iPadஇல் Safari உலாவியில் உள்ள சைடுபாரில் பல தாவல்களில் பணிபுரிதல்

நீங்கள் சைடுபாரில் ஒரே நேரத்தில் பல தாவல்களில் பணிபுரியலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரைத் திறக்க “சைடுபாரைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டி, சைடுபாரில் உள்ள ஒரு தாவலைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. “தாவல்களைத் தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் பணிபுரிய விரும்பும் தாவல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. தேர்ந்தெடுத்த தாவல்களில் ஒன்றைத் தொட்டுப் பிடித்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தாவல்களை நகலெடுத்து வேறொரு இடத்தில் ஒட்டுதல்: “[x] இணைப்புகளை நகலெடு” என்பதைத் தட்டவும்.

    • தாவல்களை அதே இடத்தில் பிரதியெடுத்தல்: “[x] தாவல்களைப் பிரதியெடு” என்பதைத் தட்டவும்.

    • தாவல்களை வேறொரு சாளரத்திற்கு நகர்த்துதல்: “[x] தாவல்களைப் புதிய சாளரத்திக்கு நகர்த்து” என்பதைத் தட்டவும்.

    • தாவல்களைத் தாவல் குழுவிற்கு நகர்த்துதல்: “தாவல் குழுவிற்கு நகர்த்து” என்பதைத் தட்டி “தாவல் குழு” என்பதைத் தட்டவும்.

    • தாவல்களை மூடுதல்: “[x] தாவல்களை மூடுக” என்பதைத் தட்டவும்.

  5. “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.