இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadOS 26இல் புதியவை

சாளரமாக்கல்.சாளரங்களைத் திறந்து, உங்களுக்கு விருப்பமான வகையில் அவற்றின் அளவுகளை மாற்றலாம், அவற்றை ஒழுங்கமைக்கலாம். கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, சாளரங்களை மூடலாம் அல்லது அவற்றைச் சிறிதாக்கலாம், முழுத்திரையில் வைக்கலாம், எளிதில் பார்க்கக்கூடிய லே-அவுட்களில் அவற்றை வரிசைப்படுத்தலாம். உங்கள் அனைத்துச் சாளரங்களையும் பார்க்க மேல்நோக்கி ஸ்வைப் செய்து, நீங்கள் முன்னால் நகர்த்த விரும்பும் சாளரத்தின் மீது தட்டவும். ஒரே நேரத்தில் பல செயலிகளில் பணியாற்றுதல், திறந்துள்ள சாளரங்களின் லே-அவுட்டை மாற்றுதல், செயலியில் சாளரங்களைத் திறத்தல் மற்றும் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

iPadஇல் மூன்று வெவ்வேறு அளவிலான சாளரங்கள் திறக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன.

பூட்டுத் திரை.பூட்டுத் திரைப் புகைப்படம் அல்லது வால்பேப்பருக்கு ஏற்ப திரையில் காட்டப்படும் கடிகாரம் அதன் நிலையைத் தானாகவே மாற்றிக் கொள்ளும், இதனால் திரையில் உள்ளவற்றைப் பார்ப்பதில் உங்களுக்கு இடையூறு ஏற்படாது. iPadஐ நகர்த்தும்போது, பூட்டுத் திரைப் புகைப்படம் புதிய 3D எஃபெக்ட்டுடன் தத்ரூபமாகத் தெரியும். பிரத்தியேக iPad பூட்டுத் திரையை உருவாக்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

பிரத்தியேகப் படத்துடன் கூடிய iPad பூட்டுத்திரை திரை முழுவதும் காட்டப்பட்டுள்ளது.

முகப்புத் திரை.உங்கள் முகப்புத் திரையில் உள்ள செயலி ஐகான்கள் புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளன. அவற்றை நீங்கள் வெவ்வேறு நிறங்களில் டின்ட் செய்யலாம் அல்லது வெளிர், அடர், தெளிவு போன்றவற்றுக்கு மாற்றலாம். iPad முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் பிரத்தியேகமாக்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

iPad முகப்புத் திரையில் தெளிவான ஐகான்கள் காட்டப்பட்டுள்ளன.

Apple Intelligence. *ஏற்கெனவே உள்ள இமோஜியைப் பயன்படுத்தியோ, வெவ்வேறு இமோஜிகளை ஒருங்கிணைத்தோ, விளக்க உரையைப் பயன்படுத்தியோ பிரத்தியேக Genmojiஐ உருவாக்கலாம். உங்கள் புகைப்பட லைப்ரரியில் உள்ள நபர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் Genmoji மற்றும் Image Playground படைப்புகளின் தோற்றத்தையும் உணர்வையும் மாற்றலாம். உங்கள் மெசேஜஸ் உரையாடல்களுக்குப் பிரத்தியேகப் பின்னணிகளை வடிவமைக்கலாம். “நேரலை மொழிபெயர்ப்பு” அம்சம் மெசேஜஸில் உள்ள உரைகளைத் தானாக மொழிபெயர்க்கும், FaceTime அழைப்புகளில் மொழிபெயர்த்த நேரலை கேப்ஷன்களைக் காட்டும், மேலும் ஃபோன் அழைப்புகளுக்குப் பேச்சு மொழிபெயர்ப்புகளை வழங்கும். iPadஇல் Image Playground மூலம் அசல் படங்களை உருவாக்குதல், iPadஇல் நீங்களே Genmoji மூலம் இமோஜியை உருவாக்குதல், Image Playground மூலம் அசல் பின்னணிகளை உருவாக்குதல் திருத்துதல், iPadஇல் மெசேஜ்களையும் அழைப்புகளையும் மொழிபெயர்த்தல்ஆகியவற்றைப் பார்க்கவும்.

