இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் ஸ்விட்ச் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி ஐட்டங்களைத் தேர்ந்தெடுத்தல், செயல்களை மேற்கொள்ளுதல், மேலும் பலவற்றைச் செய்தல்

நீங்கள் ஸ்விட்ச் கட்டுப்பாட்டை அமைத்து, ஆன் செய்தபிறகு, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்து திரையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்:

  • ஐட்டம் பயன்முறை: ஐட்டங்கள் அல்லது அவற்றின் குழுக்களை கர்சர் வரிசையாக ஹைலைட் செய்யும். நீங்கள் முதன்முதலில் ஸ்விட்ச் கட்டுப்பாட்டை ஆன் செய்யும்போது, ஸ்கேனர் மெனு தோன்றும்போதெல்லாம் இதுவே இயல்புநிலையாக இருக்கும்.

  • கிளைடிங் கர்சர்: ஸ்கேனிங் கிராஸ்ஹேர்ஸைப் பயன்படுத்தி திரையில் உள்ள பாயின்டைத் தேர்ந்தெடுக்கலாம். மேப்ஸ், பல ஐட்டங்களைக் கொண்ட திரை போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட பாயின்டைத் தேர்ந்தெடுக்க விரும்பும்போது இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

  • தலை அசைவு: ஆதரிக்கப்பட்ட மாடல்களில் திரையில் உள்ள கர்சரைக் கட்டுப்படுத்த உங்கள் தலையை அசைக்கலாம் (முன்பக்க கேமராவால் கண்டறியப்படும்).

  • கண் நகர்வு: உங்கள் கண்விழியை நகர்த்தி திரையில் உள்ள கர்சரை நீங்கள் கட்டுப்படுத்தலாம் (முன்பக்க கேமராவால் நகர்வு கண்டறியப்படும்).

உங்களுக்கு வேண்டியதன் மீது கர்சர் இருக்கும்போது, ஸ்கேனர் மெனு திறக்கப்படும், அதில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் (தட்டுதல், ஸ்க்ரால் செய்தல், ஒலியளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பல) காட்டப்படும்.

ஐட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும் செயல்களைச் செய்யவும் ஐட்டம் பயன்முறையைப் பயன்படுத்துதல்

  1. நீங்கள் பயன்படுத்தும் ஸ்கேனிங் ஸ்டைலைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தானியங்கு ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினால்: ஐட்டங்களுக்கான குழுக்கள் வரிசையாக ஹைலைட் செய்யப்படும்போது கவனிக்கவும் (பார்த்தல் அல்லது கேட்டல்).

    • நேரடி ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினால்: திரையில் உள்ள ஐட்டங்களுக்கான குழுக்கள் முழுவதும் நகர “அடுத்ததற்கு நகர்தல்” ஸ்விட்சைச் செயல்படுத்தவும்.

    • ஒற்றை ஸ்விட்ச் படிநிலை ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினால்: திரையில் உள்ள ஐட்டங்களுக்கான குழுக்கள் முழுவதும் நகர “அடுத்த ஐட்டத்திற்கு நகர்த்து” ஸ்விட்ச்சைச் செயல்படுத்தவும்.

  2. நீங்கள் விரும்பும் குழு ஹைலைட் செய்யப்படும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தானியங்கு ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினால்: “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சைச் செயல்படுத்தவும்.

    • நேரடி ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினால்: “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்ச்சைச் செயல்படுத்தவும்.

    • ஒற்றை ஸ்விட்ச் படிநிலை ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினால்: தற்போதைய குழு தானாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை காத்திருக்கவும்.

  3. குழுவில், ஒரு ஐட்டத்தை ஸ்கேன் செய்து தேர்ந்தெடுக்க, மீண்டும் படி 1 மற்றும் 2ஐச் செய்யவும்.

  4. ஸ்கேனர் மெனுவில், ஒரு ஐட்டத்தை ஸ்கேன் செய்து தேர்ந்தெடுக்க, மீண்டும் படி 1 மற்றும் 2ஐச் செய்யவும். மெனுவின் கீழ்ப்பகுதியில் உள்ள புள்ளிகள் கூடுதல் விருப்பங்களை வழங்கும்.

