இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் குறிப்புகளை உருவாக்கி வடிவமைத்தல்

குறிப்புகள் செயலியைப் பயன்படுத்தி மனதில் தோன்றுவதைப் உடனடியாகப் பதிவு செய்யலாம் அல்லது சரிபார்ப்புப் பட்டியல்கள், படங்கள், இணைய இணைப்புகள், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள், ஸ்கெட்ச்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கலாம். பிரிவுகளையும் தலைப்புகளையும் பயன்படுத்தி உங்கள் குறிப்பை ஒழுங்கமைக்கலாம்.

வகுப்பின் கலந்தாலோசனை அமர்வுக்கான குறிப்பு. அதில் #school, #kine210 போன்ற குறிச்சொற்கள் உள்ளன. குறிப்பில் பாக்ஸ் சுவாசப் பயிற்சி தொடர்பான கையால் வரையப்பட்ட விளக்கப்படம் காட்டப்பட்டுள்ளது, அதில் சுவாசச் சுழற்சியில் உள்ள நான்கு படிநிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

புதிய குறிப்பை உருவாக்குதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டி உங்கள் உரையை உள்ளிடவும்.

    குறிப்பின் முதல் வரி குறிப்பின் தலைப்பாக மாறும்.

வடிவமைப்பு, சரிபார்ப்புப் பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளைச் சேர்த்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பை எழுதும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • வார்த்தையை வடிவமைத்தல்: “வடிவமைப்பு” பட்டன்-ஐத் தட்டி “தலைப்பு”, “தடிமனாக்கு”, “சாய்வு எழுத்துரு”, “ஹைலைட்” போன்ற ஸ்டைலைத் தேர்வுசெய்யவும்.

    • சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்குதல்: “சரிபார்ப்புப் பட்டியல்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • அட்டவணையைச் சேர்த்தல்: “அட்டவணையைச் சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

பிரிவுகள் மற்றும் தலைப்புகள் மூலம் குறிப்பை ஒழுங்கமைத்தல்

நீளமான குறிப்புகளை எளிதாக நிர்வகிப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் நீங்கள் பிரிவுகளைச் சுருக்கலாம், விரிவாக்கலாம்.

குறிப்புகள் செயலியில், திரையின் மேற்புறத்தில் சுருக்கக்கூடிய தலைப்புகளுடன் கூடிய குறிப்பு.
  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பில், தலைப்பிற்கான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. “வடிவமைப்பு” பட்டன்-ஐத் தட்டி “தலைப்பு” அல்லது “துணைத் தலைப்பு” என்பதைத் தட்டவும்.

  4. பிரிவில் உள்ளடக்கத்தைச் சேர்த்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • பிரிவைச் சுருக்குதல்: “சுருக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • பிரிவை விரிவாக்குதல்: “விரிவாக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

குறிப்புகள் செயலியில் எழுதும் கருவிகளைப் பயன்படுத்துதல்

Apple Intelligence* மூலம், எழுதும் கருவிகளைப் பயன்படுத்தி ஒரே தட்டலில் உரையின் சுருக்கவிவரத்தைப் பெறலாம், நீங்கள் எழுதியவற்றைச் சரிபார்க்கலாம், சரியான சொற்களையும் தொனியையும் கண்டறிய உதவும் வகையில் ஒரே உரையின் வெவ்வேறு பதிப்புகளை உருவாக்கலாம். Apple Intelligence உடன் எழுதும் கருவிகளைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜப்பானியம், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைப்பதில்லை. மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.