இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் (Wi-Fi + cellular மாடல்கள்) மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்

நீங்கள் மொபைல் டேட்டா சேவையை ஆன் செய்யலாம், மொபைல் சேவையை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், எந்தெந்தச் செயலிகள் மற்றும் சேவைகள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தலாம் என்பதை அமைக்கலாம். சில நெட்வொர்க் வழங்குநர்களிடம் டேட்டா திட்டத்தையும் மாற்றலாம்.

மொபைல் நெட்வொர்க் சேவைகள், பில்லிங் ஆகியவற்றுக்கான உதவிக்கு, உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

குறிப்பு: Wi-Fi + cellular மாடல்கள் மொபைல் ஃபோன் சேவையை ஆதரிக்காது, அவை மொபைல் டேட்டா பரிமாற்றச் சேவையை மட்டுமே ஆதரிக்கும். Wi-Fi அழைப்பு, iPhone ஆகியவற்றைப் பயன்படுத்தி iPadஇல் ஃபோன் அழைப்புகளைச் செய்யலாம்.

மொபைல் டேட்டா பரிமாற்றம் பற்றி

மொபைல் டேட்டா நெட்வொர்க்கைப் பயன்படுத்தி உங்கள் iPadஐ இணையத்துடன் இணைந்திருந்தால், மொபைல் நெட்வொர்க்கைக் குறிக்கும் ஐகான் ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும்.

ஆதரிக்கப்படும் மாடல்களை 5G நெட்வொர்க்குகளுடன் இணைக்கலாம். உங்கள் iPadஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

மொபைல் டேட்டா ஆஃப் செய்யப்பட்டிருந்தால், மின்னஞ்சல், இணைய உலாவல், புஷ் அறிவிப்புகள் உட்பட அனைத்து டேட்டா சேவைகளும் Wi-Fiஐ மட்டுமே பயன்படுத்தும். மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், நெட்வொர்க் வழங்குநர் கட்டணங்கள் பொருந்தக்கூடும். எடுத்துக்காட்டாக, தரவைப் பரிமாற்றும் சில அம்சங்கள் மற்றும் சேவைகளை (மெசேஜஸ் செயலி போன்றவை) பயன்படுத்துவதன் விளைவாக உங்கள் டேட்டா திட்டத்தில் கட்டணம் விதிக்கப்படலாம்.

iPadஇல் மொபைல் சேவைத் திட்டத்தைச் சேர்த்தல்

முன்பு ஒரு மொபைல் சேவைத் திட்டத்தை அமைத்திருந்தால், அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் சென்று, “புதிய திட்டத்தைச் சேர்க்கவும்” என்பதைத் தட்டி திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

நீங்கள் சேவைத் திட்டத்தை அமைத்திருக்கவில்லை என்றால், iPadஇல் (Wi-Fi + Cellular மாடல்கள்) மொபைல் சேவையை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் மொபைல் டேட்டா கணக்கைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்

அமைப்புகள்  > மொபைல் டேட்டா என்பதற்குச் சென்று, “[கணக்கின் பெயர்] கணக்கை நிர்வகியுங்கள்” அல்லது “நெட்வொர்க் வழங்குநர்” என்பதைத் தட்டவும்.

டேட்டா பயன்பாடு, செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் பலவற்றுக்கான மொபைல் டேட்டா விருப்பங்களைத் தேர்வுசெய்தல்

மொபைல் டேட்டாவை ஆன் அல்லது ஆஃப் செய்ய, அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் செல்லவும்.

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, விருப்பங்களை அமைக்க, அமைப்புகள் > மொபைல் சேவை > மொபைல் டேட்டா விருப்பங்கள் என்பதற்குச் சென்று பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • மொபைல் சேவை பயன்பாட்டைக் குறைத்தல்: குறைந்த டேட்டா பயன்முறையை ஆன் செய்யவும் அல்லது “டேட்டா பயன்முறை” என்பதைத் தட்டி, “குறைந்த டேட்டா பயன்முறை” என்பதைத் தேர்வுசெய்யவும் (உங்கள் iPad மாடலைப் பொறுத்தது). Wi-Fi உடன் iPadஐ இணைத்திருக்காதபோது, இந்தப் பயன்முறை தானியங்குப் புதுப்பிப்புகளையும் பின்னணிப் பணிகளையும் இடைநிறுத்தும்.