எந்தச் செயலையும் தேர்வுசெய்யாமல் ஸ்கேனர் மெனுவை நிராகரிக்க, அசல் ஐட்டம் ஹைலைட் செய்யப்பட்டு மெனுவில் உள்ள அனைத்து ஐகான்களும் மங்கலாக்கப்படும்போது “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சைச் செயல்படுத்துங்கள்.

பாயின்ட்டைத் தேர்ந்தெடுக்க கிளைடிங் கர்சரைப் பயன்படுத்துதல்

“ஸ்விட்ச் கட்டுப்பாடு” அம்சம் இயல்பாகவே ஐட்டம் பயன்முறையில் தொடங்கும், ஆனால் அதற்குப் பதிலாக கிளைடிங் கர்சரைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அமைப்புகள்  > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > “ஸ்விட்ச் கட்டுப்பாடு” பயன்முறை என்பதற்குச் சென்று, “கிளைடிங் கர்சர்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    • ஐட்டம் பயன்முறையைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு கிளைடிங் கர்சரை (ஸ்கேனர் மெனுவில் இருந்து) தேர்வுசெய்யவும்.

      குறிப்பு: ஸ்விட்ச் கட்டுப்பாடு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது “ஸ்விட்ச் கட்டுப்பாடு” பயன்முறை அமைப்புகளை நீங்கள் மாற்றினால், மாற்றங்களைச் செயல்படுத்த ஸ்விட்ச் கட்டுப்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும்.

  2. செங்குத்து கிராஸ்ஹேரை ஒழுங்கமைக்க, நீங்கள் விரும்பும் ஐட்டத்தின் மீது பரந்த செங்குத்து பேண்ட் இருக்கும்போது “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சைச் செயல்படுத்தவும்.

  3. ஐட்டத்தின் மீது மெல்லிய செங்குத்து கோடு இருக்கும்போது “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சை மீண்டும் செயல்படுத்தவும்.

  4. கிடைமட்ட கிராஸ்ஹேரை ஒழுங்கமைக்க, நீங்கள் விரும்பும் ஐட்டத்தின் மீது பரந்த கிடைமட்ட பேண்ட் இருக்கும்போது “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சைச் செயல்படுத்தவும்.

  5. ஐட்டத்தின் மீது மெல்லிய கிடைமட்ட கோடு இருக்கும்போது “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சை மீண்டும் செயல்படுத்தவும்.

  6. ஸ்கேனர் மெனுவில், நீங்கள் விரும்பும் செயலைத் தேர்ந்தெடுத்து, “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சைச் செயல்படுத்தவும்.

ஐட்டம் பயன்முறைக்குத் திரும்ப, ஸ்கேனர் மெனுவைத் திறந்து, ஐட்டம் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

“தலை அசைவு” அம்சத்தை அமைத்தல்

Face IDஐக் கொண்ட iPadஇல், உங்கள் தலையை அசைத்து, திரையில் உள்ள கர்சரை நீங்கள் கட்டுப்படுத்தலாம். புன்னகை, உயர்த்தப்பட்ட புருவங்கள் போன்ற முகபாவனைகளுக்கும் நீங்கள் செயல்களை ஒதுக்கலாம்.

“தலை அசைவு” அம்சத்தை அமைக்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • அமைப்புகள்  > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > ஸ்விட்ச்கள் என்பதற்குச் சென்று, ஸ்விட்ச்களை அமைத்துள்ளதை உறுதிசெய்யவும்.

  • அமைப்புகள் > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > தலை அசைவு என்பதற்குச் சென்று, “தலை அசைவு” என்பதை ஆன் செய்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு விருப்பத்தை அமைக்கவும்:

    • முகபாவனைகளுக்கான செயல்களை ஒதுக்குதல்: ஒவ்வொரு பாவனை மூலமும் வித்தியாசமான செயலைச் செய்ய முடியும், அதன் வெளிப்பாட்டிற்கான அளவு வேறுபட்டு இருப்பது அவசியம்.

    • உங்கள் தலை அசைவை பாயின்டர் டிராக் செய்யும் முறையைத் தேர்வுசெய்தல்: டிராக்கிங் பயன்முறையைத் தட்டி, ”முகத்துடன்”, “திரை விளிம்புகளை நோக்கி முகத்தைக் காட்டும்போது” அல்லது “தலைக்குத் தொடர்புடையது” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    • பாயின்டர் வேகத்தைச் சரிசெய்தல்: “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன்-ஐத் தட்டவும்.

