இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் Siri உடன் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்

Siri என்பது அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் உங்களுக்கு உதவும் வகையில் iPadஇல் உள்ளமைக்கப்பட்டுள்ள ஓர் அறிவார்ந்த உதவியாளர் ஆகும். Apple Intelligence* அம்சத்தினால் Siri புதிய வடிவமைப்புடன் இன்னும் இயல்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. Siri செயல்படுத்தப்பட்டிருக்கும்போது, Siri தேடல் புலம் காட்டப்படும். நீங்கள் அதை மூடும் வரை அப்படியே இருக்கும், எனவே நீங்கள் Siri உடன் பேசும்போதும் உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யலாம்.

கோரிக்கை விடுக்கும்போது உங்கள் வார்த்தைகள் தடுமாறினாலும் Siri அதைத் தொடர்ந்து கவனிக்கும். எடுத்துக்காட்டாக, “Siri, set an alarm—wait no, sorry, I meant a timer for 10 minutes—actually, let’s make that 15” என்று சொன்னாலும் கூட, Siri நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு 15 நிமிடங்களுக்கான டைமரைத் தொடங்கும்.

Siriஇல் உங்கள் குரலைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், டைப் செய்தும் கோரிக்கைகளை விடுக்கலாம். Apple தயாரிப்புகள் பற்றிய கேள்விகளுக்கான பதில்களைப் பெற, Siriஇன் தயாரிப்பு அறிவையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் நீங்கள் அனுமதித்தால், ChatGPT உதவியுடன் இன்னும் கூடுதலான திறன்களை Siri பெற முடியும். Apple Intelligence உடன் ChatGPTஐப் பயன்படுத்துதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

iPadஇன் குறிப்புகள் செயலியில் ஒரு குறிப்பும், உரையைப் பெரிதாக மாற்றுவதற்கான படிநிலைகளை Siri வழங்குவதும் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும். உங்கள் மொழி, நாடு மற்றும் வட்டாரத்தைப் பொறுத்து Siri கிடைக்கும் தன்மை மற்றும் அம்சங்கள் மாறுபடும். கூடுதல் தகவல்களுக்கு, iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.

Siriஇல் டைப் செய்தல்

iPadஇன் பூட்டுத் திரையில் கீபோர்டு காட்டப்பட்டுள்ளது. கீபோர்டின் மேலே Siri கோரிக்கை காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் சத்தமாகப் பேச விரும்பாத சூழ்நிலைகளில், எடுத்துக்காட்டாக, சந்திப்பு, நூலகம் போன்ற அமைதியைப் பராமரிக்க வேண்டிய சூழலில் இருக்கும்போது, உங்கள் கோரிக்கைகளை Siriஇல் டைப் செய்யலாம்.

Siriஇல் விரைவாக டைப் செய்ய, திரையின் கீழ்ப்பகுதியில் இருமுறை தட்டி, உங்கள் கோரிக்கையை உள்ளிடவும்.

Apple Intelligence அம்சம் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலோ உங்கள் மொழி அல்லது வட்டாரத்தில் கிடைக்கவில்லை என்றாலோ கூட, அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுவதன் மூலம் Siriஇடம் டைப் செய்து நீங்கள் உரையாடலாம். Siri அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

சூழலைப் பின்பற்றி Siriக்குக் கோரிக்கைகள் விடுத்தல்

Apple Intelligence மூலம் உங்கள் முந்தைய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் முன்பு கூறியவற்றின் சூழலைப் பின்பற்றி Siriக்கு நீங்கள் கோரிக்கைகளை விடுக்கலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் பின்வருவதைப் போன்று எதையேனும் சொல்லலாம் அல்லது டைப் செய்யலாம்: “How are the San Francisco Giants doing this season?” பிறகு, “When are they playing next?” என்று சொல்லலாம். இறுதியில்: “Add that to my calendar.”

  1. Siriஐச் செயல்படுத்தி, கோரிக்கை விடுக்கவும்.

  2. கோரிக்கை செய்த உடனே மற்றும் ஒரு கோரிக்கையைச் சொல்லவும்.

Apple தயாரிப்புகள் பற்றிய கேள்விகளை Siriஇடம் கேட்டல்

உங்கள் iPad மற்றும் iPhone, Mac, Apple TV 4K, Apple Watch, AirPods, HomePod போன்ற பிற Apple தயாரிப்புகள் பற்றிய கேள்விகளுக்கான பதில்களைப் பெற, Siriஇன் தயாரிப்பு அறிவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Siriஐச் செயல்படுத்தவும், பின்னர் ஆதரிக்கப்படும் மொழியில் பின்வருவனவற்றைச் சொல்லவும் அல்லது டைப் செய்யவும்:

  • “How do I take a screenshot on my iPad?”

  • “How do I unlock an iPad?”

  • “How do I download podcasts on iPad?”

  • “How do I FaceTime on iPad?”

  • “How do I screen record on iPad?”

  • “How do I turn off my iPad?”

  • “How do I play sound from my TV through HomePod?”

  • “How do I fix a photo if I caught someone blinking?”

  • “How do I use Apple Pencil on iPad?”

குறிப்பு: Apple Intelligence மற்றும் தனியுரிமை பற்றி மேலும் அறிய, Apple Intelligence மற்றும் தனியுரிமை என்பதைப் பார்க்கவும். தனியுரிமை மற்றும் Siri பற்றி மேலும் அறிய, Siri, டிக்டேஷன் & தனியுரிமை என்பதைப் பார்க்கவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.