இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “இடம் அறி” செயலியில் இருந்து ஒரு சாதனத்தை அகற்றுதல்

“இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி, உங்கள் சாதனங்கள் பட்டியலில் இருந்து ஒரு சாதனத்தை அகற்றலாம், நீங்கள் ஏற்கெனவே விற்ற அல்லது மற்றவர்களுக்குக் கொடுத்த சாதனத்தின் ஆக்டிவேஷன் லாக்கை ஆஃப் செய்யலாம். நீங்கள் ஆக்டிவேஷன் லாக்கை அகற்றினால், வேறொருவர் அந்தச் சாதனத்தை ஆக்டிவேட் செய்து தங்களது Apple கணக்குடன் அதை இணைக்கலாம்.

சாதனம் உங்களிடம் இருந்தால், அந்தச் சாதனத்தில் “எனது [சாதனம்]ஐக் கண்டறி” அமைப்பை ஆஃப் செய்வதன் மூலம் ஆக்டிவேஷன் லாக்கை ஆஃப் செய்து, உங்கள் கணக்கில் இருந்து அந்தச் சாதனத்தை அகற்றலாம்.

உங்கள் சாதனங்கள் பட்டியலில் இருந்து ஒரு சாதனத்தை அகற்றுதல்

ஒரு சாதனத்தை இனிமேல் பயன்படுத்தப்போவதில்லை எனத் தீர்மானிக்கிறீர்கள் என்றால், உங்கள் சாதனங்கள் பட்டியலில் இருந்து அதை நீங்கள் அகற்றலாம். ஒரு சாதனத்தை அகற்ற வேண்டுமெனில், அந்தச் சாதனம் ஆஃப்லைனில் இருக்க வேண்டும்.

சாதனத்தில் ஆக்டிவேஷன் லாக் செயல்படுத்தப்பட்டிருந்தால் (iPhone, iPad, iPod touch, Mac அல்லது Apple Watch எனில்) அல்லது உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் (AirPods அல்லது Beats ஹெட்ஃபோன்கள் எனில்) அந்தச் சாதனம் அடுத்த முறை ஆன்லைன் வரும்போது அது உங்கள் சாதனங்கள் பட்டியலில் காட்டப்படும்.

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • iPhone, iPad, iPod touch, Mac அல்லது Apple Watch எனில்: சாதனத்தை ஆஃப் செய்யவும்.

    • AirPods எனில்: AirPodsஐ அதற்குரிய கேஸில் வைத்து மூடியை மூடவும் அல்லது AirPodsஐ ஆஃப் செய்யவும்.

    • Beats ஹெட்ஃபோன்கள் எனில்: ஹெட்ஃபோன்களை ஆஃப் செய்யவும்.

  2. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலியைத் திறக்கவும்.

  3. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “சாதனங்கள்” என்பதைத் தட்டி, ஆஃப்லைனில் உள்ள சாதனத்தின் பெயரைத் தட்டவும்.

  4. “இந்தச் சாதனத்தை அகற்று” என்பதைத் தட்டி, “அகற்று” என்பதைத் தட்டவும்.

MagSafe உடன் கூடிய iPhone வாலெட்டை அகற்றுதல்

“இடம் அறி” அம்சத்திற்கான ஆதரவைக் கொண்ட, MagSafe உடன் கூடிய iPhone வாலெட் உங்கள் “இடம் அறி” செயலியில் காட்டப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் சாதனங்கள் பட்டியலில் இருந்து அதை அகற்றலாம். “இடம் அறி” செயலியில் இருந்து அதை அகற்றினால் வேறொருவர் தங்களது Apple கணக்குடன் அதை இணைக்க முடியும்.

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலியைத் திறக்கவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சாதனங்கள்” என்பதைத் தட்டி, MagSafe உடன் கூடிய iPhone வாலெட்டின் பெயரைத் தட்டவும்.

  3. “இந்தச் சாதனத்தை அகற்று” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்களிடம் உள்ள சாதனத்தில் ஆக்டிவேஷன் லாக்கை ஆஃப் செய்தல்

நீங்கள் ஒரு சாதனத்தை விற்பதற்கு, மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன்பாக, அதன் ஆக்டிவேஷன் லாக்கை அகற்ற வேண்டும். அகற்றப்படும் சாதனம் உங்கள் Apple கணக்குடன் இனி இணைக்கப்பட்டிருக்காது.

Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்:

உங்களிடம் இல்லாத சாதனத்தில் ஆக்டிவேஷன் லாக்கை ஆஃப் செய்தல்

நீங்கள் விற்பனை செய்த அல்லது மற்றவர்களுக்குக் கொடுத்த iPhone, iPad, iPod touch, Mac அல்லது Apple Watchஇல் எனது [சாதனம்]ஐக் கண்டறி அம்சத்தை ஆஃப் செய்ய மறந்துவிட்டால், “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி அதன் ஆக்டிவேஷன் லாக்கை அகற்றலாம்.

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலியைத் திறக்கவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “சாதனங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் அகற்ற விரும்பும் சாதனத்தின் பெயரைத் தட்டவும்.

  3. சாதனத் தரவை அழிக்கவும்.

    சாதனம் தொலைந்துபோகவில்லை என்பதால், சாதனத்தில் காட்டுவதற்காக ஃபோன் எண்ணையோ மெசேஜையோ உள்ளிட வேண்டாம்.

    சாதனம் ஆஃப்லைனில் இருந்தால், Wi-Fi அல்லது மொபைல் நெட்வொர்க்குடன் அடுத்த முறை இணைக்கப்படும்போது, தொலைவிலிருந்தே அழித்தல் செயல்முறை தொடங்கும். சாதனம் அழிக்கப்பட்ட பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

  4. சாதனம் அழிக்கப்பட்ட பிறகு, “இந்தச் சாதனத்தை அகற்று” என்பதைத் தட்டி, “அகற்று” என்பதைத் தட்டவும்.

    உங்கள் உள்ளடக்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஆக்டிவேஷன் லாக் ஆஃப் செய்யப்படும், இப்போது வேறொருவர் அந்தச் சாதனத்தை ஆக்டிவேட் செய்யலாம்.

நீங்கள் iCloud.com இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வழியாகவும் ஒரு சாதனத்தை அகற்றலாம். வழிகாட்டுதல்களுக்கு, iCloud பயனர் வழிகாட்டியில் iCloud.com தளத்தில் “சாதனங்களைக் கண்டறிதல்” பக்கத்தில் ஒரு சாதனத்தை அகற்றுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.