இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Freeform போர்டில் வரைதல் அல்லது கையால் எழுதுதல்

Apple Pencil (இணக்கத்தன்மை என்பதைப் பார்க்கவும்) அல்லது உங்கள் விரலைப் பயன்படுத்தி குறிப்பைக் கையால் எழுதலாம் அல்லது ஸ்கெட்ச் செய்யலாம். டைப் செய்த உரையைப் போன்றே, கையால் எழுதப்பட்ட உரையையும் திருத்தலாம் பயன்படுத்தலாம்.

வரைதல் கருவிகளுடன் Freeform போர்டில் ஒரு வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

வரைதல் அல்லது கையால் எழுதுதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. போர்டைத் திறக்கவும், இல்லையெனில் புதிதாகத் தொடங்க “புதிய போர்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “வரைதல் மற்றும் கையால் எழுதுவதற்கான கருவிகள்” பட்டன்-ஐத் தட்டி உங்கள் விரல் அல்லது Apple Pencilஐப் பயன்படுத்தி வரையவும்.

    நீங்கள் Apple Pencilஐப் பயன்படுத்தும்போது, விரலால் வரைவதற்கு மாற விரும்பினால், வரைதல் கருவிகள் பிரிவில் “மேலும்” பட்டன்-ஐத் தட்டி "விரலால் வரைதல்" விருப்பத்தை ஆன் செய்யவும்.

    உதவிக்குறிப்பு: வரைபடத்தின் வடிவத்தைச் சீராக்க அல்லது நேராக்க, வரைபடத்தை வரைந்து முடித்ததும் உங்கள் விரல் அல்லது Apple Pencilஐச் சிறிது நேரம் அசையாமல் வைத்திருக்கவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • கருவிகளை மாற்றுதல்: ஒரு கருவியைத் தட்டவும். நிரப்புதல், க்ரேயான், ஃபவுண்டைன் பேனா, மூங்கில் பேனா, வாட்டர்கலர் பிரஷ் போன்ற பிற கருவிகளைப் பார்க்க ஸ்வைப் செய்யவும்.

    • ஒரு கருவியின் குணங்களை (கோணம், தடிமன், ஒளிபுகாத்தன்மை போன்றவை) மாற்றுதல்: ஏதேனும் ஒரு கருவியை இரண்டாவது முறை தட்டவும்.

    • வடிவத்தை நிறத்தால் நிரப்புதல்: “நிரப்புதல்” கருவியை (பெயின்ட் டியூப்) தட்டி, மூடப்பட்ட வடிவத்திற்குள் தட்டவும்.

    • நேர்கோடு வரைய: “ரூலர்” கருவியைத் தட்டவும். ரூலர் மீது இரண்டு விரல்களை வைத்து, உங்கள் கையைத் திருப்பி அதைச் சுழற்றவும்.

    • Apple Pencil மூலம் எழுதும்போது உங்கள் கையெழுத்தை டைப் செய்த எழுத்துகளாக மாற்றுதல்: கிறுக்கல் அம்சத்தை (பேனாவுக்கு இருக்கும்) பயன்படுத்தவும். “கிறுக்கல்” அம்சத்தின் மூலம் உரையை உள்ளிடுதல் என்பதைப் பார்க்கவும்.

      உங்கள் கையெழுத்தை டைப் செய்த எழுத்தாக மாற்றாமல் அதை அழிக்க, கீழே உள்ள கையால் எழுதப்பட்ட வார்த்தையில் செயல்களை மேற்கொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.

    சில Freeform வரைதல் கருவிகளும் அவற்றின் ஸ்ட்ரோக்குகளும்: மார்க்கர், பேனா, ஹைலைட்டர், பென்சில், க்ரேயான், ஃபவுண்டைன் பேனா மற்றும் வாட்டர்கலர் பிரஷ்.

குறிப்பு: இயல்புநிலையாக, Freeformஇல் வரைதல் மற்றும் எழுதுதல் கருவியாக Apple Pencilஐப் பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கவும் ஸ்க்ரால் செய்யவும் Apple Pencilஐப் பயன்படுத்த விரும்பினால் இந்த அமைப்பை மாற்றலாம்.

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால் Image Playgroundஐப் பயன்படுத்தி Freeformஇல் தனித்துவமான படங்களை உருவாக்கலாம். Image Playground மூலம் அசல் படங்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

வரைபடத்தின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்துத் திருத்துதல்

Freeform செயலியில் நீங்கள் வரையும்போது உங்கள் ஸ்ட்ரோக்குகள் குழுவாக்கப்படும். ஒரு வரைபடத்தைத் தனித்தனியாகப் பிரிக்க விரும்பினால், ஸ்ட்ரோக்குகளைத் தனியே பிரித்து அவற்றை ஒன்றிணைக்கலாம். அத்துடன் வரைபடத்தின் பகுதிகளை நீக்கலாம், அளவை மாற்றலாம், நேராக்கலாம்.

