இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

VoiceOver மூலம் iPadஇல் பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துதல்

நீங்கள் Bluetooth® வயர்லெஸ் ரிஃப்ரெஷபிள் பிரெய்ல் டிஸ்ப்ளேவை VoiceOver மூலம் இணைத்து, அதை iPadஐக் கட்டுப்படுத்தவும் சாதனம் முழுவதும் நகரவும் திரையில் உள்ளவற்றைப் படிக்கவும் பயன்படுத்தலாம். டிஸ்ப்ளேவில் நீங்கள் டைப் செய்யும் பிரெய்ல் தானாக உரையாக மாற்றப்படும், குறிப்பிட்ட சூழலில் நீங்கள் டைப் செய்பவை டிஸ்ப்ளேவில் காட்டப்படும். பல சர்வதேச பிரெய்ல் அட்டவணைகள் ஆதரிக்கப்படுவதால் நீங்கள் கான்ட்ராக்ட் செய்யப்பட்ட அல்லது கான்ட்ராக்ட் செய்யப்படாத பிரெய்லைப் பயன்படுத்தி வாசிக்கலாம், டைப் செய்யலாம்.

ஆதரிக்கப்படும் பிரெய்ல் டிஸ்ப்ளேக்களுக்கான பட்டியலுக்கு, iPhone, iPad மற்றும் iPod touch ஆதரிக்கும் பிரெய்ல் டிஸ்ப்ளேக்கள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

பிரெய்ல் டிஸ்ப்ளேவை இணைத்து iPadஐக் கட்டுப்படுத்த கட்டளைகளைக் கற்றுக்கொள்ளுதல்

  1. பிரெய்ல் டிஸ்ப்ளேவை ஆன் செய்யவும்.

  2. iPadஇல், அமைப்புகள்  > Bluetooth என்பதற்குச் சென்று, Bluetoothஐ ஆன் செய்த பிறகு டிஸ்ப்ளேவைத் தேர்வுசெய்யவும்.

  3. iPadஇல், அமைப்புகள் > அணுகல்தன்மை > VoiceOver > பிரெய்ல் என்பதற்குச் சென்று டிஸ்ப்ளேவைத் தேர்வுசெய்யவும்.

  4. iPadஐக் கட்டுப்படுத்துவதற்கான பிரெய்ல் கட்டளைகளைப் பார்க்க, “கூடுதல் தகவல்” என்பதைத் தட்டி “பிரெய்ல் கட்டளைகள்” என்பதைத் தட்டவும்.

உங்கள் iPhone, iPad, மற்றும் iPod touchஇல் VoiceOver அம்சத்திற்கான பொது பிரெய்ல் கட்டளைகள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

பிரெய்ல் டிஸ்ப்ளே அமைப்புகளை மாற்றுதல்

  1. iPadஇல், அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > பிரெய்ல் என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றை அமைக்கவும்:

    அமைப்பு

    விளக்கம்

    உள்ளீடு மற்றும் வெளியீட்டு அட்டவணைகளைப் பொருத்துதல்

    உள்ளிடுவது, வெளியீட்டை வாசிக்கச் செய்வது இரண்டிற்கும் ஒரே முறையைப் பயன்படுத்தும் வகையில் பிரெய்ல் டிஸ்ப்ளேவை அமைக்கலாம்.

    உள்ளீடு மற்றும் வெளியீடு

    பிரெய்ல் உள்ளீடு மற்றும் வெளியீட்டை டைப் செய்ய நீங்கள் பயன்படுத்த விரும்பும் பிரெய்ல் அட்டவணையைத் தேர்வுசெய்யலாம். கூடுதல் மொழிகளையும் ஆறு புள்ளி அல்லது எட்டுப் புள்ளி பிரெய்ல் மற்றும் கான்ட்ராக்ட் செய்யப்பட்ட அல்லது கான்ட்ராக்ட் செய்யப்படாத பிரெய்லையும் அட்டவணைகளிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்.

    பிரெய்ல் திரை உள்ளீடு

    திரையைப் பயன்படுத்தி பிரெய்லை உள்ளிடுவதற்கான உள்ளீட்டு முறையைத் தேர்வுசெய்யலாம். VoiceOver மூலம் iPad திரையில் நேரடியாக பிரெய்லை டைப் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.

    பிரெய்ல் அட்டவணைகள்

    பிரெய்ல் அட்டவணை ரோட்டர்களில் அட்டவணைகளைச் சேர்க்கலாம்.

