இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் போர்ட்ரெய்ட் பயன்முறைப் புகைப்படங்களைத் திருத்துதல்

ஃபோட்டோஸ் செயலியில், போர்ட்ரெய்ட் பயன்முறையில் நீங்கள் எடுக்கும் படங்களின் லைட்டிங் எஃபெக்ட்கள், டெப்த் ஆஃப் ஃபீல்ட், ஃபோகஸ் பாயின்ட் ஆகியவற்றை நீங்கள் மாற்றலாம், சரிசெய்யலாம்.

போர்ட்ரெய்ட் லைட்டிங் எஃபெக்ட்டை மாற்றுதல்

போர்ட்ரெய்ட் பயன்முறைப் புகைப்படங்களில் போர்ட்ரெய்ட் லைட்டிங் எஃபெக்ட்களை நீங்கள் பயன்படுத்தலாம், மாற்றலாம் அல்லது அகற்றலாம். பிற சாதனங்களில் எடுக்கப்பட்ட போர்ட்ரெய்ட்களையும் திருத்தலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு போர்ட்ரெய்ட் புகைப்படத்தைத் தட்டித் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. திரையின் மேல்பகுதியில் உள்ள “லைட்டிங் இன்டென்ஸிட்டி ஆஃப்” பட்டன்-ஐத் தட்டவும்.

    லைட்டிங் எஃபெக்ட்கள் திரையின் வலது பக்கத்தில் காட்டப்படும்.

  4. “போர்ட்ரெய்ட் லைட்டிங்” பட்டன்-ஐத் தொட்ட பிறகு லைட்டிங் எஃபெக்ட்டைத் தேர்வுசெய்ய உங்கள் விரலை மேலே அல்லது கீழே ஸ்லைடு செய்யவும்:

    • இயற்கையான ஒளி: முகம், மங்கலான பின்னணிக்கு எதிராக ஷார்ப் ஃபோகஸில் உள்ளது.

    • ஸ்டுடியோ லைட்: முகம் பிரகாசமாக ஒளிர்ந்து, புகைப்படம் ஒட்டுமொத்தமாக மாசுமருவற்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.

    • கான்டூர் லைட்: முகத்தில் ஹைலைட்கள் மற்றும் லோ லைட்களுடன் டிராமாடிக் ஷேடோக்கள் உள்ளன.

    • ஸ்டேஜ் லைட்: முகம், அடர்த்தியான கருப்பு பின்னணியில் ஸ்பாட்லைட் செய்யப்பட்டிருக்கும்.

    • ஸ்டேஜ் லைட் மோனோ: இந்த எஃபெக்ட் ஸ்டேஜ் லைட்டைப் போன்றே இருக்கும். ஆனால் புகைப்படம் கிளாசிக் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும்.

    • ஹை-கீ லைட் மோனோ: வெள்ளை நிற பின்னணியில் கிரே-ஸ்கேல் சப்ஜெக்ட்டை எஃபெக்ட் உருவாக்குகிறது.

  5. லைட்டிங் எஃபெக்ட்டின் ஒளியளவைச் சரிசெய்ய ஸ்லைடரை மேலே அல்லது கீழே இழுக்கவும்.

  6. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    போர்ட்ரெய்ட் பயன்முறை புகைப்படத்தின் “திருத்துதல்” திரை காட்டப்பட்டுள்ளது. திரையின் நடுவே புகைப்படமும், திரையின் வலதுபுறத்தில் போர்ட்ரெய்ட் லைட்டிங் எஃபெக்ட் விருப்பங்களும் உள்ளன. ஸ்டேஜ் லைட் விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு, எஃபெக்ட்டின் அளவைச் சரிசெய்வதற்கான ஸ்லைடர் காட்டப்பட்டுள்ளது. திரையின் இடதுபுறத்தில் “போர்ட்ரெய்ட்”, “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்” ஆகிய பட்டன்கள் உள்ளன. “போர்ட்ரெய்ட்” பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது.

