இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலியைப் பயன்படுத்தி உங்களைச் சுற்றியுள்ள கதவுகள், நபர்கள், ஃபர்னிச்சரைக் கண்டறிதல்

நீங்கள் பார்வையற்றவராகவோ குறைந்த பார்வைத்திறன் கொண்டவராகவோ இருந்தால், iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலியைப் பயன்படுத்தி பின்வருபவை குறித்த பயனுள்ள தகவல்களைப் பெறலாம்:

  • கதவுகள், அவற்றின் பண்புக்கூறுகள் மற்றும் அவற்றைத் திறக்கும் விதம்

  • உடல் அல்லது சமூக இடைவெளியைத் தக்கவைக்க உங்களுக்கு உதவும் வகையில், அருகிலுள்ள நபர்கள் மற்றும் அவர்களுக்கு இடையிலான தூரம்

  • ஃபர்னிச்சர், நாற்காலிகள் அல்லது சோஃபாக்கள் கண்டறியப்படும்போது, அவற்றில் யாரேனும் உள்ளனரா என்ற விவரம்

முக்கியம்: உங்களுக்குத் தீங்கோ காயமோ ஏற்படக்கூடிய அதிக ஆபத்து அல்லது அவசரகாலச் சூழல்களிலும், வழிகளைப் பெறுவதற்கும் “கண்டறிதல்” பயன்முறையைச் சார்ந்திருக்கக்கூடாது. ஆதரிக்கப்படும் iPad மாடல்களில் மட்டுமே, கதவுகள், நபர்கள் மற்றும் ஃபர்னிச்சர் கண்டறிதல் அம்சம் கிடைக்கிறது.

“பெரிதாக்கி” செயலி திறக்கப்பட்டு, ஒரு கதவு கண்டறியப்படுகிறது. கதவு எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை விளக்கம் காட்டுகிறது.

உங்களுக்கு அருகிலுள்ள கதவுகள், நபர்கள், ஃபர்னிச்சரைக் கண்டறிதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. கண்டறிதல் பயன்முறையைத் தொடங்க “கண்டறிதல் பயன்முறை” பட்டன்-ஐத் தட்டவும்.

    நீங்கள் “கண்டறிதல் பயன்முறை” பட்டன்-ஐப் பார்க்கவில்லை என்றால், அதைச் சேர்க்கலாம். கட்டுப்பாடுகளைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

  3. “கண்டறிதல் பயன்முறை” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, பிறகு பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • நபர்கள்

    • ஃபர்னிச்சர்

    • கதவுகள்

  4. உங்கள் சுற்றுப்புறத்தைப் பின்புற கேமரா கண்டறிய முடியும் வகையில் iPadஐ வைக்கவும். அருகில் கதவுகள், நபர்கள் அல்லது ஃபர்னிச்சர் கண்டறியப்படும்போது, ஒலிகள் அல்லது பேச்சு ஃபீட்பேக்குடன் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் நெருங்கும்போது ஃபீட்பேக் அடிக்கடி கேட்கும்.

    ஒலி அல்லது பேச்சுவடிவ ஃபீட்பேக் கேட்கவில்லை என்றால், அமைதிப் பயன்முறை ஆன் செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். ஒலியளவைச் சரிசெய்தல் என்பதைப் பார்க்கவும்.

  5. கண்டறிதலைத் தற்காலிகமாக இடைநிறுத்த, இரண்டு விரல்களால் திரையை இருமுறை தட்டவும். கண்டறிதலை மீண்டும் தொடங்க இரண்டு விரல்களால் மீண்டும் இருமுறை தட்டவும். கண்டறிதல் பயன்முறையை நிறுத்த, “கண்டறிதல் பயன்முறை” பட்டன்-ஐத் தட்டவும்.

கதவுகளைக் கண்டறிவதற்கான அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. “அமைப்புகள்” பட்டன்-ஐத் தட்டி, “கண்டறி” என்பதைத் தட்டவும்.

  3. கதவுகளைத் தட்டி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரத்தியேகப்படுத்தவும்:

    • யூனிட்கள்: மீட்டர்கள் அல்லது அடியைத் தேர்வுசெய்யவும்.

    • ஒலி பிட்ச் தூரம்: ஒலி ஃபீட்பேக்கிற்கான தூரத்தைச் சரிசெய்ய “குறைப்பு” பட்டன் அல்லது “அதிகரிப்பு” பட்டன்-ஐத் தட்டவும். இந்தத் தூரத்திற்குள் கதவு கண்டறியப்படும்போது, ஒலி ஃபீட்பேக்கின் தொனி அதிகரிக்கும்.

