இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad ஒலிகளை மாற்றுதல் அல்லது ஆஃப் செய்தல்

நீங்கள் அழைப்பு, மெசேஜ், மின்னஞ்சல், நினைவூட்டல் அல்லது பிற வகை அறிவிப்புகளைப் பெறும்போது iPad பிளே செய்யும் ஒலிகளை நீங்கள் மாற்றலாம் அல்லது ஆஃப் செய்யலாம்.

iPad ஒலிகளைப் பிரத்தியேகமாக்குதல்

விழிப்பூட்டல் டோன்கள் மற்றும் ரிங்டோன்களுக்கான விருப்பங்களையும், ரிங்கர் மற்றும் விழிப்பூட்டலுக்கான ஒலியளவுகளையும் அமைக்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் சென்று, “ஒலிகள்” என்பதைத் தட்டவும்.

  2. ரிங்கர் மற்றும் விழிப்பூட்டல்களுக்கான ஒலியளவை அமைக்க ஸ்லைடரை இழுக்கவும்.

  3. ரிங்டோன் மற்றும் விழிப்பூட்டல் டோன்களுக்கான ஒலிகளைத் தேர்ந்தெடுக்க ரிங்டோன் மற்றும் பிற விருப்பங்களைத் தட்டவும்.

iPad பிளே செய்யும் ஒலிகளை, குறிப்பிட்ட நபர்களுக்கும் மாற்றலாம். தொடர்புகள் என்பதற்குச் சென்று, நபரின் பெயரைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டிய பிறகு ரிங்டோன் அல்லது மெசேஜ் டோனைத் தேர்வுசெய்யவும்.

iPadஐ அமைதியாக்குதல்

உள்வரும் அழைப்புகள், விழிப்பூட்டல்கள், ஒலி எஃபெக்ட்கள் ஆகியவற்றைத் தற்காலிகமாக நிறுத்த, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, “ஒலிமுடக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் எதிர்பார்க்கும்போது அழைப்புகளும் அறிவிப்புகளும் உங்களுக்கு வரவில்லை எனில் கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, “தொந்தரவு செய்ய வேண்டாம்” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். “தொந்தரவு செய்ய வேண்டாம்” “தொந்தரவு செய்ய வேண்டாம்” பட்டன் பட்டன் ஹைலைட் செய்யப்பட்டிருந்தால், “தொந்தரவு செய்ய வேண்டாம்” அம்சத்தை ஆஃப் செய்ய அதைத் தட்டவும். (“தொந்தரவு செய்ய வேண்டாம்” ஆன் செய்யப்பட்டால், அதன் ஐகானும் ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும்.)

இவற்றையும் பாருங்கள்iPadஇல் ஒலியளவைச் சரிசெய்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.