குறிப்பு: புகைப்படத்திலிருந்து போர்ட்ரெய்ட் லைட்டிங்கை அகற்ற, “திருத்து” பட்டன்-ஐத் தட்டி, திரையின் மேற்புறத்தில் "போர்ட்ரெய்ட்" என்பதைத் தட்டவும்.

போர்ட்ரெய்ட்களில் பின்னணியை மங்கலாக்கு

டெப்த் கட்டுப்பாடு அம்சத்தை ஆதரிக்கும் மாடல்களில், டெப்த் கட்டுப்பாட்டு ஸ்லைடரைப் பயன்படுத்தி போர்ட்ரெய்ட்களில் பின்னணி பிளரின் அளவைச் சரிசெய்யலாம்.

போர்ட்ரெய்ட் பயன்முறை புகைப்படத்தின் “திருத்துதல்” திரை காட்டப்பட்டுள்ளது. திரையின் நடுவில் ஒரு போர்ட்ரெய்ட் புகைப்படம் உள்ளது. திரையின் வலதுபுறத்தில் டெப்த் அட்ஜஸ்ட்மென்ட் அமைப்பைச் சரிசெய்வதற்கான ஸ்லைடர் உள்ளது. திரையின் இடதுபுறத்தில் “போர்ட்ரெய்ட்”, “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்” ஆகிய பட்டன்கள் உள்ளன. “போர்ட்ரெய்ட்” பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு போர்ட்ரெய்ட் புகைப்படத்தைத் தட்டித் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. திரையின் இடதுபுறத்தில் உள்ள “போர்ட்ரெய்ட்” என்பதைத் தட்டி, பின்னணியை மங்கலாக்கும் எஃபெக்ட்டை மாற்ற வலதுபுறத்தில் உள்ள ஸ்லைடரை இழுக்கவும்.

    புகைப்படத்தின் அசல் டெப்த் மதிப்பை வெள்ளை நிறப் புள்ளி குறிக்கிறது.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

போர்ட்ரெய்ட்டின் ஃபோகஸ் பாயின்டை மாற்றுதல்

உங்கள் iPadஇல் டெப்த் அல்லது ஃபோகஸ் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி iOS 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் iPhone 13 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில் எடுக்கப்பட்ட போர்ட்ரெய்ட்டில் உள்ள சப்ஜெக்டடை (அல்லது ஃபோகஸ் பாயின்ட்டை) நீங்கள் மாற்றலாம். நீங்கள் ஒரு புதிய சப்ஜெக்ட்டைத் தேர்ந்தெடுத்ததும், புதிய சப்ஜெக்ட்டைக் கூர்மையாகவும் ஃபோகஸுடனும் காட்டும் வகையில் டெப் ஆஃப் ஃபீல்டு (அல்லது பிளர்) தானாகவே சரிசெய்யப்படும். புதிய சப்ஜெக்ட் மங்கலாக அல்லது அதிக தூரத்தில் இல்லை என்பதை உறுதிசெய்யவும்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. போர்ட்ரெய்ட் பயன்முறையில் உள்ள புகைப்படத்தை முழுத்திரையில் பார்க்க அதைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. புகைப்படத்தில் உள்ள புதிய சப்ஜெக்ட் அல்லது ஃபோகஸ் பாயின்ட்டைத் தட்டவும்.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

போர்ட்ரெய்ட் எஃபெக்ட்டை அகற்றுதல்

போர்ட்ரெய்ட் பயன்முறையில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து போர்ட்ரெயட் எஃபெக்ட்டை (மங்கலாக்கப்பட்ட பின்னணி) அகற்றலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. போர்ட்ரெய்ட் பயன்முறையில் எடுத்த புகைப்படத்தைத் திறக்கவும்.

  3. திரையின் இடதுபுறத்தில் உள்ள “போர்ட்ரெய்ட்” என்பதைத் தட்டி, “போர்ட்ரெய்ட் ஆஃப்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.