  1. வரைதல் கருவிகளைக் கொண்டு உங்கள் Freeform போர்டில் வரையவோ எழுதவோ செய்த பிறகு, வரைதல் கருவிகளில், லாசோ கருவி-ஐத் தட்டவும் (எரேசர் மற்றும் ரூலருக்கு இடையே இருக்கும்).

  2. நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வரைபடத்தின் பகுதியைத் தட்டி அல்லது வட்டமிட்டு, ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    உதவிக்குறிப்பு: கையால் வரையப்பட்ட கோடுகளைச் சீராக்க அல்லது நேராக்க, “வடிவத்துக்கு ஸ்னாப் செய்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

வரைதல் கருவிகளைப் பயன்படுத்தாதபோது, முழு வரைபடம் அல்லது பிற ஐட்டத்தைத் தட்டியும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒரு ஐட்டத்தைத் தட்டித் தேர்ந்தெடுத்து, வடிவமைப்புக் கருவிகளில் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “வெட்டு”, “நகலெடு”, “பிரதியெடு” ஆகியவற்றில் ஒன்றைத் தட்டவும்.

கையால் எழுதப்பட்ட வார்த்தையில் செயல்களை மேற்கொள்ளுதல்

Freeform செயலியில் நீங்கள் கையால் எழுதும்போது, உங்கள் கையெழுத்து வார்த்தைகளாகப் புரிந்துகொள்ளப்படும். டைப் செய்த உரையைத் தேடுவதைப் போன்றே, கையால் எழுதிய உரையையும் நீங்கள் தேடலாம். நீங்கள் அதைத் தேர்ந்தெடுத்து, நகலெடுத்து உரையாக ஒட்டலாம் நேராக்கலாம் அல்லது மொழிபெயர்க்கலாம்.

  1. வரைதல் கருவிகளைக் கொண்டு உங்கள் Freeform போர்டில் வரையவோ எழுதவோ செய்த பிறகு, வரைதல் கருவிகளில், லாசோ கருவி-ஐத் தட்டவும் (எரேசர் மற்றும் ரூலருக்கு இடையே இருக்கும்).

  2. உரையைத் தேர்ந்தெடுக்க, வார்த்தைகளைத் தட்டவும், இருமுறை தட்டவும் அல்லது வட்டமிடவும். “ஃபார்வேர்டு செய்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உரையை மேலும் தெளிவாகவும் சீராகவும் நேராகவும் மாற்ற: “துல்லியமாக்கு” என்பதைத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: நீங்கள் எழுதும்போதே உரையைத் தானாகச் சீர்படுத்தவும் நேர்படுத்தவும், கருவிகளில் “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “கையெழுத்தைத் தானாகத் துல்லியமாக்கு” என்பதை ஆன் செய்யவும்.

    • நீங்கள் எழுதுவதை இன்னும் நேராக்க: “நேராக்கு” என்பதைத் தட்டவும்.

    • எழுத்துப்பிழையைச் சரிசெய்தல்: அடிக்கோடிடப்பட்ட வார்த்தையைத் தட்டி, அதை எப்படிச் சரிசெய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். சரிசெய்யப்பட்ட வார்த்தை நீங்கள் எழுதிய வடிவிலேயே காட்டப்படும்.

    • கையால் எழுதப்பட்ட உரையை நகர்த்துதல்: தேர்ந்தெடுத்த உரையைத் தொட்டுப் பிடித்து, பிறகு அதை ஒரு புதிய நிலைக்கு இழுக்கவும்.

    • இழுத்து விட: உரையைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

    • உரையை அழித்தல்: எழுதியவற்றின் குறுக்கே கோடிட்டு, iPadஇல் உங்கள் விரல்களை வைத்து அழுத்திப்பிடிக்கவும். (பேனா, மோனோ லைன் அல்லது மார்க்கர் போன்ற மார்க்-அப் கருவியைப் பயன்படுத்தும்போது ஆதரிக்கப்படுகிறது.)

கையால் எழுதப்பட்ட இணைப்பு, முகவரி, ஃபோன் எண் அல்லது தேதியை நீங்கள் தட்டினால், அது மெனுவையோ தொடர்புடைய மற்றொரு செயலியையோ திறக்கக்கூடும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.