    • ஃபீட்பேக்: லேபிள்கள், ஒலிகள், பேச்சு போன்றவற்றின் எந்தவொரு கலவையையும் ஆன் செய்துகொள்ளலாம். “பேச்சு” அம்சத்தை ஆன் செய்தால், உங்களுக்கும் கதவுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை iPad சொல்லும்.

    • நிறம்: கண்டறியப்பட்ட கதவுகளை அவுட்லைன் செய்து காட்டுவதற்கான நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    • கதவின் அம்சங்கள்: கண்டறியப்பட்ட கதவின் அளவு, கதவை எப்படித் திறப்பது, கதவு இப்போது திறந்துள்ளதா போன்ற கதவின் அம்சங்களின் எந்தவொரு கலவையையும் ஆன் செய்து கொள்ளலாம்.

    • கதவு அலங்காரங்கள்: கண்டறியப்பட்ட கதவின் மீதோ அருகிலோ எழுதப்பட்டுள்ள உரை, அடையாளக்குறிகள் போன்றவை குறித்த தகவல்களைப் பெற "கதவு அலங்காரங்கள்” என்பதை ஆன் செய்யவும். நுழைவாயில், கழிப்பறை போன்ற இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியும் என்பதைக் குறிக்கும் அடையாளக்குறிகளும் இதில் அடங்கும்.

  4. முடித்ததும் “பின்செல்” பட்டன்-ஐத் தட்டி அதை மீண்டும் தட்டவும், பின்னர் “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

நபர்களைக் கண்டறிவதற்கான அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. “அமைப்புகள்” பட்டன்-ஐத் தட்டி, “கண்டறி” என்பதைத் தட்டவும்.

  3. நபர்கள் என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைப் பிரத்தியேகமாக்கவும்:

    • யூனிட்கள்: மீட்டர்கள் அல்லது அடியைத் தேர்வுசெய்யவும்.

    • ஒலி பிட்ச் தூரம்: ஒலி ஃபீட்பேக்கின் தூரத்தைச் சரிசெய்ய “குறைப்பு” பட்டன் அல்லது “அதிகரிப்பு” பட்டன்-ஐத் தட்டவும். இந்தத் தூரத்திற்குள் நபர்கள் கண்டறியப்படும்போது, ஒலி ஃபீட்பேக்கின் தொனி அதிகரிக்கும்.

    • ஃபீட்பேக்: லேபிள்கள், ஒலிகள், பேச்சு போன்றவற்றின் எந்தவொரு கலவையையும் ஆன் செய்துகொள்ளலாம். “பேச்சு” அம்சத்தை ஆன் செய்தால், உங்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது என்பதை iPad சொல்லும்.

  4. முடித்ததும் “பின்செல்” பட்டன்-ஐத் தட்டி அதை மீண்டும் தட்டவும், பின்னர் “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

ஃபர்னிச்சரைக் கண்டறிவதற்கான அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. “அமைப்புகள்” பட்டன்-ஐத் தட்டி, “கண்டறி” என்பதைத் தட்டவும்.

  3. ஃபர்னிச்சர் என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைப் பிரத்தியேகப்படுத்தவும்:

    • யூனிட்கள்: மீட்டர்கள் அல்லது அடியைத் தேர்வுசெய்யவும்.

    • ஒலி பிட்ச் தூரம்: ஒலி ஃபீட்பேக்கின் தூரத்தைச் சரிசெய்ய “குறைப்பு” பட்டன் அல்லது “அதிகரிப்பு” பட்டன்-ஐத் தட்டவும். இந்தத் தூரத்திற்குள் ஃபர்னிச்சர் கண்டறியப்படும்போது, ஒலி ஃபீட்பேக்கின் தொனி அதிகரிக்கும்.

    • ஃபீட்பேக்: லேபிள்கள், ஒலிகள், பேச்சு போன்றவற்றின் எந்தவொரு கலவையையும் ஆன் செய்துகொள்ளலாம். “பேச்சு” அம்சத்தை ஆன் செய்தால், உங்களுக்கும் ஃபர்னிச்சருக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது என்பதை iPad சொல்லும்.

    • இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பற்றி தெரிவி: நாற்காலிகள் மற்றும் சோஃபாக்களில் அமர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களைப் பெற “இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பற்றி தெரிவி” என்பதை ஆன் செய்யவும்.

  4. முடித்ததும் “பின்செல்” பட்டன்-ஐத் தட்டி அதை மீண்டும் தட்டவும், பின்னர் “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.