இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad கேமராவைப் பயன்படுத்தி Live Photos எடுத்தல்

ஆடியோ உட்பட நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு முன்னும் பின்னும் என்ன நடக்கிறது என்பதை Live Photo பதிவு செய்கிறது. நீங்கள் Live Photoவை சாதாரண புகைப்படத்தைப் போலவே எடுத்துள்ளீர்கள்.

Live Photo எடுத்தல்

  1. iPadஇல் கேமராவை கேமரா திறக்கவும்.

  2. புகைப்படப் பயன்முறையில் கேமரா அமைக்கப்பட்டு Live Photo ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

    குறிப்பு: Live Photo இயல்புநிலையாக ஆன் ஆகிறது. ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, திரையின் வலதுபுறத்தில் மஞ்சள் நிறத்தில் Live Photo “Live Photo” பட்டன் பட்டன் காட்டப்படும்.

  3. Live Photo எடுக்க ஷட்டர் பட்டனைத் தட்டவும்.

  4. Live Photoஐ பிளே செய்ய, ஷட்டர் பட்டனுக்குக் கீழே புகைப்படத்தின் சிறுபடத்தைத் தட்டி, திரையைத் தொட்டுப் பிடிக்கவும்.

உங்கள் ஃபோட்டோஸ் செயலியில் உள்ள புகைப்பட லைப்ரரியில் Live Photos தானாகச் சேமிக்கப்படும். Live Photoகளில் பவுன்ஸ், லூப் போன்ற எஃபெக்ட்களைச் சேர்க்க விரும்பினால், Live Photoஇல் எஃபெக்ட்களைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

Live Photoஐ ஆஃப் செய்தல்

  1. iPadஇல் கேமராவை கேமரா திறக்கவும்.

  2. புகைப்படப் பயன்முறையில் கேமரா அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

  3. திரையின் வலதுபுறத்தில் உள்ள Live Photo “Live Photo” பட்டன் பட்டனைத் தட்டவும், பட்டன் மீது குறுக்குக்கோடு காட்டப்படும்.

நீங்கள் ஏற்கெனவே எடுத்த Live Photoஇல் உள்ள எஃபெக்ட்டை ஆஃப் செய்ய விரும்பினால், Live Photo திருத்தங்களைச் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.