இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள FaceTimeஇல் ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றுதல்

FaceTime அழைப்பில், பகிரப்பட்ட ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றலாம். செயலாக்கத்தில் உள்ள FaceTime அழைப்பில் கூட்டுப்பணியைத் தொடங்கலாம் அல்லது ஆவணம் உருவாக்கப்பட்டுள்ள செயலியில் இருந்து கூட்டுப்பணியைத் தொடங்கலாம்.

  1. நீங்கள் கூட்டுப்பணியாற்ற விரும்பும் நபர்களுடன் FaceTime செயலியில் உரையாடலைத் தொடங்கவும்.

  2. நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலியைத் திறந்து, ஒரு ஆவணத்தைத் திறக்கவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • காட்டப்படும் அறிவிப்பில் உள்ள “கூட்டுப்பணியாற்றுக” என்பதைத் தட்டவும்.

    • “பகிர்” பட்டன் என்பதைத் தட்டி, ஆவணத்தை எப்படி பகிர வேண்டும் என்பதைத் தேர்வுசெய்து (FaceTime, AirDrop, Mail அல்லது மெசேஜஸ்), “கூட்டுப்பணியாற்றுக” என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் திரையின் மேலே தோன்றும் கூட்டுப்பணி அறிவிப்பில் “தொடங்குக” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் கூட்டுப்பணியாற்ற விரும்பும் ஆவணத்தைப் பகிர்ந்துள்ளதற்கான அறிவிப்பை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். அவர்கள் அறிவிப்பில் உள்ள “திற” என்பதைத் தட்டும்போது, அந்த ஆவணம் அவர்களின் சாதனத்தில் திறக்கப்படும்.

    ஆவணத்தைப் பெறும் மற்றும் திறக்கும் அனைவரும் மாற்றங்களைச் செய்யலாம் மற்றும் பிறரால் செய்யப்பட்ட மாற்றங்களைப் பார்க்கலாம். யாராவது மாற்றங்களைச் செய்யும்போது, ஆவணத்தில் கூட்டுப்பணியாற்றும் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்பப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.