இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் கேலண்டர் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

கேலண்டர் செயலியைப் பயன்படுத்தி சந்திப்புகள், முன்பதிவுகள், நினைவூட்டல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணிக்கலாம்.

கேலண்டர் கணக்கைச் சேர்ப்பதற்கான அமைப்புகளில் பல்வேறு கேலண்டர் சேவை வழங்குநர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

உங்கள் நிகழ்வுகள் அனைத்தும் ஒரே இடத்தில்

கேலண்டர் செயலியில், iCloud, Google, Microsoft Exchange போன்ற பல்வேறு சேவை வழங்குநர்களின் கேலண்டர் கணக்குகளைச் சேர்க்கலாம். கணக்கைச் சேர்க்க, அமைப்புகள்  > செயலிகள் > கேலண்டர் என்பதற்குச் செல்லவும். “கேலண்டர் கணக்குகள்” என்பதைத் தட்டி, “கணக்கைச் சேர்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

வாரக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கேலண்டரில் நிகழ்வை உருவாக்குவதற்கான சாளரம் காட்டப்பட்டுள்ளது.

நிகழ்வுகளை உருவாக்குதல்

பணியிடச் சந்திப்புகளில் தொடங்கி குடும்பக் கொண்டாட்டங்கள் வரை அனைத்திற்கும் நிகழ்வுகளை உருவாக்கி அவற்றைக் கண்காணிக்கலாம். திரையின் மேலே உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

வாரக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கேலண்டரில் நினைவூட்டலை உருவாக்குவதற்கான சாளரம் காட்டப்பட்டுள்ளது.

விரைவு நினைவூட்டலைச் சேர்த்தல்

உங்கள் நிகழ்வுகளுடன் நினைவூட்டல்களையும் சேர்த்து அவற்றை ஒழுங்கமைக்கலாம். திரையின் மேலே உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “நினைவூட்டல்” என்பதைத் தட்டி, தலைப்பை உள்ளிடவும். “தேதி” என்பதைத் தட்டி நினைவூட்டலுக்கான தேதியைத் தேர்வுசெய்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

iPadஇல் உள்ள கேலண்டர் வாரக் காட்சியிலும் iPhoneஇல் உள்ள அதே கேலண்டர் நாள் காட்சியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

சாதனங்களில் கேலண்டரை ஒத்திசைத்தல்

ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள அனைத்துச் சாதனங்களிலும் iCloudஐப் பயன்படுத்தி உங்கள் கேலண்டர் தகவல்களை நீங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கலாம். அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் செல்லவும். “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்கு அடுத்துள்ள “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி, “கேலண்டர்” என்பதை ஆன் செய்யவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.