  • ரோமிங் கட்டணங்களைத் தவிர்த்தல்: டேட்டா ரோமிங் அம்சத்தை ஆஃப் செய்தல். உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத பகுதியில் நீங்கள் இருக்கும்போது, மொபைல் டேட்டா நெட்வொர்க்கின் மூலம் இணையத்தை அணுக டேட்டா ரோமிங் அம்சம் அனுமதிக்கிறது. நீங்கள் பயணம் செய்யும்போது ரோமிங் கட்டணங்களைத் தவிர்க்க “டேட்டா ரோமிங்” அமைப்பை ஆஃப் செய்யலாம்.

உங்கள் iPad மாடல், நெட்வொர்க் வழங்குநர் மற்றும் வட்டாரத்தைப் பொறுத்து பின்வரும் விருப்பங்கள் கிடைக்கக்கூடும்:

  • LTEஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்: LTEஐ ஆன் செய்தால் டேட்டா அதிக வேகத்தில் ஏற்றப்படும்.

5G ஆதரிக்கப்படும் மாடல்களில், நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • பேட்டரி நிலையை மேம்படுத்த “ஸ்மார்ட் டேட்டா பயன்முறை” அம்சத்தைச் செயல்படுத்துதல்: “வாய்ஸ் & டேட்டா” என்பதைத் தட்டி “5G ஆட்டோ” என்பதைத் தேர்வுசெய்யவும். இந்தப் பயன்முறையில், 5G வேகம் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்த செயல்திறனை வழங்காதபோது உங்கள் iPad தானாகவே LTEக்கு மாறும்.

  • 5G நெட்வொர்க்குகளில் உயர்தர வீடியோ மற்றும் FaceTime HDஐப் பயன்படுத்துதல்: “டேட்டா பயன்முறை” என்பதைத் தட்டி “5Gஇல் கூடுதல் டேட்டாவை அனுமதி” என்பதைத் தேர்வுசெய்யவும்.

iPadஇல் இருந்து மொபைல் டேட்டா இணைய இணைப்பைப் பகிரத் தொடங்குவதற்கு ஒரு தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டை அமைத்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “மொபைல் சேவை” என்பதைத் தட்டி, மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும்.

  3. “தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டை அமைக்கவும்” என்பதைத் தட்டி, தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் iPad (Wi-Fi + Cellular) இணைய இணைப்பைப் பகிர்ந்துகொள்ளுதல் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

செயலிகள் மற்றும் சேவைகளுக்கான மொபைல் டேட்டா பயன்பாட்டை அமைத்தல்

அமைப்புகள்  > மொபைல் டேட்டா என்பதற்குச் சென்று, மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு செயலி (மேப்ஸ் போன்றவை) அல்லது சேவைக்கும் (Wi-Fi Assist போன்றவை) மொபைல் டேட்டாவை ஆன்/ஆஃப் செய்யவும்.

அமைப்பு ஆஃப் செய்யப்பட்டிருந்தால், iPad அந்தச் சேவைக்கு Wi-Fiஐ மட்டுமே பயன்படுத்தும்.

குறிப்பு: Wi-Fi அசிஸ்ட் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். Wi-Fi இணைப்பு மோசமாக இருந்தால், சிக்னலை அதிகரிக்க Wi-Fi அசிஸ்ட் தானாகவே மொபைல் டேட்டாவுக்கு மாறும். உங்களிடம் மோசமான Wi-Fi இணைப்பு இருக்கும்போது நீங்கள் மொபைல் சேவை நெட்வொர்க்கில் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பீர்கள் என்பதால், நீங்கள் அதிக மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தக்கூடும், இதனால் உங்கள் டேட்டா திட்டத்தைப் பொறுத்து கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படக்கூடும். Wi-Fi அசிஸ்ட்டைப் பற்றி என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் SIM கார்டை லாக் செய்தல்

மொபைல் டேட்டாவுக்கு உங்கள் சாதனம் SIM கார்டைப் பயன்படுத்தினால், மற்றவர்கள் கார்டைப் பயன்படுத்தாதபடி தடுக்கும் வகையில் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) மூலம் கார்டை லாக் செய்யலாம். பின்னர், உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கும்போதெல்லாம் அல்லது SIM கார்டை அகற்றும்போதெல்லாம், உங்கள் கார்டு தானாகவே லாக் ஆகும், உங்கள் பின் எண்ணை உள்ளிடவும் வேண்டும். iPhone அல்லது iPadக்கு SIM PINஐப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.