ஃபோன்.ஃபோன் செயலி இப்போது iPadஇல் கிடைக்கிறது. உங்கள் ஃபோனை ரிங் செய்வதற்கு முன்பு தேவையான தகவல்களைச் சேகரிக்கும் “அழைப்புச் சோதனை” அம்சத்தின் மூலம், தெரியாத எண்களால் ஏற்படும் தேவையற்ற கவனச்சிதறல்களைக் குறைக்கலாம். அழைப்பை எடுப்பதா, நிராகரிப்பதா அல்லது கூடுதல் தகவல்களைக் கேட்பதா என்று தகவலறிந்த முடிவுகளை நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி எடுக்கலாம். உங்கள் அழைப்பு ஹோல்டு செய்யப்படும்போது ஹோல்டு அசிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தி காத்திருந்து, மீண்டும் அழைப்பிற்குத் திரும்புவதற்கான நேரம் வரும்போது அறிவிப்பைப் பெறலாம். iPadஇல் அழைப்பைச் செய்தல், iPadஇல் அழைப்புகளை ஸ்கிரீன் செய்து தடுத்தல், ஹோல்டில் இல்லாதபோது அறிவிப்பைப் பெறுதல் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

கோப்புகள்.பட்டியல் காட்சியில், அளவு மாற்றக்கூடிய நெடுவரிசைகள் மற்றும் சுருக்கக்கூடிய கோப்புறைகள் மூலம் உங்கள் கோப்புகளையும் அவற்றின் விவரங்களையும் இன்னும் சிறப்பாகப் பார்க்கலாம். உங்கள் கோப்புறைகளை ஒரே பார்வையில் எளிதில் கண்டறியும் வகையில் பிரத்தியேக ஐகான்கள் மற்றும் நிறங்களை அமைக்கலாம். ஒரு கோப்பைத் திறக்க நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட கோப்புகள் அல்லது கோப்பு வகைகளுக்கான இயல்புநிலைச் செயலியை அமைக்கலாம். Dockஇல் கோப்புறைகளைச் சேர்க்கும்போது, கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம். iPad சாதனத்தில் உள்ள “கோப்புகள்” செயலில் கோப்புகளையும் கோப்புறைகளையும் மாற்றுதல், iPadஇல் “கோப்புகள்” செயலியில் உள்ள கோப்புகளையும் கோப்புறைகளையும் கண்டறிதல் மற்றும் பார்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

iPad முகப்புத் திரையில், Dockஇல் இருந்து திறக்கக்கூடிய கோப்புகள் காட்டப்பட்டுள்ளன.

முன்னோட்டம்.இப்போது iPadஇல் “முன்னோட்டம்” செயலி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் PDF ஆவணங்களையும் படங்களை எளிதில் பார்க்கலாம், திருத்தலாம், பகிரலாம். ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம், “தானாக நிரப்புதல்” அம்சத்தைப் பயன்படுத்திப் படிவங்களை விரைவாக நிரப்பலாம், PDF அல்லது படங்களை வேறு கோப்பு வகைகளாகவோ வேறு அளவுகளிலோ எக்ஸ்போர்ட் செய்யலாம். iPadஇல் முன்னோட்டம் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

“முன்னோட்டம்” செயலி திறந்துள்ளது, திரை முழுவதிலும் ஆவணம் காட்டப்பட்டுள்ளது. திரையின் மேல்பகுதியில் ஆவணத்திற்கான “மார்க்-அப் செய்”, “தானாக நிரப்புதல்”, “கிராப் செய்”, “சுழற்று” ஆகிய பட்டன்கள் காட்டப்பட்டுள்ளன.