“தலை அசைவு” அம்சத்தைப் பயன்படுத்துதல்

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அமைப்புகள்  > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > “ஸ்விட்ச் கட்டுப்பாடு” பயன்முறைக்குச் சென்று, “தலை அசைவு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    • ஐட்டம் பயன்முறையைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும், பிறகு “தலை அசைவுப்” பயன்முறையை (ஸ்கேனர் மெனுவில் இருந்து) தேர்வுசெய்யவும்.

      குறிப்பு: ஸ்விட்ச் கட்டுப்பாடு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது “ஸ்விட்ச் கட்டுப்பாடு” பயன்முறை அமைப்புகளை நீங்கள் மாற்றினால், மாற்றங்களைச் செயல்படுத்த ஸ்விட்ச் கட்டுப்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும்.

  2. கர்சரை நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்க உங்கள் தலையை அசையுங்கள். பிறகு “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்ச் அல்லது முகபாவனையை பயன்படுத்தி அதைச் செயல்படுத்தவும்.

  3. ஸ்கேனர் மெனுவில், நீங்கள் விரும்பும் செயலைத் தேர்ந்தெடுத்து, “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்ச் அல்லது முகபாவனையைச் செயல்படுத்தவும்.

ஐட்டம் பயன்முறைக்குத் திரும்ப, ஸ்கேனர் மெனுவைத் திறந்து, ஐட்டம் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

“கண் நகர்வு” அம்சத்தை அமைத்தல்

உங்கள் கண்விழியை நகர்த்தி, திரையில் உள்ள கர்சரை நீங்கள் கட்டுப்படுத்தலாம். நீங்கள் கண்வழிக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலமும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பார்வையை ஒரே இடத்தில் வைத்திருந்து நீங்கள் செயல்களை மேற்கொள்ளலாம்.

“கண் நகர்வு” அம்சத்தை அமைக்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:

  • அமைப்புகள்  > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > ஸ்விட்ச்கள் என்பதற்குச் சென்று, ஸ்விட்ச்களை அமைத்துள்ளதை உறுதிசெய்யவும்.

  • அமைப்புகள் > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுபாடு > கண் நகர்வு என்பதற்குச் சென்று “முக வழிகாட்டி” என்பதை ஆன் செய்யவும்.

  • அமைப்புகள் > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுபாடு > கண் நகர்வு > கண்வழிக் கட்டுப்பாடு என்பதற்குச் சென்று, ஸ்விட்ச் செயல்பாட்டைத் தேர்வுசெய்து இந்த டுவெல் விருப்பங்களில் ஒன்றை அமைக்கவும்:

    • டுவெல் நேர முடிவு: “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன்-ஐத் தட்டவும்.

    • நகரக்கூடிய தூரம்: ஒரு ஐட்டத்தின் மீது கர்சரை நகர்த்தாமல் வைத்திருக்கும்போது நீங்கள் நகர்த்தக்கூடிய தூரத்தை அமைக்க, ஸ்லைடரை இழுக்கவும்.

“கண் நகர்வு” அம்சத்தைப் பயன்படுத்துதல்

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அமைப்புகள்  > அணுகல்தன்மை > ஸ்விட்ச் கட்டுப்பாடு > “ஸ்விட்ச் கட்டுப்பாடு” பயன்முறைக்குச் சென்று, “கண் நகர்வு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    • ஐட்டம் பயன்முறையைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு “கண் நகர்வு” அம்சத்தை (ஸ்கேனர் மெனுவில் இருந்து) தேர்வுசெய்யவும்.

      குறிப்பு: ஸ்விட்ச் கட்டுப்பாடு ஆன் செய்யப்பட்டிருக்கும்போது “ஸ்விட்ச் கட்டுப்பாடு” பயன்முறை அமைப்புகளை நீங்கள் மாற்றினால், மாற்றங்களைச் செயல்படுத்த ஸ்விட்ச் கட்டுப்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும்.

  2. கர்சரை நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்க உங்கள் கண்விழிகளை நகர்த்துங்கள். பிறகு “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்ச்சைப் பயன்படுத்தி அதைச் செயல்படுத்தவும்.

  3. ஸ்கேனர் மெனுவில், நீங்கள் விரும்பும் செயலைத் தேர்ந்தெடுத்து, “ஐட்டத்தைத் தேர்ந்தெடு” ஸ்விட்சைச் செயல்படுத்தவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.