    பிரெய்ல் அணுகல்

    உங்கள் பிரெய்ல் டிஸ்ப்ளேயைப் பயன்படுத்தி பிரெய்ல் குறிப்புகள், BRF கோப்புகள் மற்றும் பலவற்றை விரைவாக அணுகலாம். பிரெய்ல் டிஸ்ப்ளே அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

    ஐட்டத்தின் மேலோட்டம்

    ஒரு ஐட்டத்திற்குக் காட்டப்படும் செல்களின் எண்ணிக்கையை மாற்றலாம். “ஐட்டத்தின் மேலோட்டம்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்ய புள்ளிகள் 6, 7 மற்றும் 8ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும்.

    தன்னியக்க மாறுதல்

    நீங்கள் டைப் செய்யும் பிரெய்ல், டைப் செய்ய நிறுத்தியவுடன் தானாகவே உரையாக மாற இந்த விருப்பத்தை ஆன் செய்யலாம்.

    ஸ்டேட்டஸ் செல்கள்

    பொதுவான மற்றும் உரைக்கான ஸ்டேட்டஸ் செல்களை ஆன் செய்து அவற்றுக்கான இடத்தைத் தேர்வுசெய்யலாம்.

    சமன்பாடுகள் நெமெத் குறியீட்டைப் பயன்படுத்துதல்

    கணிதச் சமன்பாடுகளுக்கு நெமெத் குறியீட்டை ஆன் செய்யலாம்.

    திரையில் உள்ள கீபோர்டைக் காட்டு

    திரையில் கீபோர்டு காட்டப்படும்.

    நகர்த்தும்போது பக்கங்களைத் திருப்புதல்

    நகர்த்தும்போது பக்கங்கள் தானாகத் திருப்பப்படும்.

    வார்த்தையை மடக்குதல்

    வார்த்தைகளை அடுத்த வரிக்கு எடுத்துச் செல்லும்.

    உரை வடிவமைப்பு

    தடித்த எழுத்து மற்றும் சாய்வெழுத்து போன்ற உரை வடிவமைப்புப் பண்புகளைக் காட்டும்.

    அடிக்கோடு கர்சரைப் பயன்படுத்து

    கர்சரை அடிக்கோடாகக் காட்டும்.

    பிரெய்ல் விழிப்பூட்டல் மெசேஜ்கள்

    ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் பிரெய்ல் டிஸ்ப்ளே குறிப்பிட்ட காலத்திற்கு விழிப்பூட்டல் மெசேஜைக் காட்டும்.

    கோர்டுக்கான கால அளவைப் புறக்கணித்தல்

    ஒரு கீயை அழுத்திய பிறகு அடுத்த கீயை அழுத்த எடுத்துக்கொள்ளப்படும் நேரமான பிரெய்ல் கோர்டுகளை மாற்றலாம்.

    தன்னியக்க முன்செலுத்துதல் நேரம்

    நீங்கள் வாசிக்கும் வேகத்திற்கு ஏற்ற வகையில் இந்த அமைப்பை மாற்றலாம்.

    ஒலி மறைப்பு

    பிரெய்ல் டிஸ்ப்ளே iPad உடன் இணைக்கப்படும்போது பெரும்பாலான ஒலிகள் ஒலிமுடக்கப்படும். அவசரநிலை விழிப்பூட்டல்கள் தொடர்ந்து ஒலிகளை எழுப்பும்.

    தொடங்கும்போது Bluetoothஐ ஆன் செய்தல்

    VoiceOverஐ ஆன் செய்தால் Braille டிஸ்ப்ளேக்கள் iPad உடன் இணைக்கப்படும் வகையில் Bluethooth தானாக ஆன் செய்யப்படும்.

மீடியா பிளேபேக் செய்யப்படும்போது பிரெய்லில் காட்டப்படும் வெளியீட்டுக் காட்சி விளக்கங்கள்

  1. iPadஇல், அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > மிகைச்சொற்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. “பிரெய்ல்” அல்லது “பேச்சு மற்றும் பிரெய்ல்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

2D பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துதல்

ஆதரிக்கப்படும் 2D பிரெய்ல் டிஸ்ப்ளேவை நீங்கள் பயன்படுத்தினால், படங்களைக் காட்டும் பயன்முறை, பல வரிகளில் காட்டப்படும் உரையை வாசிக்கும் பயன்முறை போன்ற பல்வேறு வெளியீட்டுப் பயன்முறைகளுக்கு இடையே மாற நீங்கள் ரோட்டரைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் பிரெய்ல் டிஸ்ப்ளேவை iPad உடன் இணைக்கவும்.

  2. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, வெளியீட்டுப் பயன்முறைகளுக்கு இடையே மாற, “பிரெய்ல் உரைப் பயன்முறை” ரோட்டரைப் பயன்படுத்தவும். ரோட்டரைப் பயன்படுத்தி VoiceOver அம்சத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.