இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் FaceTime அழைப்புகளைப் பெறுதல்

FaceTime செயலியில், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம், அழைப்புகளை நிராகரிக்கலாம், வீடியோ மெசேஜ்களைப் பார்க்கலாம் அல்லது வாயிஸ்மெயில்களைக் கேட்கலாம், அழைப்பு வரலாற்றில் இருந்து அழைப்புகளை நீக்கலாம்.

குறிப்பு: நேரலை வாய்ஸ்மெயில் அம்சம் சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும் தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

FaceTime அழைப்புக்குப் பதிலளித்தல்

FaceTime அழைப்பு வரும்போது, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

  • அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்: வீடியோ அழைப்புக்குப் பதிலளிக்க, “வீடியோ” பட்டன்-ஐத் தட்டி "இணை" என்பதைத் தட்டவும். ஆடியோ அழைப்புக்குப் பதிலளிக்க, ஆடியோ பட்டன்-ஐத் தட்டவும்.

    ஸ்லைடர் தோன்றினால், பதிலளிக்க அதை வலதுபுறமாக இழுக்கலாம்.

  • அழைப்பை நிராகரித்தல்: வீடியோ அழைப்பைச் செய்ய “வீடியோ அழைப்பை நிராகரி” பட்டன்-ஐத் தட்டவும் அல்லது ஆடியோ அழைப்பைச் செய்ய “வீடியோ அழைப்பை நிராகரி” பட்டன்-ஐத் தட்டவும்.

    FaceTime ஆடியோ அழைப்புகளுக்கு, உரை வடிவில் மெசேஜ் அனுப்ப “மெசேஜை அனுப்பு” என்பதைத் தட்டவும் அல்லது அழைப்பாளருக்கு வாய்ஸ்மெயில் அனுப்ப “வாய்ஸ்மெயில்” என்பதைத் தட்டவும். (இந்த விருப்பங்களைப் பார்க்க, பெறப்படும் அழைப்பு பேனரைத் தட்ட வேண்டியிருக்கும்.)

  • தற்போதைய அழைப்பை ஹோல்டில் வைத்தல்: “ஹோல்டில் வைத்து ஏற்கவும்” என்பதைத் தட்டவும்

    குறிப்பு: நீங்கள் FaceTime ஆடியோ அழைப்பில் இருக்கும்போது மற்றொரு FaceTime ஆடியோ அழைப்பைப் பெற்றால் மட்டுமே இந்த விருப்பத்தேர்வு கிடைக்கும். இல்லையெனில், பெறப்படும் அழைப்புக்குப் பதிலளிக்க, தற்போதைய அழைப்பை முடித்துவிட்டு பதிலளிக்க “முடித்துவிட்டு ஏற்கவும்” என்பதைத் தட்டலாம்.

உதவிக்குறிப்பு: Siri உள்வரும் அழைப்புகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும், அதை குரலைப் பயன்படுத்தி நீங்கள் ஏற்கலாம், நிராகரிக்கலாம்.

வீடியோ மெசேஜைப் பார்த்தல் அல்லது வாயிஸ்மெயிலைக் கேட்டல்

உங்களுக்கு வரும் வீடியோ அழைப்பைத் தவறவிடும் பட்சத்தில், அந்த அழைப்பாளர் வீடியோ மெசேஜை அனுப்பியிருந்தால், அந்த வீடியோ மெசேஜைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவீர்கள். அந்த வீடியோவின் சிறுபடம் உங்கள் FaceTime அழைப்பு வரலாற்றிலும் காட்டப்படும். அந்த அறிவிப்பு அல்லது படத்தைத் தட்டி வீடியோ மெசேஜைப் பார்க்கலாம்.

குறிப்பு: சேமிக்கப்பட்ட தொடர்புகள், நீங்கள் அழைத்த நபர்கள், Siri பரிந்துரைத்த நபர்கள் ஆகியோரிடமிருந்து மட்டுமே நீங்கள் வீடியோ மெசேஜ்களைப் பெற முடியும்.

உங்களுக்கு வரும் ஆடியோ அழைப்பை நீங்கள் தவறவிடும் பட்சத்தில், FaceTimeஐப் பயன்படுத்த iPadஇல் உள்நுழைந்துள்ள அதே Apple கணக்கு மூலம் iPhoneஇல் நீங்கள் உள்நுழைந்திருந்து, அதில் அமைப்புகள்  > செயலிகள் > ஃபோன் என்பதில் "நேரலை வாய்ஸ்மெயில்" என்பதை ஆன் செய்திருந்தால், அழைப்பாளர் உங்களுக்கு வாய்ஸ்மெயில் அனுப்பலாம்.

குழு FaceTime அழைப்பு, ஆடியோ அழைப்பு, வீடியோ அழைப்பு, ஆடியோ மெசேஜ், FaceTime அழைப்பிற்கான இணைப்பு ஆகியவற்றை FaceTime அழைப்பு வரலாறு காட்டுகிறது.

உங்கள் அழைப்பு வரலாற்றிலிருந்து அழைப்பை நீக்குதல்

  1. iPadஇல் FaceTime  செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் அழைப்பு வரலாற்றில் அழைப்பைத் தொட்டுப் பிடித்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: ஒரு குறிப்பிட்ட தொடர்பிடமிருந்து வந்த வீடியோ மெசேஜ்கள் அல்லது வாயிஸ்மெயில்கள் அனைத்தையும் விரைவாக அணுக, அழைப்பு வரலாற்றில் அவரின் பெயரைத் தட்டி, “வாயிஸ்மெயில்கள்” அல்லது “வீடியோக்கள்” பட்டனைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.