iPadஇல் உள்ள “இடம் அறி” செயலியில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்

உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர “இடம் அறி” செயலியைப் பயன்படுத்துவதற்கு முன், இருப்பிடப் பகிர்வை அமைக்க வேண்டும்.

குறிப்பு: நீங்கள் இருப்பிடப் பகிர்வை அமைத்துள்ள போதிலும் மற்றவர்களால் உங்கள் இருப்பிடத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > இடம் அறி என்பதற்குச் சென்று “இருப்பிடச் சேவைகள்” ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும். எல்லா இடங்களிலும் இருப்பிடப் பகிர்வு கிடைப்பதில்லை. நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவலைக் கட்டுப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

ஒரு ஐட்டத்திற்கு மொத்தம் ஆறு பயனர்கள் என்னும் வகையில், AirTag அல்லது பிற ஐட்டத்தை உங்களுடன் கூடுதலாக ஐந்து பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இருப்பிடப் பகிர்வை அமைத்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நான்” என்பதைத் தட்டி, “எனது இருப்பிடத்தைப் பகிர்” என்பதை ஆன் செய்யவும்.

    உங்கள் இருப்பிடத்தைப் பகிரும் சாதனத்தின் பெயர் “பகிரும் சாதனம்” என்பதற்கு அடுத்து காட்டப்படும்.

  3. உங்கள் iPad தற்போது உங்கள் இருப்பிடத்தைப் பகிரவில்லை என்றால், “என் இருப்பிடத்தைக் கண்டறிய இந்த iPadஐப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: மற்றொரு சாதனத்திலிருந்து உங்கள் இருப்பிடத்தைப் பகிர, சாதனத்தில் “இடம் அறி” செயலியைத் திறந்து உங்கள் இருப்பிடத்தை அந்தச் சாதனத்திற்கு மாற்றவும்.

அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > இடம் அறி என்பதற்குச் சென்றும் உங்கள் இருப்பிடப் பகிர்வு அமைப்புகளை மாற்றலாம்.

உங்கள் இருப்பிடத்திற்கு லேபிளை அமைத்தல்

உங்கள் தற்போதைய இருப்பிடத்தை இன்னும் தெளிவாகக் குறிக்கும் வகையில் லேபிளை அமைக்கலாம் (உதாரணம்: வீடு, பணியிடம்). “நான்” என்பதைத் தட்டினால், உங்கள் இருப்பிடத்துடன் கூடுதலாக லேபிளும் காட்டப்படும்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நான்” என்பதைத் தட்டி, “இருப்பிட லேபிள்” என்பதைத் தட்டவும்.

  3. லேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.

    புதிய லேபிளைச் சேர்க்க, “பிரத்தியேக லேபிளைச் சேர்” என்பதைத் தட்டி, பெயரை உள்ளிட்டு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

உங்கள் இருப்பிடத்தை நண்பருடன் பகிர்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, “சேர்” பட்டன்-ஐத் தட்டவும், பிறகு “எனது இருப்பிடத்தைப் பகிர்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  3. “உடன்” புலத்தில், உங்கள் இருப்பிடத்தைப் பகிர விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும் (அல்லது “தொடர்பைச் சேர்” பட்டன் பட்டனைத் தட்டி, தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்).

  4. “அனுப்பு” என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை எவ்வளவு நேரம் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

உங்கள் இருப்பிடம் மாறும்போது நண்பரிடமோ குடும்ப உறுப்பினரிடமோ தெரிவிக்கலாம்.

நீங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதை நிறுத்துதல்

குறிப்பிட்ட நண்பருடன் உங்கள் இருப்பிடப் பகிர்வை நிறுத்தலாம் அல்லது இருப்பிடத்தை அனைவரிடமிருந்தும் மறைக்கலாம்.

  • நண்பருடன் பகிர்வதை நிறுத்த: திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, உங்கள் இருப்பிடத்தைப் பகிர விரும்பாத நபரின் பெயரைத் தட்டவும். “எனது இருப்பிடப் பகிர்வை நிறுத்து” என்பதைத் தட்டி, “இருப்பிடப் பகிர்வை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

  • அனைவரிடமிருந்தும் உங்கள் இருப்பிடத்தை மறைக்க: திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நான்” என்பதைத் தட்டி, “எனது இருப்பிடத்தைப் பகிர்” என்பதை ஆஃப் செய்யவும்.

இருப்பிடப் பகிர்வுக் கோரிக்கைக்குப் பதிலளித்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டவும்.

  3. கோரிக்கையை அனுப்பிய நண்பரின் பெயருக்குக் கீழே “பகிர்” என்பதைத் தட்டி, உங்கள் இருப்பிடத்தை எவ்வளவு நேரம் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

    உங்கள் இருப்பிடத்தைப் பகிர விரும்பவில்லை என்றால் “ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.

புதிய இருப்பிடப் பகிர்வுக் கோரிக்கைகளைப் பெறுவதை நிறுத்துதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழே உள்ள “நான்” என்பதைத் தட்டி, “நட்புக் கோரிக்கைகளை அனுமதி” என்பதை ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.