iPadஇல் பேமெண்ட் தகவல்களை நிரப்புதல்

Apple வாலெட்டில் சேமித்துள்ள உங்கள் கார்டு மற்றும் விர்ச்சுவல் கார்டு எண்கள் மூலம், தானாக நிரப்புதல் அம்சத்தினைப் பயன்படுத்தி, Apple Pay கிடைக்காத சமயத்தில் செயலிகளில் மற்றும் ஆன்லைனில் பேமெண்ட் தகவல்களைத் தானாக நிரப்பலாம். நீங்கள் சேமித்த பேமெண்ட் முறைகளை நிர்வகிக்க தானாக நிரப்புதல் கார்டுகளைச் சேர்க்கலாம் திருத்தலாம் அகற்றலாம்.

உங்கள் தானாக நிரப்புதல் கார்டுகள் iCloud கீசெயினில் சேமிக்கப்படும். நீங்கள் ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழைந்துள்ள பிற சாதனங்களில் அவற்றை அணுகலாம்.

Apple வாலெட்டில் கார்டு எண்ணைச் சேமித்தல்

உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு Apple Payஐ ஆதரிக்கவில்லை என்றாலும், நீங்கள் கார்டு எண்ணை Apple வாலெட்டில் சேர்க்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “வாலெட் & Apple Pay” என்பதைத் தட்டி, “தானாக நிரப்புதல் கார்டுகள்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் அங்கீகரித்து, “கார்டைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் கார்டை ஃபிரேமிற்குள் இருக்கும் வகையில் வைத்து தகவலை ஸ்கேன் செய்யவும் அல்லது கார்டு விவரங்களை நேரடியாக உள்ளிடவும்.

தானாக நிரப்புதல் கார்டுகளைப் புதுப்பித்தல் அல்லது அகற்றுதல்

நீங்கள் பேமெண்ட் தகவலைத் திருத்தலாம் அல்லது நீக்கலாம் மற்றும் உங்கள் தானாக நிரப்புதல் கார்டுகளை நிர்வகிக்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “வாலெட் & Apple Pay” என்பதைத் தட்டி, “தானாக நிரப்புதல் கார்டுகள்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் அங்கீகரித்து, விவரங்களைப் பார்க்க கார்டைத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • கார்டு தகவலைப் புதுப்பிக்க: “திருத்து” என்பதைத் தட்டவும்.

    • கார்டு தகவலை நீக்க: “தானாக நிரப்புதலில் இருந்து அகற்று” என்பதைத் தட்டவும்.

      குறிப்பு: தானாக நிரப்புதலில் இருந்து ஒரு கார்டை அகற்றினால், அந்த கார்டு Apple Payஇல் இருந்து அகற்றப்படாது.

விர்ச்சுவல் கார்டு எண்ணைப் பார்த்தல்

Apple Pay கிடைக்காத செயலிகள் அல்லது இணையதளங்களில் ஷாப்பிங் செய்யும்போது மோசடியைத் தவிர்ப்பதற்கு, உங்கள் உண்மையான கார்டு எண்ணை மறைத்து விர்ச்சுவல் கார்டு எண்ணைப் பயன்படுத்தலாம் (ஆதரிக்கப்படும் கார்டுகளுக்கு மட்டும் கிடைக்கும்).

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “வாலெட் & Apple Pay” என்பதைத் தட்டி, ஆதரிக்கப்படும் கார்டைத் தட்டவும் (எ.கா. Apple Cash, Apple Card).

  3. “கார்டு தகவல்கள்” என்பதைத் தட்டி, Face ID, Touch ID அல்லது உங்கள் பாஸ்கோடு மூலம் அங்கீகரிக்கவும்.

  4. விர்ச்சுவல் கார்டு எண்ணைத் தட்டி நகலெடுக்கவும்.

செக்-அவுட்டின்போது உங்கள் பேமெண்ட் தகவலை நிரப்புதல்

Apple Pay கிடைக்காத சமயத்தில், Apple வாலெட்டில் சேமிக்கப்பட்டுள்ள கார்டு எண், காலாவதி தேதி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட “தானாக நிரப்புதல்” அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். புதிய கார்டில் உள்ள தகவல்களை ஸ்கேன் செய்ய iPad கேமராவை நீங்கள் பயன்படுத்தலாம்.

  1. செக்-அவுட்டின்போது, கார்டு எண் புலத்தைத் தட்டவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • Apple வாலெட்டில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு கார்டைத் தேர்வுசெய்யவும்: திரையில் உள்ள கீபோர்டுக்கு மேலே ஒரு பேமெண்ட் கார்டைத் தட்டவும்.

    • புதிய கார்டைப் பயன்படுத்துதல்: “கார்டை ஸ்கேன் செய்” என்பதைத் தட்டி, ஃபிரேமுக்குள் இருக்கும்படி உங்கள் கார்டை வைக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.