இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டை மாற்றுதல்

உங்கள் iPadஇல் இணையதளம் அல்லது செயலியில் உள்நுழையப் பயன்படுத்தும் பாஸ்வேர்டை மாற்றலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “அனைத்தும்” என்பதைத் தட்டி, இணையதளம் அல்லது செயலியின் கணக்கைக் கண்டறியவும்.

  3. கணக்கைத் தட்டவும்.

  4. “திருத்து” என்பதைத் தட்டி “பாஸ்வேர்டை மாற்று” என்பதைத் தட்டிய பிறகு, இணையதளம் அல்லது செயலியில் உங்கள் பாஸ்வேர்டை மாற்றவும்.

    Apple மூலம் உள்நுழைதல் அம்சத்துக்கு மேம்படுத்த, இணையதளம் அல்லது செயலி உங்களை அனுமதித்தால், அந்த அம்சத்தின் பாதுகாப்பு மற்றும் வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பாஸ்வேர்டை மாற்றும்போது மேம்படுத்துதல் விருப்பம் உங்களுக்கு வழங்கப்படவில்லை எனில், நீங்கள் நினைவில் வைத்திருக்க அவசியமில்லாத வகையில் வலுவான பாஸ்வேர்டைத் தானாக உருவாக்க, பல கணக்குகள் iPadஐ அனுமதிக்கின்றன.

குறிப்பு: இணையதளம் அல்லது செயலிக்கான பாஸ்வேர்டு இனி கிடைக்காது என்ற எச்சரிக்கையை iPadஇல் நீங்கள் பெற்றால், iPad மற்றும் iCloud கீசெயினில் இருந்து அதன் கணக்கை நீங்கள் அகற்றலாம். உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் சென்று, “அனைத்தும்” என்பதைத் தட்டி, கணக்கில் இடதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.