ஃபோட்டோஸ்.உங்கள் லைப்ரரி மற்றும் சேகரிப்புகளுக்கு இடையே எளிதாக மாறும் வகையில் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது “சேகரிப்புகள்” காட்டப்படும் விதத்தை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம், அவற்றை மறுவரிசைப்படுத்தலாம், பின் செய்யவேண்டியதைத் தேர்வுசெய்யலாம், மூன்று டிஸ்ப்ளே அளவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: பெரிய டைல்கள், அடர்த்தியான கிரிட் அல்லது மேல் வரிசையை ஹைலைட் செய்து காட்டும் லே-அவுட். iPadஇல் உங்கள் புகைப்பட லைப்ரரியைப் பார்த்தல், iPadஇல் உங்கள் புகைப்படச் சேகரிப்புகளைப் பார்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

ஃபோட்டோஸ் செயலி திறந்துள்ளது. மேலும் சைடுபாரில் “லைப்ரரி” தாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டல்கள்.(iPadOS 26.2) நினைவூட்டல் ஒலிப்பதற்கான நேரம் வரும்போது உங்களை எச்சரிக்கக்கூடிய அலாரத்தை அமைக்க, நினைவூட்டலை அவசர நினைவூட்டல் எனக் குறிக்கவும். iPadஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலியில் விவரங்களைச் சேர்த்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

மெசேஜஸ்.தெரியாத எண்களிலிருந்து வரும் மெசேஜ்கள் நீங்கள் மறுபரிசீலனை செய்வதற்கும் அங்கீகரிப்பதற்கும், ஃபில்டர் செய்யப்பட்டு உங்கள் உரையாடல் பட்டியலில் ஒரு தனி பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன. “பின்னணிகள்” மூலம் உரையாடல்களைத் தனிப்பயனாக்கலாம். இதன் மூலம் டைனமிக் பின்னணிகள், உங்களுடைய புகைப்படங்கள், Image Playgroundஇல் நீங்கள் உருவாக்கும் பின்னணிகள் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தலாம். குழு உரையாடல்களில், முடிவெடுப்பதற்கு உதவியாக நீங்கள் கருத்துக்கணிப்புகளை உருவாக்கலாம், Apple Cashஐப் பயன்படுத்திப் பணம் அனுப்பலாம், டைப்பிங் இண்டிகேட்டர்களைப் பார்க்கலாம். iPadஇல் மெசேஜ்களை ஸ்கிரீன் செய்தல் மற்றும் ஃபில்டர் செய்தல், iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலியில் பின்னணிகளைச் சேர்த்தல் மற்றும் iPadஇல் மெசேஜஸ் செயலியில் வாக்கெடுப்பு நடத்துதல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

டைனமிக் பின்னணியுடன் மெசேஜஸ் உரையாடல் காட்டப்பட்டுள்ளது.

கேம்ஸ்.நீங்கள் விளையாடும் அனைத்து கேம்களையும் கண்காணிக்கவும், புதிய கேம்களைக் கண்டறியவும், பொருத்தமான பரிந்துரைகளைப் பெறவும், நண்பர்களுடன் சவால்களைத் தொடங்கவும் இந்தப் புதிய செயலி உதவும். iPadஇல் Apple Games செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

அணுகல்தன்மை.இணைக்கப்பட்ட பிரெய்ல் டிஸ்ப்ளே மூலம் பிரெய்ல் பயனர்கள் “பிரெய்ல் அணுகல்” அம்சத்தில் புதிய அனுபவத்தைப் பெறலாம். அதன் மூலம் குறிப்பு எடுக்கலாம், ஆவணங்களை வாசிக்கச் செய்து கேட்கலாம், நேரலை கேப்ஷன்களை அணுகலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். “வாகன நகர்வுப் புள்ளிகள்” அம்சம் இயங்கும் வாகனங்களில் பயணிகளுக்கு ஏற்படும் குமட்டல் உணர்வைக் குறைக்க உதவும். நீங்கள் வேறொருவரின் சாதனத்திலும் உங்கள் அணுகல்தன்மை அமைப்புகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். iPadஇல் பிரெய்ல் டிஸ்ப்ளே மூலம் பிரெய்ல் அணுகலைப் பயன்படுத்துதல், வாகனத்தில் பயணிக்கும்போது iPadஐ இன்னும் வசதியாகப் பயன்படுத்துதல், iPadஇல் இருந்து உங்கள் அணுகல்தன்மை அமைப்புகளை வேறொரு சாதனத்துடன் பகிர்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

iPadஇல் பிரெய்ல் அணுகல் மெனு திறக்கப்பட்டு, பின்வரும் விருப்பங்கள் காட்டப்பட்டுள்ளன: செயலியைத் தொடங்குதல், ஐட்டத்தைத் தேர்வுசெய்தல், பிரெய்ல் குறிப்புகள், BRF கோப்புகள், கால்குலேட்டர், நேரலை கேப்ஷன்கள் மற்றும் நேரம்.

