இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “கடிகாரம்” செயலியில் அலாரத்தை அமைத்தல்

iPadஐ அலாரக் கடிகாரமாக மாற்றலாம் அல்லது அலாரத்தை அமைத்துத் தருமாறு Siriஐக் கேட்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஒலிக்கும் வகையில் அல்லது தொடர்ச்சியாக வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் ஒலிக்கும் வகையில் அலாரங்களை அமைக்கலாம். அலாரம் ஒத்திவைக்கப்பட வேண்டிய கால அளவையும் நீங்கள் மாற்றலாம்.

Siri: பின்வருவன எதையேனும் செய்யும்படி Siriஐக் கேளுங்கள்: “Set an alarm for 7 a.m.” Siriஐ எப்படி பயன்படுத்துவது என்பதை அறிக.

“கடிகாரம்” செயலியில் உள்ள அலாரங்கள் தாவலில், அலார நேரத்தை மாற்றுதல், அலாரத்திற்கான கால இடைவெளியைத் தேர்வுசெய்தல், அலார லேபிளைச் சேர்த்தல், அலார ஒலியைத் தேர்ந்தெடுத்தல், அலாரத்தை ஒத்திவைப்பதை ஆன் செய்தல், ஒத்திவைப்புக் கால அளவை மாற்றுதல் ஆகியவற்றுக்கான அமைப்புகள் காட்டப்பட்டுள்ளன.

அலாரத்தை அமைத்தல்

  1. உங்கள் iPadஇல் கடிகாரம் செயலிக்குச் செல்லவும்.

  2. “அலாரங்கள்” என்பதைத் தட்டி, “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நேரத்தை அமைத்த பிறகு, பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • மீண்டும் ஒலித்தல்: வாரத்தில் அலாரம் மீண்டும் ஒலிக்க வேண்டிய நாட்களைத் தேர்வுசெய்யவும்.

    • லேபிள்: அலாரத்திற்கு ஒரு பெயரை வழங்கவும், எ.கா., “தாவரங்களுக்கு நீர் பாய்ச்சவும்”.

    • ஒலி: பாடல் அல்லது ரிங்டோனைத் தேர்வுசெய்யவும்.

    • ஒத்திவைத்தல்: உங்கள் அலாரத்துடன் “ஒத்திவை” பட்டனைப் பார்க்க ஆன் செய்யவும்.

    • ஒத்திவைப்புக் காலம்: அலாரம் எந்தக் கால அளவிற்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

  4. “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

அலாரத்திற்கான நேரத்தை மாற்ற, அலார நேரத்தைத் தட்டவும். இல்லையெனில் மேல் இடதுபுறத்தில் “திருத்து” என்பதைத் தட்டி, அலார நேரத்தைத் தட்டவும்.

அலாரத்தின் ஒலியளவை மாற்றுதல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஒலிகள்” என்பதைத் தட்டவும்.

  3. ரிங்டோன் மற்றும் விழிப்பூட்டல்கள் என்பதற்குக் கீழே உள்ள ஒலியளவு ஸ்லைடரை இழுக்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் சாதனத்தில் உள்ள ஒலியளவு பட்டனைப் பயன்படுத்தி அலாரத்தின் ஒலியளவை மாற்ற, “பட்டன்களைப் பயன்படுத்தி மாற்று” என்பதை ஆன் செய்யவும்.

பின்வரும் சூழல்களிலும் அலாரம் ஒலிக்கும்:

  • அமைதிப் பயன்முறை ஆன் செய்திருத்தல்.

  • “தொந்தரவு செய்ய வேண்டாம்” ஆன் செய்திருத்தல் (அல்லது வேறு ஃபோகஸ் ஆன் செய்திருத்தல்).

  • உங்கள் iPad உடன் ஹெட்ஃபோன்களை இணைத்திருத்தல். உங்கள் iPad ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள் ஆகிய இரண்டிலுமே குறிப்பிட்ட ஒலியளவில் அலாரம் ஒலிக்கும்.

அலாரத்தை ஆஃப் செய்தல்

  1. உங்கள் iPadஇல் கடிகாரம் செயலிக்குச் செல்லவும்.

  2. “அலாரங்கள்” என்பதைத் தட்டவும்.

  3. அலாரம் நேரத்திற்குக் கீழே உள்ள பட்டனைத் தட்டவும்.

அலாரத்தை அகற்றுதல்

  1. உங்கள் iPadஇல் கடிகாரம் செயலிக்குச் செல்லவும்.

  2. “அலாரங்கள்” என்பதைத் தட்டவும்.

  3. மேல் இடதுபுறம் உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, “நீக்கு” பட்டன்-ஐத் தட்டி, பிறகு “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.