இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் குடும்பப் பகிர்வு அம்சத்துடன் Apple Cash மற்றும் Apple Cardஐப் பயன்படுத்துதல்

உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் Apple Cash மற்றும் Apple Cardஐப் பயன்படுத்தலாம். குடும்பப் பகிர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஒரு பிள்ளைக்கு Apple Cashஐ அமைக்கலாம், மேலும் அவர்களின் குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள நம்பகமான உறுப்பினர்களுடன் Apple Cardஐப் பகிரலாம்.

பிள்ளைக்காக Apple Cash குடும்பத்தை அமைத்தல்

குடும்ப ஒருங்கிணைப்பாளர் பிள்ளைக்காக Apple Cashஐ அமைக்கலாம்.

குறிப்பு: Apple Cash குடும்ப அம்சம் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “குடும்பம்” என்பதைத் தட்டி, Apple Cashஐ அமைக்க விரும்பும் பிள்ளையின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. Apple Cashஐத் தட்டி, “Apple Cashஐ அமை” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

கார்டு பேலன்ஸைப் பார்க்கவும், பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், சிறார் பணம் அனுப்பக்கூடிய நபர்களின் பட்டியலை வரம்பிடவும், அமைப்புகள்  > வாலெட் & Apple Pay என்பதற்குச் செல்லவும். பரிவர்த்தனைகளைப் பார்த்தல், தொடர் பேமெண்ட்டுகளை அமைத்தல், நிதிகளைப் பரிமாற்றுதல் மற்றும் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளுதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

கம்ப்யூட்டர் தேவைகள் மற்றும் Apple Cash கணக்குகளை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, Apple Cash குடும்பத்தை அமைத்துப் பயன்படுத்துதல் மற்றும் உங்கள் பிள்ளையின் Apple Cash செயல்பாட்டைப் பார்த்து வரம்பிடுதல் குறித்த Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple Card குடும்பத்தை அமைத்தல்

உங்கள் Apple Cardஐ குடும்ப உறுப்பினர்களுடன் பகிரலாம், பேமெண்ட்டுகளை நிர்வகிக்கலாம், 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கான கணக்கு அமைப்புகளையும் வரம்புகளையும் கட்டுப்படுத்தலாம். அனைவரின் விவரங்களையும் நீங்கள் மதிப்பாய்வு செய்து நிர்வகிக்கலாம்.

குறிப்பு: Apple Card குடும்ப அம்சம் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “குடும்பம்” என்பதைத் தட்டி, “Apple Card குடும்பம்” என்பதைத் தட்டவும்.

    விருப்பம் உங்களிடம் Apple Card இருந்தால் மட்டுமே தோன்றும்.

  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Apple Card உடன் உரிமையாளர்கள், இணை உரிமையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, Apple Card குடும்பத்தை அமைத்து இணை உரிமையாளரையும் பங்கேற்பாளர்களையும் சேர்த்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.