இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள மேப்ஸ் செயலியில் போக்குவரத்து நிலவரத்தைப் பார்த்தல் மற்றும் போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவித்தல்

போக்குவரத்து நிலவரத்தைப் பார்க்கலாம். விபத்துகள், அபாயங்கள், வேகச் சோதனைகள் (அனுமதிக்கப்படும் இடங்கள்) குறித்துத் தெரிவிக்கலாம். அவை சரிசெய்யப்பட்ட பிறகு, அது குறித்தும் நீங்கள் தெரிவிக்கலாம். (Wi-Fi + Cellular மட்டும்).

நிகழ்வு குறித்துப் பெறப்படும் அறிக்கைகளை Apple மதிப்பீடு செய்யும். அந்த அறிக்கைகள் அதிக நம்பகத்தன்மையுடன் இருந்தால், “சம்பவ மார்க்கர்கள்” (அபாயங்கள் ஏற்பட்டிருந்தால் மற்றும் விபத்துகள் ஏற்பட்டிருந்தால் ) மேப்ஸ் செயலியின் பிற பயனர்களுக்கும் காட்டப்படும். ஒருவேளை சரிசெய்யப்பட்டிருந்தால் அதுகுறித்தும் காட்டப்படும்.

குறிப்பு: அனைத்து அம்சங்களும் எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும். Wi-Fi + Cellular கொண்ட iPad மாடல்களில் உள்ள சில மேப்ஸ் அம்சங்களுக்கு மொபைல் டேட்டா திட்டம் தேவை, அமைப்புகள்  > செயலிகள் > மேப்ஸ் என்பதில் மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். வழக்கமான மொபைல் டேட்டா மற்றும் மெசேஜ் கட்டணங்கள் பொருந்தக்கூடும். உங்கள் மொபைல் டேட்டா கணக்கைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மேப் காட்டப்படும்போது, மேல் வலதுபுறத்தில் உள்ள பட்டனைத் தட்டி, “டிரைவிங்” அல்லது “சாட்டிலைட்” என்பதைத் தேர்வுசெய்த பிறகு “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

    வழக்கத்தைவிட மெதுவாகச் செல்லும் போக்குவரத்து மஞ்சள் நிறத்தில் காட்டப்படும், அவ்வப்போது நின்று செல்லும் போக்குவரத்து சிவப்பு நிறத்தில் காட்டப்படும்.

  3. சம்பவ அறிக்கையைப் பெற, “சம்பவ மார்க்கர்” என்பதைத் தட்டவும்.

    பின்வருபவை மார்க்கர்கள் மூலம் குறிக்கப்பட்டிருக்கும்:

    • விபத்துகள்

    • வேகச் சோதனைகள்

    • போக்குவரத்து

    • சாலைப் பராமரிப்பு

    • அபாயங்கள்

    • சாலை மூடல்கள்

போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவித்தல்

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: “Report an accident.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

அல்லது Siriஐப் பயன்படுத்தாமல்:

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • படிப்படியான டிரைவிங் வழிகளைப் பின்தொடரும்போது: “சம்பவத்தைப் புகாரளி” பட்டன்-ஐத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள வழித்தட கார்டைத் தட்டிய பிறகு, “நிகழ்வு குறித்துத் தெரிவியுங்கள்” என்பதையும் தட்டலாம்.

    • வழிகளைப் பின்பற்றாதபோது: தேடல் புலத்திற்கு அடுத்துள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துகளைத் தட்டிய பிறகு “அறிக்கைகள்” என்பதைத் தட்டவும். “புதிய சிக்கல் குறித்துப் புகாரளியுங்கள்” என்பதைத் தட்டி, “நிகழ்வு குறித்துப் புகாரளியுங்கள்” என்பதைத் தட்டிய பிறகு, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

      உங்கள் படம், முதலெழுத்துகள் ஆகிய இரண்டுமே காட்டப்படவில்லை என்றால், தேடல் புலத்திற்கு அடுத்துள்ள “ரத்துசெய்” என்பதைத் தட்டவும் அல்லது தேடல் புலத்தைத் தட்டிய பிறகு “ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.

விபத்து அல்லது அபாயத்தின் நிலை குறித்துத் தெரிவித்தல்

குறிப்பிட்ட சில நாடுகளில் அல்லது வட்டாரங்களில், அத்தகைய நீங்கள் நிகழ்வுகளுக்கு அருகில் இருக்கும்போது, Wi-Fi + Cellularஐக் கொண்ட iPad உங்களிடம் இருந்தால், அவை அகற்றப்பட்டதா என்பதைக் குறித்து நீங்கள் தெரிவிக்கலாம்.

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: “Clear the accident.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

அல்லது Siriஐப் பயன்படுத்தாமல்:

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நிகழ்வு குறித்த மார்க்கரைத் தட்டவும்.

  3. “சரியாகிவிட்டது” அல்லது “இன்னும் சரியாகவில்லை” என்பதைத் தட்டவும்.

    (வேகச் சோதனைகளின் அறிக்கைகளை உங்களால் நீக்க முடியாது.)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.