டுமெனில், முகப்புத் திரையில் உள்ள மேப்ஸ் ஐகானைத் தொட்டுப் பிடித்து, “எனது இருப்பிடத்தைக் குறி” என்பதைத் தேர்வுசெய்யவும். விரைவு செயல்களைச் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

பின் செய்ததைப் பகிர்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • பின் மார்க்கர் தோன்றும் வரை மேப்பைத் தொட்டு பிடித்து, “பகிர்” பட்டன்-ஐ (கார்டின் மேல் பகுதியில் உள்ளது) தட்டவும்.

    • “இடங்கள்” என்பதைத் தட்டி, “பின் செய்தவை” என்பதைத் தட்டி, பின்னை இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “பகிர்” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் அதை எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

பின் செய்யப்பட்ட இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்களைப் பெறுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதைத் தட்டி, “பின் செய்தவை” என்பதைத் தட்டி, பிறகு பின்னைத் தட்டவும்.

  3. ஆயத்தொலைவுகளைப் பெற மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் (விவரங்களுக்குக் கீழே இவை இருக்கும்).

  4. ஆயத்தொலைவுகளைத் தொட்டுப் பிடித்து “நகலெடு” என்பதைத் தட்டவும்.

நீங்கள் சேமித்த பின்களைப் பார்த்தல்

“மேப்ஸ்” செயலியைத் திறக்கும்போது உங்கள் “இடங்கள்” பக்கத்தில் பின்கள் வரிசையாக ஐகான்களாகக் காட்டப்படும்.

ஒரு பகுதியின் மேப்பைக் காட்டும் மேப்ஸ் செயலி. மேலே இடதுபக்கத்தில் தேடல் புலம் உள்ளது. அதற்குக் கீழே Siri பரிந்துரைகள், “இடங்கள்” என்பதில் பின் செய்தவை, சமீபத்திய தேடல்கள் ஆகியவை உள்ளன.

பின் விவரத்தைத் திருத்துதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதைத் தட்டி “பின் செய்தவை” என்பதைத் தட்டவும்.

  3. “தகவல்” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • பின்னின் பெயரை மாற்ற: லேபிள் புலத்தில் தட்டவும்.

    • அதை உங்கள் வீடு, பணியிடம், பள்ளி போன்ற ஏதேனும் ஒன்றின் முகவரியுடன் பொருத்த: “வகை” என்பதற்குக் கீழே உள்ள விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • பின்னின் இடத்தை மாற்ற: “மேப்பில் இடத்தைத் துல்லியமாக்கு” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: “மேப்ஸ்” செயலி, எனது கார்டு ஆகியவற்றில் உள்ள தகவல்களை ஒத்திசைக்க கோரிய பிறகு உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை நீங்கள் மாற்றினால், மேப்ஸ், தொடர்புகள் ஆகிய இரண்டிலும் நீங்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். “இடங்கள்” பிரிவில் ஓர் இடத்தின் பின்னைச் சேர்த்தல் மற்றும் “எனது கார்டு” என்பதை நிறைவுசெய்தல் அல்லது திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

பின்னை அகற்றுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதைத் தட்டி “பின் செய்தவை” என்பதைத் தட்டவும்.

  3. பின் செய்த இடத்தின் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

“தகவல்” பட்டன்-ஐத் தட்டி, “பின்னை அகற்று” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.