இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Safari செயலியில் ஓர் இணையதளத்தை புக்மார்க் செய்தல்

பின்னர் ஒரு இணையதளத்திற்கு எளிதாகச் செல்லும் வகையில் இணையதளங்களை புக்மார்க் செய்யலாம், உங்கள் புக்மார்க்குகளை ஒழுங்கமைக்கலாம் அல்லது உங்கள் முகப்புத் திரையில் ஒரு இணையதள ஐகானைச் சேர்க்கலாம்.

திறந்திருக்கும் இணையப் பக்கம். “பகிர்” பட்டன் தட்டப்பட்டுள்ளது. “AirDrop”, “மெசேஜஸ்”, “Mail”, “குறிப்புகள்”, “நகலெடு”, “புக்மார்க்குகளில் சேர்”, “வாசிப்புப் பட்டியலில் சேர்”, “மேலும்” ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

ஓர் இணையதளத்தை புக்மார்க் செய்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் புக்மார்க் செய்ய விரும்பும் இணையதளத்திற்குச் செல்லவும்.

  3. தேடல் புலத்தின் வலதுபுறம் உள்ள “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புக்மார்க்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. ஓர் இருப்பிடத்தைத் தேர்வுசெய்து, “சேமி” என்பதைத் தட்டவும்.

திறந்த தாவல்களை புக்மார்க் செய்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் அனைத்துத் தாவல்களையும் பார்க்க, “தாவல்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3.  “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “[எண்ணிக்கை] தாவல்களுக்கு புக்மார்க்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

உங்கள் புக்மார்க்குகளைக் காட்டுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. “சைடுபாரைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டிய பிறகு "புக்மார்க்குகள்" (சேமித்தவை என்பதற்குக் கீழே உள்ளது) என்பதைத் தட்டவும்.

    சமீபத்தில் சேமிக்கப்பட்ட புக்மார்க்குகள், பிடித்தவை, வாசிப்பு பட்டியலில் உள்ள ஐட்டங்கள் ஆகியவை சைடுபாரின் மேலே காட்டப்படும். மிகவும் சமீபத்தியது இடதுபுறத்தில் இருக்கும், மற்றவற்றை ஸ்க்ரால் செய்து பார்த்துக்கொள்ளலாம். புக்மார்க்கை நகலெடுக்க, திறக்க, திருத்த அல்லது நீக்க அதைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யுங்கள்:

    • புதிய கோப்புறையை உருவாக்க: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புதிய கோப்புறை” என்பதைத் தட்டி ஒரு பெயரை உள்ளிட்ட பிறகு, “சேமி” என்பதைத் தட்டவும்.

    • புக்மார்க்கை ஒரு கோப்புறைக்குள் நகர்த்த: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புக்மார்க்குகளைத் தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, புக்மார்க்கைப் புதிய கோப்புறைக்கு இழுக்கவும். உங்கள் புக்மார்க்குகளுக்குச் செல்ல, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • புக்மார்க்கை நீக்குதல்: புக்மார்க்கைத் தொட்டுப் பிடித்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

    • புக்மார்க்கின் பெயரை மாற்றுதல்: புக்மார்க்கைத் தொட்டுப் பிடித்து, “திருத்து” என்பதைத் தட்டி, புதிய பெயரை உள்ளிட்டு, “சேமி” என்பதைத் தட்டவும்.

    • புக்மார்க்குகளை மறுவரிசைப்படுத்த: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புக்மார்க்குகளைத் தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, புக்மார்க்கை புதிய இடத்திற்கு இழுக்கவும். உங்கள் புக்மார்க்குகளுக்குச் செல்ல, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

iPadஇல் உங்கள் Mac புக்மார்க்குகளைப் பார்த்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டி iCloud என்பதைத் தட்டவும்.

  3. “அனைத்தையும் காட்டு” (iCloudஇல் சேமிக்கப்படுகிறது என்பதற்கு அடுத்துள்ளது) என்பதைத் தட்டி Safari ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: உங்கள் Macஇல் உள்ள iCloud அமைப்புகளில் Safariஐ ஆன் செய்திருக்க வேண்டும். மேலும் அதே Apple கணக்கு மூலம் உள்நுழைய வேண்டும். iCloud பயனர் வழிகாட்டியில் உள்ள உங்கள் சாதனங்கள் அனைத்திலும் Safari செயலிக்கான iCloudஐ அமைத்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

முகப்புத் திரையில் இணையதள ஐகானைச் சேர்த்தல்

விரைவான அணுகலுக்காக உங்கள் iPad முகப்புத் திரையில் இணையதள ஐகானைச் சேர்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. இணையதளத்தைப் பார்க்கும்போது, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, பிறகு “முகப்புத் திரையில் சேர்” என்பதைத் தட்டவும்.

    இணையதளத்தை ஒரு செயலி போலப் பயன்படுத்த “இணையச் செயலியாகத் திற” என்பதைத் தேர்வுசெய்யலாம். இணையதளத்தைச் செயலியாக மாற்றுதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

  3. “சேர்” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் சேர்க்கும் சாதனத்தில் மட்டுமே ஐகான் தோன்றும்.

குறிப்பு: அறிவிப்புகளை அனுப்புவதற்காக சில இணையதளங்கள் உங்களிடம் அனுமதி கேட்கலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் அறிவிப்பு அமைப்புகளை மாற்றலாம். அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.