iPadஇல் உள்ள “இசை” செயலியில் பிளேலிஸ்ட்களைக் கோப்புறைகளில் ஒழுங்கமைத்தல்

கோப்புறைகளை உருவாக்கி உங்கள் பிளேலிஸ்ட்களை ஒழுங்கமைத்து வைக்கலாம்.

iPadஇல் “இசை” செயலி திறந்துள்ளது, இடதுபுறத்தில் சைடுபாரும் வலதுபுறத்தில் பிளேலிஸ்ட்களின் பட்டியலும் காட்டப்பட்டுள்ளன. மேலே புதிய பிளேலிஸ்ட்டை உருவாக்குவதற்கான அல்லது புதிய கோப்புறையை உருவாக்குவதற்கான பட்டன்கள் உள்ளன. “வொர்க் ஃபோகஸ்” என்ற பிளேலிஸ்ட் கோப்புறையை நீல நிற அம்புக்குறி சுட்டிக்காட்டுகிறது.

புதிய பிளேலிஸ்ட் கோப்புறையை உருவாக்குதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “சைடுபார் பட்டனைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டி “அனைத்து பிளேலிஸ்ட்களும்” என்பதைத் தட்டவும்.

  3. மேல் வலதுபுறம் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “புதிய கோப்புறை” என்பதைத் தட்டவும்.

  4. கோப்புறைக்கான பெயரை டைப் செய்த பிறகு “உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

    கோப்புறையின் பெயரை மாற்ற, மேல் வலதுபுறம் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “மறுபெயரிடு” என்பதைத் தட்டி, புதிய பெயரை டைப் செய்யவும்.

பிளேலிஸ்ட் கோப்புறையில் ஐட்டங்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. “சைடுபார் பட்டனைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டி, பிளேலிஸ்ட் அல்லது கோப்புறையைத் தொட்டுப் பிடித்து “இதற்கு நகர்த்து” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: பிளேலிஸ்ட் அல்லது கோப்புறையை வேறொரு கோப்புறைக்குள்ளும் இழுக்கலாம்.

  3. கோப்புறையைத் தட்டி “நகர்த்து” என்பதைத் தட்டவும்.

    ஏற்கெனவே கோப்புறையில் இருக்கும் ஒரு பிளேலிஸ்ட்டை நீங்கள் மீண்டும் பிரதான பிளேலிஸ்ட்கள் பட்டியலுக்கு நகர்த்த விரும்பினால், கோப்புறையைத் தேர்ந்தெடுக்காமல் “நகர்த்து” என்பதைத் தட்டினாலே போதும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் புதிய கோப்புறையை உருவாக்கி, பிளேலிஸ்ட்டை அதற்கு நகர்த்தலாம். உங்கள் லைப்ரரியில் பிளேலிஸ்ட்டைத் தொட்டுப் பிடித்து, “இதற்கு நகர்த்து” என்பதைத் தட்டி, “புதிய கோப்புறை” என்பதைத் தட்டவும்.

உங்கள் பிளேலிஸ்ட் கோப்புறைகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் “லைப்ரரி ஒத்திசைவு” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளபோது உங்கள் சாதனங்கள் அனைத்திலும் புதுப்பிக்கப்படும் (அமைப்புகள்  >செயலிகள் > இசை என்பதற்குச் சென்று "லைப்ரரி ஒத்திசைவு” அம்சத்தை ஆன் செய்யவும்). நீங்கள் Apple Music சந்தாதாரர் இல்லையெனில், அடுத்தமுறை உங்கள் கம்ப்யூட்டருடன் ஒத்திசைக்கும்போது மாற்றங்கள் உங்கள் இசை லைப்ரரியில் காட்டப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.