குடும்பம்.சாதனத்தை அமைக்கும்போது, 13–17 வயதுடைய வளர்ந்த குழந்தைக்காகச் சாதனத்தை அமைக்கிறார்களா என்பதைப் பெற்றோர் குறிப்பிடலாம். அந்தச் சாதனத்தில் வயதுக்கு ஏற்ற பாதுகாப்புகள் தானாகச் செயல்படுத்தப்படும். iPadஇல் செயலிகளுடன் வயது வரம்புகளைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

செயலிகளில் வயதுக்கு ஏற்ற அனுபவங்கள் அம்சங்களைச் செயல்படுத்துவதற்கான ஆன்போர்டிங் திரை காட்டப்பட்டுள்ளது.

ஜர்னல்.ஜர்னல் செயலி இப்போது iPadஇல் கிடைக்கிறது. Apple Penciஐப் பயன்படுத்தி உங்கள் சொந்தக் கையெழுத்தில் பதிவுகளை எழுதலாம், உரையுடன் இன்லைனில் வரைபடங்களைச் சேர்க்கலாம், உங்கள் ஜர்னல் பதிவுகளில் உள்ள இடங்களை மேப்பில் பார்க்கலாம். iPadஇல் ஜர்னல் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல், iPadஇல் உள்ள “ஜர்னல்” செயலியில் வடிவமைத்தல், புகைப்படங்கள் மற்றும் பலவற்றைச் சேர்த்தல், iPadஇல் உங்கள் ஜர்னல் பதிவுகளைப் பார்த்தல் மற்றும் தேடுதல் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

கால்குலேட்டர்.கணிதக் குறிப்புகளில் மூன்று மாறிகள் கொண்ட சமன்பாட்டை எழுதலாம், மூன்று பரிமாணங்களில் வரைபடத்தை உருவாக்கலாம். iPadஇல் கால்குலேட்டர் செயலியில் கணிதக் குறிப்புகளில் உள்ள கிராஃப்களில் செயல்களை மேற்கொள்ளுதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

கால்குலேட்டர் செயலியில் முப்பரிமாண கிராஃப்களை உருவாக்குவதற்கான கணிதக் குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன.

இசை.AutoMix அம்சத்தைப் பயன்படுத்தி, DJ செய்வதைப் போல ஒரு பாடலை அடுத்த பாடலுடன் மிக்ஸ் செய்யலாம். iPadஇல் உள்ள இசைச் செயலியில் ஒலியின் தரத்தைச் சரிசெய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

ஆடியோ பதிவு.வீடியோ கான்ஃபரன்ஸ் அழைப்புகளின்போது உயர்தர ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்யலாம். உள்ளீட்டைத் தேர்வுசெய்வதற்கான புதிய அம்சம், ஒவ்வொரு செயலிக்கும் சரியான மைக்ரோஃபோனைப் படைப்பாளர்கள் தேர்வுசெய்வதை எளிதாக்குகிறது. iPadஇல் ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

FaceTime அழைப்பிற்கான ஆடியோ உள்ளீட்டு மூலத்தைத் தேர்வுசெய்வதற்கான கட்டுப்பாடுகள் காட்டப்பட்டுள்ளன.

iPadOS 26க்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.“உதவிக்குறிப்பு” செயலியில் புதிய பரிந்துரைகள் அவ்வப்போது சேர்க்கின்றன, இதன்மூலம் உங்கள் iPadஇல் இருந்து நீங்கள் அதிகப் பலனை அடையலாம். iPadஇல் “உதவிக்குறிப்பு” செயலியைப் பயன்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பு: உங்கள் iPad மாடல், வட்டாரம், மொழி, நெட்வொர்க் வழங்குநர் ஆகியவற்றைப் பொறுத்து புதிய அம்சங்களும் செயலிகளும் மாறக்கூடும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜப்பானியம், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.