இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் நபர்கள், நினைவுகள் மற்றும் விடுமுறை நாட்களை மறைத்தல்

குறிப்பிட்ட நபர்கள், நாட்கள் மற்றும் விடுமுறைகளை உங்கள் நினைவுகள், சிறப்புப் புகைப்படங்கள் மற்றும் ஃபோட்டோஸ் விட்ஜெட்டில் குறைவாகக் காட்டும் வகையில் அல்லது முற்றிலும் காட்டாத வகையில் ஃபோட்டோஸ் செயலியை அமைக்கலாம். ஃபோட்டோஸ் செயலி மற்றும் உங்கள் iPad முகப்புத் திரை விட்ஜெட்டில் நினைவுகள் மற்றும் சிறப்புப் புகைப்படங்களை ஆஃப் செய்யலாம்.

ஒரு நபரை குறைவான முறை காட்டுதல் அல்லது காட்டாமல் இருத்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் குறைவாக காட்ட விரும்பும் நபரின் புகைப்படத்தைத் திறக்கவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “ஒரு நபரை முன்னிலைப்படுத்து” என்பதைத் தட்டவும்.

    புகைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால், குறைவாக முன்னிலைப்படுத்த விரும்பும் நபரைத் தட்டி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  4. “இவரைக் குறைவாக முன்னிலைப்படுத்து” அல்லது “இவரை ஒருபோதும் காட்ட வேண்டாம்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  5. “உறுதிப்படுத்து” என்பதைத் தட்டவும்.

ஒருவரை மீண்டும் முன்னிலைப்படுத்த, “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி மேல் வலது மூலையில் உள்ள உங்கள் கணக்கைத் தட்டவும், பின்னர் “நபர்கள் & செல்லப்பிராணிகள் பரிந்துரைகளை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

நினைவுகள், விடுமுறை நாட்கள் மற்றும் பிற முன்னிலைப்படுத்தப்படும் உள்ளடக்கத்தை ஆஃப் செய்தல்

ஃபோட்டோஸ் செயலியில் நினைவுகள் அல்லது சிறப்புப் புகைப்படங்களை நீங்கள் ஆஃப் செய்யலாம், மேலும் உங்கள் சொந்த நாடு அல்லது வட்டாரத்தின் விடுமுறை நிகழ்வுகள் நினைவுகளிலும் முன்னிலைப்படுத்தப்படும் உள்ளடக்கத்திலும் காட்டப்படுவதைத் தடுக்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. மேல் வலது மூலையில் உள்ள உங்கள் கணக்கைத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தையும் நினைவுகளையும் மறைக்க: முன்னிலைப்படுத்தப்பட்ட புகைப்படங்களையும் நினைவுகளையும் ஃபோட்டோஸ் செயலி தானாகவே உருவாக்குவதைத் தடுக்க, “முன்னிலைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தைக் காட்டு” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

    • விடுமுறை நிகழ்வுகளை ஆஃப் செய்ய: முன்னிலைப்படுத்தப்பட்ட விடுமுறைக்கால புகைப்படங்களையும் நினைவுகளையும் ஃபோட்டோஸ் செயலி தானாகவே உருவாக்குவதைத் தடுக்க, “விடுமுறைக்கால நிகழ்வுகளைக் காட்டு” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.