இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் Freeformஐப் பயன்படுத்தத் தொடங்குதல்

படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு வரம்பற்ற கேன்வாஸை Freeform செயலி உங்களுக்கு வழங்குகிறது. புகைப்படங்கள், வரைபடங்கள், இணைப்புகள், கோப்புகள் போன்ற அனைத்து அம்சங்களையும் ஒரே ஒயிட்போர்டில் நீங்கள் பெறலாம், உங்களுடன் இணைந்து பணியாற்ற மற்றவர்களையும் அழைக்கலாம். நீங்கள் தனியாகவோ குழுவாகச் சேர்ந்தோ கலந்தாலோசனை செய்யலாம், யோசனைகளை வடிவமைக்கலாம், குறிப்பெடுக்கலாம், எண்ணங்களைத் தொகுக்கலாம்.

Freeform செயலி திறந்துள்ள ஒரு iPad. கையால் எழுதுதல், உரை, வரைபடங்கள், வடிவங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கி நோட்ஸ், இணைப்புகள் மற்றும் பிற கோப்புகள் இங்குள்ள போர்டில் காட்டப்பட்டுள்ளன.

விருப்பத்திற்கேற்ப யோசனைகளை ஒருங்கிணைத்திடுங்கள்

லே-அவுட்கள், பக்க அளவுகள் போன்றவற்றைப் பற்றிய கவலையின்றி, எந்த வகையான கோப்புகளையும் Freeform போர்டில் வைக்கலாம். ஒரு போர்டை உருவாக்க, “புதிய போர்டு” பட்டன்-ஐத் தட்டி, திரையின் மேல்பகுதியில் உள்ள “சேர்” பட்டன் அல்லது வேறொரு விருப்பத்தைத் தட்டி, உங்கள் யோசனைகளைச் சேர்க்கத் தொடங்கலாம்.

Freeform போர்டில் மற்ற இரண்டு பங்கேற்பாளர்களின் தேர்வுகளும் நிறமுள்ள டிக்மார்க்குகளால் குறிக்கப்பட்டுள்ளன.

பிறருடன் கூட்டுப்பணியாற்றுதல்

“போர்டைப் பகிர்” பட்டன் என்பதைத் தட்டி போர்டில் நிகழ்நேரத்தில் ஒன்றிணைந்து பணியாற்ற மற்றவர்களை அழைக்கலாம். ஸ்டிக்கி நோட்டைச் சேர்த்து கலந்தாலோசனை அமர்வை நடத்தலாம் அல்லது கருத்துத் தெரிவிக்கலாம். ஸ்டிக்கி நோட்டைச் சேர்க்க, “ஸ்டிக்கி நோட்ஸைச் சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

iPadஇல் உள்ள Freeform போர்டில் கையால் எழுதுதல், வரைபடங்கள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

வரைதல் கருவிகளின் மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்

வரைவதைத் தொடங்க, “வரைதல் மற்றும் கையால் எழுதுவதற்கான கருவிகள்” பட்டன்-ஐத் தட்டவும் (அல்லது உங்கள் Apple Pencilஐப் பயன்படுத்தவும்). செயலியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே ஒரு கருவியைத் தட்டி கோட்டின் தடிமன், டிரான்ஸ்பரன்சி, நிறம் மற்றும் பலவற்றை மாற்றலாம், பின்ச் செய்து திரையைப் பெரிதாக்கவும் சிறிதாக்கவும் செய்யலாம்.

Mac, iPad, iPhone ஆகிய அனைத்திலுமே ஒரே Freeform போர்டு திறக்கப்பட்டுள்ளது.

iPadஇல் பணியைத் தொடங்கி, iPad அல்லது Macஇல் அதைத் தொடருதல்

iCloudஇல் நீங்கள் சேமிக்கும் Freeform போர்டுகளும் அவற்றில் நீங்கள் செய்யும் மாற்றங்களும், அதே Apple கணக்கில் நீங்கள் உள்நுழைந்துள்ள உங்களின் அனைத்து Apple சாதனங்களிலும் அவை காட்டப்படும். Freeform உடன் iCloudஐப் பயன்படுத்த, அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > அனைத்தையும் காட்டு (சேமித்த iCloud பிரிவில்) என்பதற்குச் சென்று, Freeform என்பதை ஆன் செய்யவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.